சனி, 2 ஆகஸ்ட், 2025

சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரும் வழக்கு – செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 

1 8 25

டாக்டர் கே.ஏ. பால் என்பவர் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட செயலிகளையும் தடை செய்யகோரி பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் கே.ஏ.பால் தரப்பானது, சூதாட்ட செயலிகள் 30 கோடி இளைஞர் சமுதாயத்துக்கு சவாலாக உள்ளன. மேலும், சூதாட்ட செயலிகளால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சூதாட்ட செயலி விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று வாதிட்டது. மேலும், சூதாட்ட செயலிகளுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டியது.

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பதிலளிக்க, மாநில அரசுகள் மற்றும் செயலி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


source https://news7tamil.live/case-seeking-ban-on-gambling-apps-supreme-court-orders-app-companies-to-respond.html