ஞாயிறு, 1 நவம்பர், 2026

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 2 நாள் டூர் பேக்கேஜ்;

 tour

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சார்பில் மாணவர்களுக்காக பிரத்யேக கல்விச் சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் தலங்களை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு அனுபவக் கல்வி பெறலாம். இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு ரூ. 6,400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

இதில் குறிப்பிட்ட இடத்தை உங்களுக்கு விளக்கி கூறும் வழிகாட்டி, தங்கும் இடம், உணவு ஆகியவை அடங்கும். சென்னையில் இருந்து தொடங்கும் இந்த சுற்றுலாவில் முதல் நாள் முழுவதும் மதுரையை சுற்றி பார்ப்பதற்காக செலவிடப்பட உள்ளது. இதில், கீழடி அகழ்வாராய்ச்சி, திருமலை நாயக்கர் மஹால், காந்தி நினைவு மியூசியம் ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம்.


இரண்டாவது நாள் மாணவர்கள் திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியத்தை பார்வையிடுவதன் மூலம் சுற்றுலா நிறைவடைகிறது. சுற்றுலாவில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் ttdcbooking.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.