வியாழன், 7 ஆகஸ்ட், 2025

இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டிய தமிழ்நாடு

 இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டிய தமிழ்நாடு 

6 8 2025

பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற இலக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்கே ஆண்ட்களில் சாதித்துக் காட்டியிருக்கிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்று கூறியதை நான்கே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் 7 அம்ச உறுதிமொழிகளை வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில் முதல் அம்சம், பொருளாதாரம். “வளரும் வாய்ப்புகள்-வளமான தமிழ்நாடு அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதாரத்தை எட்டுவது முதல் இலக்கு” என்று உறுதியளித்தார்.

அவரது வாக்குறுதியை நம்பி வாக்களித்து தன்னை முதலமைச்சராக்கிய மக்களுக்காக ஓயாது உழைத்து, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடைய வைத்து, தான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றியுள்ளார்” என்று டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், “திருச்சி சிறுகனூரில் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் உறுதியளித்த நாள் 2021 மார்ச் 7. தமிழ்நாடு 11.29% என்ற இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டியிருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை அறிவித்துள்ள நாள் 2025 ஆகஸ்ட் 5. பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற இலக்கை முதலமைச்சர் நான்கே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஆகையால்தான் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-trb-raja-praise-cm-mk-stalin-for-tamil-nadu-achieves-double-digit-economy-within-four-years-9634188