/indian-express-tamil/media/media_files/2025/12/06/trichy-sdpi-protests-babri-masjid-demolition-day-tamil-news-2025-12-06-20-19-25.jpg)
"பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்றவை சேர்த்து இடிக்கப்பட்டுள்ளது, இதனை பாசிசத்தின் நாளாகவே நாங்கள் கடைபிடித்து வருகிறோம்." என்று தெரிவித்தனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில் அரசமைப்பு சட்ட முகவுரையை கையில் ஏந்தியும், வக்பு மற்றும் வழிபாட்டு உரிமைகளை காக்க வலியுறுத்தியும் மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் தெற்கு மாவட்ட தலைவர் கே.தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகம்மது சித்திக் வரவேற்புரையாற்றினார்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.ஏ.கே. அப்துல் கரீம் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார். ஆயிரக்கணக்கானோர் மத்தியில் கண்டன உரையாற்றி அப்துல் கரீம் பேசியதாவது; இடித்தவனுக்கு தண்டனை வழங்கு, இழந்தவனுக்கு நீதி வழங்கு என்ற முழக்கத்துடனும், பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று பாசிச எதிர்ப்பு நாளாக அனுசரித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டமானது பாலக்கரை ரவுண்டானாவில் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
/indian-express-tamil/media/post_attachments/ea56fe04-d68.jpg)
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்றவை சேர்த்து இடிக்கப்பட்டுள்ளது, இதனை பாசிசத்தின் நாளாகவே நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இந்திய அரசு அளித்த வழிபாட்டு உரிமையை பறிப்பதற்கு எந்த அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அதிகாரம் கிடையாது, எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டத்தை தொடருகின்றோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சில அமைப்புகள் சேர்ந்து மத பதட்டத்தை உருவாக்குகிறார்கள், அதனை கூடாது என்கிறோம். கீழே கந்தர் மேலே சிக்கந்தர் என்று திருப்பரங்குன்றம் மக்கள் சொல்கிறார்கள், இதுதான் அந்தமக்களின் இயல்பு சில சங் பரிவார் அமைப்புகள் ஒன்று சேர்ந்து மடைமாற்ற பார்க்கிறார்கள், அதனை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசின் செயல்பாடுகளை வரவேற்கின்றோம் என மாநில பொதுச் செயலாளர் அப்துல்கரீம் கண்டன உரையாற்றினார்.
/indian-express-tamil/media/post_attachments/89faf070-536.jpg)
மேலும், விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில செயலாளர் ஆலிமா மெஹராஜ் பானு, திருச்சி மாநகர ஜமாத்துல் உலமா சபை செயலாளர் இமாம் அப்துல் ரஹீம் மன்பஈ மற்றும் கத்தோலிக்க பொது நிலையினர் பேரவை தலைவர் ஆசிரியர் வேளாங்கண்ணி ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் திருவரம்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகமது மற்றும் மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, ஶ்ரீரங்கம் தொகுதி துணைத் தலைவர் திப்பு சுல்தான், ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் அப்பாஸ் தொகுத்து வழங்கினார்.
/indian-express-tamil/media/post_attachments/c9887eaa-2fa.jpg)
இந்நிகழ்வில் எஸ்.டி.டி.யு மாநில செயலாளர் முகம்மது ரபீக், மாவட்ட துணைத் தலைவர் ரஹீம், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி, மாவட்ட செயலாளர்கள் மதர் ஜமால் முஹம்மது, பொறியாளர் சதாம் உசேன், மாவட்ட பொருளாளர் பிச்சை கனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட்.மஜீத், சிராஜ், திருச்சி ஜாகீர் உசேன், முஹம்மது சலீம், ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசர், மணப்பாறை தொகுதி தலைவர் உமர், மாவட்ட ஊடக அணி தலைவர் உபைதுர் ரஹ்மான், எஸ்.டி.டி.யு தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா,மாவட்ட செயலாளர் சர்க்கரை மீரான், கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் கே எம் எஸ் ஹக்கீம், மருத்துவ அணி தலைவர் டாக்டர் இக்பால், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் டாக்டர் பக்ருதீன் மற்றும் நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள்,பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பெருந்திரளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா நன்றியுரை ஆற்றினார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் ஒரே இடத்தில் திரண்டதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாலக்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்.
6 12 2025
source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-sdpi-protests-babri-masjid-demolition-day-tamil-news-10887956





