புதிய 'SIMPLE' சட்டம் என்ன சொல்கிறது? 11 08 2025
/indian-express-tamil/media/media_files/2025/03/25/9bFEU3XhAE6ShtT0LuhU.jpg)
மக்களவையில் நிறைவேறிய புதிய வருமான வரி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?
வருமான வரி தொடர்பான 2 முக்கிய சட்ட மசோதாக்கள், எதிர்க்கட்சி விவாதமும் இல்லாமல் மக்களவையில் நேற்று நிறைவேறியது. அதில், வருமான வரி (எண் 2) மசோதா 2025 முக்கியத்துவம் வாய்ந்தது. இது, 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை ஒருங்கிணைத்து திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த மசோதா இனி மாநிலங்களவை ஒப்புதலுக்காகவும், அதன்பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்ததும், இது சட்டமாக அமலுக்கு வரும்.
வருமான வரிச் சட்டம், 1961-க்கு பதிலாக புதிய மசோதா
புதிய வருமான வரி (எண் 2) மசோதா 2025, ஏற்கனவே உள்ள 1961-ஆம் ஆண்டு சட்டத்திற்கு மாற்றாக அமையும். இந்த மசோதா எளிமையான மற்றும் தெளிவான வரி விதிப்பு முறையை உருவாக்குவதன் மூலம், தொழில் செய்வதை எளிதாக்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என பிப்ரவரி மாதம் நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. புதிய மசோதாவின் முக்கிய நோக்கம், வரி அமைப்பை எளிமையாக்குவதாகும். இது “SIMPLE” என்ற 5 முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை 50% எளிதாக்குகிறது.
S - Streamlined structure and language: எளிதாக்கப்பட்ட அமைப்பு மற்றும் மொழி.
I - Integrated and Concise: ஒருங்கிணைந்த மற்றும் சுருக்கமான உள்ளடக்கம்.
M - Minimized Litigation: வரித் தகராறுகளைக் குறைத்தல்.
P - Practical and Transparent: நடைமுறைக்கு உகந்த மற்றும் வெளிப்படையான தன்மை.
L - Learn and Adapt: எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மற்றும் மாற்றங்களுக்கு ஏற்றது.
E - Efficient Tax Reforms: திறன்மிக்க வரிச் சீர்திருத்தங்கள்.
புதிய மசோதாவின் சிறப்பம்சங்கள்
வரிச் சட்டங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், தெளிவான மொழியில் மீண்டும் எழுதப்படும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs), வழிகாட்டுதல் குறிப்புகள் ஆகியவை மூலம் வரித் தகராறுகளைக் குறைப்பது நோக்கம். குழப்பத்தைத் தவிர்க்க, தேவையற்ற விதிகள் நீக்கப்பட்டு, அட்டவணைகள் மற்றும் அமைப்புரீதியான வடிவங்கள் பயன்படுத்தப்படும். உலகெங்கிலும் உள்ள சர்வதேச சிறந்த வரி விதிப்பு நடைமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
புதிய மசோதாவில், 1961-ஆம் ஆண்டு சட்டத்தில் இருந்த சில முக்கிய விதிகள் தொடரப்பட்டுள்ளன. வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாதவர்களும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் TDS தொகையைத் திரும்பப் பெறலாம். மதம் மற்றும் தொண்டு ஆகிய 2 நோக்கங்களைக் கொண்ட அறக்கட்டளைகளுக்கு, அநாமதேய நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிப்பது மீண்டும் தொடரப்பட்டு உள்ளது. லாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான வரி, 'வருமானத்தின்' அடிப்படையில் வரி விதிக்கும் முறை மீண்டும் பின்பற்றப்படுகிறது.
புதிய மற்றும் திருத்தப்பட்ட விதிகள்:
ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் பெறும் நிபுணர்களும் மின்னணுப் பணம் செலுத்தும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்வது மற்றும் கழித்துக்கொள்வது தொடர்பான விதிகள் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. TDS திருத்த அறிக்கைக்கான கால அவகாசம் 6 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
அநாமதேய நன்கொடை, முற்றிலும் மத நோக்கங்களுக்காக இயங்கும் அறக்கட்டளைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். மதம் மற்றும் தொண்டு ஆகிய இரு நோக்கங்களுக்காக இயங்கும் அறக்கட்டளைகளுக்கும் விலக்கு அளிக்கப்படும். ஒரே சீரான ஓய்வூதியத் திட்டம் (UPS), இந்தத் திட்டத்திற்கான வரி விலக்கு சேர்க்கப்பட்டுள்ளது. வருமான வரி சோதனை வழக்குகள், பிளாக் அசெஸ்மென்ட் தொடர்பான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியங்கள், இந்த நிதிகளுக்கு நேரடி வரிச் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட பழைய முன்மொழிவுகள்:
பிப்ரவரி மாதம் வெளியான அசல் மசோதாவில் இருந்து சில முன்மொழிவுகள் பின்வாங்கப்பட்டு, 1961-ஆம் ஆண்டு சட்டத்தின் விதிகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. மதம் மற்றும் தொண்டு நோக்கங்கள் கொண்ட அறக்கட்டளைகளுக்கு அநாமதேய நன்கொடைகள் மீது விலக்கு நீக்கம், இந்த முன்மொழிவு கைவிடப்பட்டு, விலக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது. TDS தொகையைப் பெற, உரிய காலத்திற்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இது நீக்கப்பட்டுவிட்டது. லாப நோக்கற்ற நிறுவனங்களின் 'வருமானத்துக்குப்' பதிலாக 'ரசீதுகளுக்கு' வரி விதித்தல், இதுவும் மாற்றப்பட்டு, மீண்டும் வருமானத்துக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்.