ஞாயிறு, 31 மே, 2026

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது தமிழக அரசு

 

Govt arts and science college admission Tamil Nadu govt college admission

Govt arts and science college admission | Tamil Nadu govt college admission

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 29-ஆம் தேதியுடன் முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முடிவடைந்த நிலையில், இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 159 பாடப்பிரிவுகளில், நடப்பு கல்வி ஆண்டில் (2026-2027) மொத்தம் 1,26,959 இடங்கள் உள்ளன. கடந்த மே 7-ஆம் தேதி முதல் தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் நலன் கருதி, உயர்கல்வித்துறை இந்த அவகாச நீட்டிப்பை அறிவித்துள்ளது. இதன்படி, மாணவர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்களுக்கு உதவும் வகையில், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் (AFCs) அமைக்கப்பட்டு, அதன் மூலமும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல், சேர்க்கை கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.



source https://tamil.indianexpress.com/education-jobs/govt-arts-and-science-college-admission-tamil-nadu-govt-college-admission-11890113

சனி, 30 மே, 2026

தமிழகத்தின் 3 இடங்களில் என்.ஐ.ஏ ரெய்டு

 

Trichy NIA Raid

திருச்சியில் 19 பேரை பலிவாங்கிய வெடிமருந்து தொழிற்சாலையில் விடிய விடிய என்.ஐ.ஏ சோதனை

கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்கு தொடர்பாக, கொச்சின் மண்டல தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் திருச்சி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, திருச்சி துறையூர் அருகே கடந்த 2016-ல் 19 தொழிலாளர்களைப் பலிவாங்கிய தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் இந்த சோதனை நடைபெற்று வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டியில், கடந்த 2001-ம் ஆண்டு 'வெற்றி வேல் எக்ஸ்புளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட்' (Vetrivel Explosives Pvt Ltd) என்ற வெடிமருந்து தொழிற்சாலை தொடங்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த ஆலையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் வெடிமருந்துகள் மற்றும் உயரிய பட்டாசு வகைகள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலையின் இரண்டாவது யூனிட்டில், ஹைட்ரோகுளோரிக் ஆசிட், பென்டா எரித்ரோட்ரல் மற்றும் மெட்டா நைட்ரேட் பவுடர் ஆகியவற்றைச் சாம்பலுடன் சேர்த்து வெடிமருந்து தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியின் போது உருவாகும் பசை போன்ற கலவை குழாய் வழியாக மற்றொரு யூனிட்டுக்குக் கொண்டு செல்லப்படும். அப்போது அதன் உறை வெப்பநிலை (Freezing Temperature) சரியாக 24°C அளவில் பராமரிக்கப்பட வேண்டும்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி, இந்த வெப்பநிலைப் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக ஆலை பயங்கர வெடி விபத்துக்கு உள்ளானது. இதில் 19 தொழிலாளர்கள் உடல் சிதறிப் பரிதாபமாகப் பலியாயினர். இந்த வழக்கு உள்ளூர் போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு (CB-CID) மாற்றப்பட்டு, மத்திய அரசின் வெடிபொருள் விவகாரத்துறை ஆலையின் உரிமத்தை ரத்து செய்தது. அதன் பின்னர் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த இந்த ஆலை, காலப்போக்கில் மீண்டும் திறக்கப்பட்டுத் தற்போது இயங்கி வருகிறது.

மீண்டும் ஆலை செயல்படத் தொடங்கிய நிலையில், இங்கிருந்து விநியோகிக்கப்படும் வெடிமருந்துகள் சட்டவிரோத மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்குச் சப்ளை செய்யப்படுவதாகப் பல்வேறு அதிர்ச்சிப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகக் கேரளாவின் கொச்சின் மண்டல என்.ஐ.ஏ பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடிவுசெய்தனர். தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணியளவில் 5 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர், திருச்சி ஆயுதப்படை போலீசாருடன் ஆலைக்கு விரைந்தனர்.

அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும் தொழிற்சாலையின் அனைத்து நுழைவு வாயில்களும் முழுமையாக மூடப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆலையின் ஒவ்வொரு யூனிட்டாகச் சென்று வெடிமருந்துகள் இருப்பு, கையாளப்படும் விதம் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் கீழ்வரும் விபரங்கள் குறித்து ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது:

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இங்கிருந்து அனுப்பப்படும் வெடிமருந்துகள் ஏதேனும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதா? வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் ஹைட்ரோகுளோரிக் ஆசிட், பென்டா எரித்ரோட்ரல், மெட்டா நைட்ரேட் பவுடர் போன்றவை எங்கிருந்து வாங்கப்படுகின்றன? அதற்கான உரிமங்கள் முறையாகப் புதுப்பிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறதா? மத்திய அரசு அனுமதித்துள்ள அளவைவிடக் கூடுதலாக மூலப்பொருட்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளனவா? என விருதுநகர் மற்றும் திருச்சியின் முக்கிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று என்.ஐ.ஏ சோதனை, தமிழக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/nia-conducts-raids-across-tamil-nadu-search-underway-at-trichy-private-explosives-factory-nia-team-raids-vetrivel-explosives-factory-in-trichy-11890099

உலகளவில் அதிக வெள்ளி உற்பத்தி செய்யும் டாப் நாடுகள்

 உலகளவில் அதிக வெள்ளி உற்பத்தி செய்யும் டாப் நாடுகள் 

மெக்சிகோ - 2024-ஆம் ஆண்டு 6,300 மெட்ரிக் டன் வெள்ளியை உற்பத்தி செய்தது. தற்போது அந்நாடு 37,000 மெட்ரிக் டன் வெள்ளி இருப்பு வைத்துள்ளது.

சீனா - 2024-ஆம் ஆண்டு 3,300 மெட்ரிக் டன் வெள்ளியை உற்பத்தி செய்து தற்போது 70,000 மெட்ரிக் டன் வெள்ளியை இருப்பு வைத்துள்ளது.

சிலி  - 2024-ஆம் ஆண்டு 1,200 மெட்ரிக் டன் வெள்ளி உற்பத்தி செய்து தற்போது 26,000 மெட்ரிக் டன் வெள்ளியை இருப்பு வைத்துள்ளது.

ரஷ்யா - 1,200 மெட்ரிக் டன் வெள்ளியை உற்பத்தி செய்து தற்போது 92,000 மெட்ரிக் டன் வெள்ளியை இருப்பு வைத்துள்ளது.

அமெரிக்கா - 1,100 மெட்ரிக் டன் வெள்ளி உற்பத்தி செய்து தற்போது 23,000 மெட்ரிக் டன் வெள்ளியை இருப்பு வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா - 1,000 மெட்ரிக் டன் வெள்ளி உற்பத்தி செய்து தற்போது 94,000 மெட்ரிக் டன் வெள்ளியை இருப்பு வைத்துள்ளது.

திருச்செந்தூர் போலி கடித சர்ச்சைக்கு காரசார விளக்கம்

 Thiruchendur Murugan temple priest suspend GPay bribe

'15 நாள் தூய ஆட்சிக்கு ஆடிப்போய் இருக்கிறார்கள்'... போலி கடித விவகாரத்தில் த.வெ.க காரசார அறிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாதாரண பக்தர் போல் மாறுவேடத்தில் சென்று ஆய்வு நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உதவியாளரிடம், விரைவு தரிசனத்திற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர், பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 3 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களிடம் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து, நேற்று (மே 29) அதிகாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாகச் சோதனையில் ஈடுபட்டார். அமைச்சர் தனது அரசு வாகனத்தைத் தவிர்த்து, சாதாரண காரில் வந்து அதனைத் தூரமாய் நிறுத்தினார். அதிகாரிகளுக்குத் தகவல் தராமல், கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் முகக்கவசம் (Mask) அணிந்து ஒரு சாதாரண பக்தர் போலத் தனது உதவியாளருடன் கோயிலுக்குள் சென்றார். சண்முகவிலாச மண்டப வாசலில் நின்றிருந்த ஊழியர்களிடம், "சீக்கிரம் சாமி கும்பிட என்ன செய்ய வேண்டும்?" என்று அவரது உதவியாளர் கேட்டுள்ளார். வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல், "தலைக்கு 1,000 ரூபாய் வீதம் 4 பேருக்கு 4,000 ரூபாய் கொடுத்தால் உடனே கூட்டிச் செல்கிறோம்" என அங்கிருந்தவர்கள் பேரம் பேசியுள்ளனர்.

கைவசம் பணம் இல்லை எனக் கூறிய அமைச்சர், அங்கிருந்த அர்ச்சகரின் 'ஜி-பே' எண்ணிற்கு உடனடியாக ரூ.4,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பினார். பணம் கணக்கிற்கு வந்ததும் அர்ச்சகர் அமைச்சரை அழைத்துச் செல்ல முயன்ற போது, முகக்கவசத்தைக் கழற்றித் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய அமைச்சர் ரமேஷ், டிஜிட்டல் ஆதாரத்துடன் அவர்களை கையும் களவுமாக பிடித்தார். சம்பவத்தை அடுத்து, கோயில் அலுவலகத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் உடனடியாக விளக்கக் கடிதம் பெறப்பட்டது. ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார். அதன்படி, அறநிலையத்துறை செயலர் உத்தரவின் பேரில் தற்போது 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாகத் திருச்செந்தூர் அர்ச்சகர்கள் எழுதியதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் கடிதம் முற்றிலும் போலியானது என்றும் அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

போலி கடிதம் இணையத்தில் பரப்பப்படுவது தொடர்பாக த.வெ.க விளக்கமளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருக்கிறார்கள். ஒரு நிர்வாகத்துப்புரவை நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றித்தலைவர் விஜய்.

அந்தத்துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவணங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது. மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக் கழக அரசு.

புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்களும் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன. தலை சுத்தமாக இருந்தால் தான், உடல் சரியாக இயங்கும். தலைமைச்செயலகம் என்கிற தமிழ்நாட்டின் நிர்வாகத்தலையை, மூளையை பீடித்திருந்த 'ப்ரோக்கர்' கலாச்சாரத்தை வெற்றித்தலைவர் அரியணையில் ஏறிய அடுத்து சில நாட்களுக்குள் அடியோடு ஒழித்திருக்கிறார். இனி வரும் எந்தக்காலத்திலும் ஊழல், கமிஷன், கையூட்டு இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற நிலையை தமிழ்நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மனசாட்சியுள்ள மக்களாட்சியின் முதலமைச்சர்.

இந்த களையெடுப்பு நிர்வாகம், ஊழலிலும் சுரண்டலிலும் ஊறித்திளைத்து மாறி மாறி ஊழல் டீலிங் ஆட்சி நடத்தியவர்களின் தூக்கத்தையும், கனவுகளையும் குலைத்துப்போட்டிருக்கிறது. விரைவில் தமிழ்நாடு நிர்வாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டிருக்கும். பொய் செய்தி பரப்பும் திருட்டு முன்னேற்றக் கழக கொத்தடிமைகள் என்று குறிப்பிட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/they-are-shaken-by-our-15-day-clean-governance-tvk-slams-dmk-over-thiruchendur-temple-fake-letter-row-11890005

வெள்ளி, 29 மே, 2026

பாகிஸ்தானுக்கு போ

 பக்ரீத்தில் கால்நடை பலியிட ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்தது தொடர்பாக முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசு, தமிழக வெற்றிக் கழகம் எந்த அதிகாரப்பூர்வ நிலைபாடும் அறிவிக்காத நிலையில், முஸ்லிம்களை துலுக்கன், பாகிஸ்தானுக்கு போ என்று TVK VIRTUAL WARRIORS சமூக வலைதளங்களில் வெறுப்புப் பரப்புரை செய்து வருகிறார்கள்.

source https://www.instagram.com/newsutamil/?e=3b869795-9a1e-4a53-8000-1172b6c854eb&g=5




10-ம் வகுப்பு துணைத் தேர்வு; விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி தேதி

 New Project (5)

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த, வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் துணைத் தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று ஜூன் 6 ஆம் தேதி வரை பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். சேவை மைய விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் கட்டாயமாக தங்களது ஆதார் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைப் பள்ளியில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் சேவை மையத்திலும் பணமாக செலுத்த வேண்டும்.

ஜூலையில் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) உரிய விண்ணப்ப தொகையுடன் ஜூன் 9, 10 ஆகிய நாள்களில் பள்ளியில் அல்லது சேவை மையத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.125, தட்கல் சிறப்பு கட்டணம் ரூ.500, இணையவழி பதிவு கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.695 செலுத்த வேண்டும். அதேவேளை, 2026 ஆம் ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு மட்டும் தட்கல் சிறப்புக் கட்டணம் ரூ.500 விலக்கு அளிக்கப்படுகிறது.



source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-sslc-class-10-supplementary-exam-online-application-fee-details-11884572

"பணி வரன்முறை என்பது உரிமை அல்ல" - கௌரவ விரிவுரையாளர்கள் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

 Chennai High Court 3

தேர்வு நடக்கும் வரை அவர்களைப் பணியில் இருந்து நீக்கக் கூடாது என்றும், பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை, உதவிப் பேராசிரியர்களாகத் தேர்வு ஏதுமின்றி நேரடியாகப் பணி வரன்முறை செய்ய சட்டத்தில் இடமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாகக் கடந்த 2024-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போட்டித் தேர்வு மூலம் மட்டுமே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில், 14 அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய 1,146 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் சிறப்புத் தேர்வு நடத்திப் பணி வரன்முறை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னர் 2022-ல் இந்த அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டது. அரசின் இந்த புதிய அறிவிப்பை எதிர்த்து, 2020 அரசாணையின்படி தங்களைப் பணி வரன்முறை செய்யக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2020 அரசாணையின் அடிப்படையில் தேர்வு நடைமுறைகளை முடிக்க 2024 ஏப்ரலில் உத்தரவிட்டார். இதனை எதிர்த்துத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற அமர்வின் அதிரடித் தீர்ப்பு:

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், "கௌரவ விரிவுரையாளர்கள் அந்தந்தக் கல்லூரிகளின் உள்ளூர் குழுக்களால் மட்டுமே தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களை நேரடியாகப் பணி வரன்முறை செய்வது உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள முறையான தேர்வு கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்துவிடும். 'பணி வரன்முறை' என்பதும் 'தேர்வு நடைமுறை' என்பதும் முற்றிலும் வெவ்வேறானவை; பணி வரன்முறையை யாரும் உரிமையாகக் கோர முடியாது" எனக் கூறி தனி நீதிபதியின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தனர்.

விரிவுரையாளர்களுக்கான சலுகைகள் மற்றும் வழிகாட்டுதல்:

இருப்பினும், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்:

காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தற்போது 42,064 பேர் விண்ணப்பித்துள்ளதால், அனைவருக்கும் சமமான போட்டித் தேர்வை நடத்த வேண்டும்.

இந்தத் தேர்வில், கௌரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை 'வெயிட்டேஜ்' (Weightage) வழங்கலாம்.

நீண்ட காலப் பணி அனுபவம் கொண்ட இவர்களுக்குத் தேவையான வயது வரம்பு தளர்வுகளையும் அரசு அளிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளையும் 6 மாத காலத்திற்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

மிக முக்கியமாக, தேர்வு முறையானது முடிவடைந்து புதிய நியமன ஆணைகள் வழங்கப்படும் வரை, தற்போது பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணியில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்கக் கூடாது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-verdict-on-guest-lecturers-regularisation-trb-assistant-professor-exam-11885100


வியாழன், 28 மே, 2026

தமிழ்த் தாய் வாழ்த்து: கலைஞர் அரசாணையை அமல்படுத்த அனுமதி கேட்பதா? தி.மு.க கண்டனம்

 

CM Vijay PM Modi meeting Mekedatu dam issue Tamil Thai Vazhathu controversy Sri Lankan navy fishermen arrest

CM Vijay PM Modi meeting | Tamil Thai Vazhathu controversy

அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவது தொடர்பாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில், அதற்கு பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சி. ஜோசப் விஜய் புதன்கிழமை (27.05.2026) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக நலன் சார்ந்த 4 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

அந்த மனுவின் 2-வது கோரிக்கையாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணை காரணமாக சில அரசு நிகழ்ச்சிகளில் 'தேசியப் பாடல்' முதலாவதாகப் பாடப்படுவதைச் சுட்டிக்காட்டி, மாநில வாழ்த்துப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே பாடுவதற்கு மத்திய அரசு உரிய "தெளிவுரை" (Clarification) வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கோரியிருந்தார்.

"சுதந்திரம் என்ன சுக்கா மிளகா?" - தி.மு.க-வின் காரசார சாடல்

முதலமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு, தி.மு.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ம. அப்பாவு தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

“மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய  முதல்வர் கலைஞர் அவர்களால்  23.11.1970-ல்  அரசாணை வெளியிடபட்டது. தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை  அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று மாண்புமிகு பிரதமரிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.
 
இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, "அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம். ஆனால் சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள்.
 
இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சர்  அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல்.. “ என்று அப்பாவு விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-விற்கும் இடையே வெடித்துள்ள இந்த "தமிழ்த்தாய் வாழ்த்து" விவகாரம், தமிழக அரசியல் களத்தில் மாநில சுயாட்சி குறித்த விவாதங்களை மீண்டும் சூடாக்கியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-vijay-pm-modi-meeting-mekedatu-dam-issue-tamil-thai-vazhathu-controversy-sri-lankan-navy-fishermen-arrest-11880996

புதன், 27 மே, 2026

மஹ்ஷரில் மனிதனின் நிலை!

மஹ்ஷரில் மனிதனின் நிலை! The state of man in Mahshar! M.I. Sulaiman Managing Committee Member, TNTJ Kadaiyanallur Makka Nagar - Tenkasi District Public Meeting - 10.05.2026

சரியான பாதை, நம்பிக்கையான பாதை!

சரியான பாதை, நம்பிக்கையான பாதை! A.K. அப்துர்ரஹீம் (மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், TNTJ) சேப்பாக்கம் தர்பியா - 16.05.2026 தென் சென்னை மாவட்டம்

உங்கள் கல்வியை நீங்கள் இழந்தால்..!

உங்கள் கல்வியை நீங்கள் இழந்தால்..! M.A. அப்துர்ரஹ்மான் MISc (பேச்சாளர், TNTJ) கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மஹபூப்பாளையம் - 03.05.2026

எந்தெந்த பிராணிகளை குர்பானி கொடுக்கலாம்?

எந்தெந்த பிராணிகளை குர்பானி கொடுக்கலாம்? M.A. Abdurrahman M.I.Sc (Speaker,TNTJ) Laws of Qurbani-16 What are the conditions of Qurbani animals?

இணைவைப்பும் இன்றைய நிலையும்

இணைவைப்பும் இன்றைய நிலையும் Margavilakkal General Meeting-15.02.2026 Secretary Muhammad Oli (State Secretary, TNTJ) Darga & Valluvar Nagar Branch Trichy District

அத்தியாயம் அல் ஃபாத்திர் - வசனம் 10 - திரு...

அத்தியாயம் அல் ஃபாத்திர் - வசனம் 10 - திரு... Chapter Al-Fatir - Verse 10 R.Abdul Karim M.I.Sc State President, TNTJ Explanation on the Holy Quran - Series - 7 TNTJ, State Headquarters - 21.05.2026

குர்பானி பிராணிகளின் வயது வரம்பு என்ன ?

குர்பானி பிராணிகளின் வயது வரம்பு என்ன ? M.A. Abdurrahman M.I.Sc (Speaker,TNTJ) Laws of Qurbani-17 What is the age limit for Qurbani animals?

குர்பானி கொடுப்பதின் துவக்க நேரம்

குர்பானி கொடுப்பதின் துவக்க நேரம் S.Abdur Rahman M.I.Sc (Speaker,TNTJ) Laws of Qurbani-18 Starting Time of Qurbani?

தொடரும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கொலைகள...

தொடரும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கொலைகள... R. Abdul Karim State President, TNTJ Public meeting - 24.05.2026 Alur - Kumari District

மறுமைக்கான கல்வி!

மறுமைக்கான கல்வி! K. தாவூத் கைசர் M.I.Sc (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) கோடைக்காலப் பயிற்சிப் பரிசளிப்பு விழா - 17.05.2026

குர்பானிக்குரிய நாட்கள் எத்தனை ?

குர்பானிக்குரிய நாட்கள் எத்தனை ? S.Abdur Rahman M.I.Sc (Speaker,TNTJ) Laws of Qurbani-19 How many days are there for Qurbani?

நபிகளாரின் இறுதிப் பேருரை

நபிகளாரின் இறுதிப் பேருரை R.Abdul Karim M.I.Sc State President, TNTJ Public Meeting - 24.05.2026 Alur - Kanyakumari District

தூதர் இப்ராஹீம் போதித்த தூய கொள்கை

தூதர் இப்ராஹீம் போதித்த தூய கொள்கை K.M.Abdunnazir M.I.Sc Speaker,TNTJ TNTJ,Headquarters Jumu'ah Speech - 22.05.2026

இறுதித் தூதரின் இறுதிச் செய்தி

இறுதித் தூதரின் இறுதிச் செய்தி A. ஃபெரோஸ் கான் (மாநிலச் செயலாளர், TNTJ) வெள்ளி, 15.05.2026 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணையுங்கள்.

இறுதி பேருரையில் உறுதி செய்யப்பட்ட பெண்கள்...

இறுதி பேருரையில் உறுதி செய்யப்பட்ட பெண்கள்... M. Shamsulluha Rahmani Chairman of the Management Committee, TNTJ Friday sermon Melapalayam - 15.05.2026

இந்தியாவில் பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுமா?

இந்தியாவில் பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுமா? E.J.Muhsin State Secretary TNTJ Message and Thoughts - 19.05.2026

பதில் சொல்வாரா பிரதமர்?

பதில் சொல்வாரா பிரதமர்? S.Muhammad Yasir State Secretary, TNTJ News and Thoughts - 20.05.2026

CJP'!

CJP'! News and Thoughts - 21.05.26 Kanchi A.Ibrahim (State Treasurer, TNTJ)

மறக்கப்படும் பாலஸ்தீனம், மாறாத பாலஸ்தீனியர...

மறக்கப்படும் பாலஸ்தீனம், மாறாத பாலஸ்தீனியர... Text: N.Al-Amin (State Secretary, TNTJ) Message and Thoughts - 23.05.2026

15நாள் ஆட்சியில் தமிழ்நாடு?

15நாள் ஆட்சியில் தமிழ்நாடு? A. Feroz Khan State Secretary, TNTJ News and Thoughts - 25.05.2026

virtual பக்ரீத் அமைச்சரின் வினோத பார்வை

 

E.J.Muhsin State Secretary TNTJ Message and Thoughts - 26.05.2026 virtual பக்ரீத் அமைச்சரின் வினோத பார்வை

மாறிய விடைத்தாள்கள், காணாமல் போன பக்கங்கள்; சி.பி.எஸ்.இ-யின் புது டெக்னாலஜி 'ஓ.எஸ்.எம்' பாஸா? ஃபெயிலா?

 

cbse issue

விடைத்தாள்கள் மாறிப்போனது, பக்கங்கள் ஸ்கேன் செய்யப்படாமல் விடுபட்டது, மங்கலான பிரதிகள் மற்றும் தவறான ஸ்டெப்-மார்க்கிங் என அடுக்கடுக்கான குளறுபடிகளால் தங்களின் ஐ.ஐ.டி, என்.ஐ.டி கனவுகள் சிதைந்துள்ளதாக ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்றியது; தங்கள் பிள்ளைகள் தேர்வு எழுதிய விபரங்களுக்கும் அவர்கள் உண்மையில் பெற்ற மதிப்பெண்களுக்கும் இடையே இருந்த முரண்பாடு, குறைந்த மதிப்பெண்களையும் தாண்டி ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

சி.பி.எஸ்.இ (CBSE) கடந்த மே 13 அன்று 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு முடிவுகளை அறிவித்தபோது, இரண்டு விஷயங்கள் தனித்துத் தெரிந்தன — முதலாவது, வருடாந்திர தேர்வுகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் வாரியம் அறிவித்திருந்த 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (OSM - திரையடி மதிப்பீடு) செயல்முறையின் அறிமுகம்; இரண்டாவது, கணிசமாகக் குறைந்த ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதமான 85.20 சதவீதமாகும்.

ஒப்பீட்டிற்காகப் பார்த்தால், சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலும் நிலையாகவே இருந்தது: 2023-இல் 87.33 சதவீதம், 2024-இல் 87.98 சதவீதம் மற்றும் 2025-இல் 88.39 சதவீதம் என இருந்த தேர்ச்சி விகிதம், 2026-இல் மூன்று சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. இந்த வீழ்ச்சி குறித்துப் பேசிய பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL) செயலாளர் சஞ்சய் குமார், இந்த ஏற்ற இறக்கங்கள் இதுவரை இல்லாதவை அல்ல என்றும், முன்னதாக இருந்த அதிக தேர்ச்சி சதவீதங்களுக்குக் கோவிட் காலத்துத் தளர்வுகளே காரணம் என்றும் கூறினார்.

இதற்கிடையில், சி.பி.எஸ்.இ இந்த ஓஎஸ்எம் (OSM) முறையைத் தீவிரமாக ஆதரித்தது. மதிப்பீட்டில் 'துல்லியம்', 'வெளிப்படைத்தன்மை' மற்றும் 'சீரான தன்மை' ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தம் இது என விவரித்தது.

ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்றியது; தங்கள் பிள்ளைகள் தேர்வு எழுதிய விபரங்களுக்கும் அவர்கள் உண்மையில் பெற்ற மதிப்பெண்களுக்கும் இடையே இருந்த முரண்பாடு, குறைந்த மதிப்பெண்களையும் தாண்டி ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த கூடுதல் விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளிவரத் தொடங்கின.

முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த மே 19 வரையிலான நாட்களில், விடைத்தாள்களைப் பெறுவதற்கான சி.பி.எஸ்.இ-யின் போர்ட்டலில் (Portal) தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதும் அதைப் பெறுவதும் மாணவர்களுக்குப் பெரும் போராட்டமாக மாறியதாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

வாரியம் இறுதியாக ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்களைப் பகிர்ந்தபோது, மங்கலான மற்றும் படிக்க முடியாத பக்கங்கள், திருத்தப்படாத விடைகள், விடுபட்ட பகுதிகள், தவறான ஸ்டெப்-மார்க்கிங் (Step-marking), மதிப்பீட்டில் முரண்பாடுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத வேறு ஒருவருடைய விடைத்தாள்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி சமூக ஊடகங்களில் புகார்கள் குவியத் தொடங்கின.

விடைத்தாள்கள் மாறிப்போன குளறுபடி இப்படிப்பட்ட புகார்களில் பலரது கவனத்தை ஈர்த்த ஒரு வழக்கு வேதாந்த் என்ற 12-ஆம் வகுப்பு மாணவருடையதாகும். தனது ரோல் எண்ணின் கீழ் பதிவேற்றப்பட்ட இயற்பியல் (Physics) விடைத்தாள் தனக்குரியது அல்ல என்று அவர் குற்றம் சாட்டினார். சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த பதிவுகள் மற்றும் படங்களின்படி, அந்த ஸ்கேன் நகலில் இருந்த கையெழுத்தும் விடைகளும் அவருடைய சொந்த எழுத்துடன் பொருந்தவில்லை — இதை அவரது பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டதாக அவர் கூறுகிறார். விடைத்தாள்கள் மாறியிருப்பதை நிரூபிக்க அவர் தனது இயற்பியல் விடைப்புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் தாள்கள் மற்றும் தனது சொந்த குறிப்பேடுகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, இதுகுறித்து சி.பி.எஸ்.இ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.

திங்கள்கிழமை நள்ளிரவில், சி.பி.எஸ்.இ இந்தத் தவற்றை ஒப்புக்கொண்டு, வேதாந்தின் அசல் விடைத்தாள்களை அவரிடம் பகிர்ந்துகொண்டது.

இருப்பினும், பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த விவகாரம் இன்னும் சுமுகமாக முடியவில்லை. லக்னோவைச் சேர்ந்த ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியும், தனக்குக் கிடைத்த மங்கலான பக்கங்களைக் கொண்ட ஸ்கேன் விடைத்தாள்களின் படங்களை indianexpress.com இணையதளத்துடன் பகிர்ந்துகொண்டார். ஜேஇஇ மெயின் 2027 (JEE Main 2027) தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், என்ஐடி (NIT) போன்ற கல்வி நிறுவனங்களில் சேரவும் திட்டமிட்டிருந்த தனக்கு, ஜேஇஇ அட்வான்ஸ்டு மற்றும் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட முன்னணி பொறியியல் நிறுவனங்களில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணில் சில மதிப்பெண்கள் மட்டுமே குறைந்திருப்பதால், தற்போது அது கடினமாகிவிட்டதாகப் பகிர்ந்து கொண்டார்.

இதன் காரணமாக அவர் இப்போது ஒரு வருடம் படிப்பை நிறுத்திவிட்டு (Drop year), மறுமதிப்பீட்டுத் தேர்வுகளை எழுத அல்லது அடுத்த ஆண்டு மூன்று முக்கியப் பாடங்களில் ஒரு பிரைவேட் கேண்டிடேட்டாக (Private candidate) எழுதத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் ரியாவின் வழக்கு மட்டும் தனிப்படையானது அல்ல. ஜேஇஇ மெயின் தேர்வில் அதிக பர்சென்டைல் (Percentile) பெற்ற மாணவர்கள் கூட, சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் கட்டாயமாகப் பெற வேண்டிய 75% மதிப்பெண்களைப் பெறத் தவறியதால், ஐஐடி மற்றும் என்ஐடி சேர்க்கைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக indianexpress.com ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

மதிப்பீட்டு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் மாணவர்கள் மற்றொரு மாணவரான கிரிஷ் பாஸ்வான், சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு இயற்பியல் (042) விடைத்தாள் மதிப்பீட்டில் உள்ள முரண்பாடுகளைக் குற்றம் சாட்டினார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட விரிவான பதிவில், அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பின்படி (Marking scheme) பகுதி-ஏ (Section A)-வில் உள்ள 9 கொள்குறி வகை கேள்விகளுக்கு (MCQs) சரியாகப் பதிலளித்திருந்தும், தனக்கு மூன்று கேள்விகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாணவர் கூறினார். குறிப்பாக 29(D), 30(D) மற்றும் 30(C) ஆகிய கேள்விகள் அதிகாரப்பூர்வ விடையுடன் பொருந்தியிருந்தும், அவை தவறானவை எனக் குறிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஓ.எம்.ஆர் (OMR) பாணி விடைகள், அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு மற்றும் வழங்கப்பட்ட இறுதி மதிப்பெண்களின் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்து கொண்ட அந்த மாணவர், இந்த மதிப்பீட்டு முறை முரணானது மற்றும் அநீதியானது என்று கூறி மறுமதிப்பீடு செய்யக் கோரினார்.

இதேபோன்ற புகார்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல பாடங்களிலும் எழுந்துள்ளன, இப்பாடங்களில்தான் இந்த ஆண்டு மதிப்பீடு வழக்கத்திற்கு மாறாக மிகவும் கடுமையாக இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், சஞ்சனா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி இதைவிட மிகவும் கடுமையான ஒரு முரண்பாட்டைக் குற்றம் சாட்டினார். வேதியியல் தியரி தேர்வில் 70-க்கு வெறும் 11 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், அவர் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பித்தார்.

உண்மையில், முடிவுகள் வெளியாவதற்கு முன்பே ஓஎஸ்எம் (OSM) முறை மீதான விமர்சனங்கள் தொடங்கிவிட்டன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மங்கலான ஸ்கேன் நகல்கள், சர்வர் முடக்கம், சேமிக்கப்படாத திருத்தங்கள் மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்பத் தடங்கல்கள் குறித்து முன்னரே புகார் அளித்திருந்தனர். ஸ்கேன் செய்யப்பட்ட தாள்களைப் படிப்பது கடினமாக இருந்ததாலும், அவற்றை மீண்டும் மீண்டும் ஜூம் (Zoom) செய்ய வேண்டியிருந்ததாலும், சில மதிப்பீட்டாளர்கள் ஒரு நாளைக்கு சில விடைத்தாள்களைக் கூட திருத்த முடியாமல் திணறியுள்ளனர்.

வாரியம் இந்த அம்சத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்த உடனேயே, கடந்த ஆண்டின் கல்விப் பருவத்தின் பாதியிலேயே இவ்வளவு பெரிய அளவிலான மாற்றத்திற்கான மதிப்பீட்டாளர் பயிற்சியைத் தொடங்கியிருக்க வேண்டும் என்று லக்னோவைச் சேர்ந்த ஒரு சி.பி.எஸ்.இ ஆசிரியர் indianexpress.com-இடம் முன்னரே கூறியிருந்தார். இவ்வளவு அவசரமாக இதை அறிமுகப்படுத்தியது, டிஜிட்டல் திருத்தும் கருவிகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு நெறிமுறைகளைப் பழகிக்கொள்ள ஆசிரியர்களுக்குப் போதுமான கால அவகாசத்தை வழங்கியதா என்றும் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘கணக்கீட்டில் மட்டுமே ஓஎஸ்எம்-ன் முக்கியப் பயன்’ இருப்பினும், அனைத்து மதிப்பீட்டாளர்களும் இந்த முறையைக் குறையாகப் பார்க்கவில்லை. மதிப்பீட்டுச் செயல்முறையின் போது முதன்மைத் தேர்வாளராகப் பணியாற்றிய சாய் இன்டர்நேஷனல் பள்ளியின் வணிகவியல் மற்றும் மனிதநேயத் துறை டீன் மதுஸ்மிதா தாஷ், இந்த அனுபவத்தை "எளிதானது மற்றும் வசதியானது" என்று விவரித்தார். இதன் முக்கியப் பயன் மதிப்பெண் கணக்கீட்டில் தான் இருந்தது என்று அவர் கூறினார். "நாங்கள் மதிப்பெண்களை மட்டும் உள்ளீடு செய்தால் போதும், அதுவே தானாகக் கணக்கிட்டு மொத்த மதிப்பெண்ணைக் கொடுத்துவிடும். இதனால் நிறைய நேரம் மிச்சமானது மற்றும் கணக்கீட்டுத் தவறுகள் குறைந்தன," என்று அவர் கூறினார்.

வேலைப்பளு மற்றும் வேலை நேரங்கள் பாரம்பரிய முறையுடன் ஒப்பிடத்தக்கதாகவே இருந்தன — அதாவது 8 மணி நேர ஷிப்டில் ஒரு நாளைக்கு சுமார் 20-25 தாள்கள் — இருப்பினும் தொடர்ந்து திரையைப் பார்ப்பது சோர்வை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். "நீங்கள் தொடர்ந்து 10-15 அல்லது 20 நாட்களுக்கு, தினமும் 7-8 மணி நேரம் திரையையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் அது மிகவும் சோர்வூட்டுவதாக இருந்தது."

‘முழு அளவிலான அறிமுகம் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது’ முதல்முறையாக முழு அளவில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது சில இடைவெளிகளை வெளிப்படுத்தியுள்ளதாக தாஷ் ஒப்புக்கொண்டார். அவர் சுட்டிக்காட்டிய மிக முக்கியமான அசல் பிரச்சினை விடுபட்ட ஸ்கேன் பக்கங்களாகும். "உதாரணமாக ஒருவருக்கு 11-வது பக்கத்திற்குப் பிறகு 12 மற்றும் 13-வது பக்கங்கள் இல்லை — நேரடியாக 14-வது பக்கத்திற்குச் சென்றுவிடுகிறது. எனவே அந்த இரண்டு பக்கங்களில் எழுதப்பட்ட விடைகள் 'NA' (Not Available) எனக் குறிக்கப்பட்டுள்ளன," என்று கூறிய அவர், இப்பிரச்சினை பெரும்பாலும் ஸ்கேன் செய்யும் நிலையிலேயே ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூட்டினார். "இதை ஆசிரியர்கள் கவனித்திருந்தால் நாங்கள் அந்த விடைத்தாள்களை நிராகரித்திருப்போம். ஆனால் மதிப்பீட்டாளர்கள் விடைகளையும், கேள்வி எண்களையும் மட்டுமே பார்க்கிறார்கள் — பக்கங்கள் ஸ்கேன் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியாது." அவரது மையத்தில் திருத்தப்பட்ட 1,587 தாள்களில், 19 தாள்கள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டன. "இது ஒரு பெரிய எண்ணிக்கை அல்ல என்றாலும், இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள் நடந்தன," என்று அவர் கூறினார்.

மாணவர்கள் வேறொருவரின் விடைத்தாள்களைப் பெற்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்துப் பேசிய அவர், இது முதல் ஆண்டு அமலாக்கத்தின் போது எதிர்பார்க்கப்படும் ஒரு பொதுவான உராய்வுதான் என்றார். "ஒவ்வொரு புதிய அமைப்பிலும் தவறுகள் இருக்கும். அடுத்த ஆண்டு, இது இன்னும் சுத்திகரிக்கப்பட்டு முறையானதாக மாறும்," என்றார் அவர்.

மதிப்பீட்டுத் திறனை மேம்படுத்த 3 முக்கிய வழிகள் இருப்பினும், சி.பி.எஸ்.இ தொடர்ந்து ஓஎஸ்எம் முறையை ஆதரித்து வருகிறது, மேலும் இந்த செயல்முறை மதிப்பீட்டுத் திறனை மேம்படுத்தும் என்று தான் நம்பிய மூன்று முக்கிய வழிகளை அது கோடிட்டுக் காட்டியது. முதலாவதாக, மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை எவ்வளவு வேகமாகக் கடந்து செல்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதன் மூலமும், பக்கங்களை மிக விரைவாகக் கடந்து செல்லும் நிகழ்வுகளைக் கண்டறிவதன் மூலமும் அவசர அவசரமாக மதிப்பிடுவதை இந்த அமைப்பு தடுக்கும் என்று வாரியம் கூறியது. இரண்டாவதாக, தேர்வாளர்கள் உள்ளீடு செய்யும் மதிப்பெண்களைத் தானாகவே கணக்கிடுவதன் மூலம் கூட்டல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் தவறுகளை இது முற்றிலுமாக நீக்கும். மூன்றாவதாக, ஒவ்வொரு பக்கமும் பார்க்கப்பட்டு மதிப்பிடப்படும் வரை விடைத்தாள்களைச் சமர்ப்பிக்க (Submit) முடியாது என்பதால் முழுமையான மதிப்பீட்டை இது உறுதி செய்யும்.

இருந்தபோதிலும், மாணவர்களிடமிருந்து வெளிவரும் புகார்கள் இந்த உத்தரவாதங்களுக்கு நேரடியாகச் சவால் விடுப்பது போல் அமைந்துள்ளன. பக்கங்களை மதிப்பிடாமல் சமர்ப்பிக்க முடியாது என்றால், திருத்தப்படாத விடைகள் எவ்வாறு விடுபட்டுப் போயின என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? டிஜிட்டல் ஸ்கேனிங் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தது என்றால், மாணவர்களுக்குத் தங்களுக்குச் சம்பந்தமில்லாத விடைத்தாள்கள் எவ்வாறு கிடைத்தன? தானியங்கி அமைப்புகள் மனிதத் தவறுகளைக் குறைக்கக் கொண்டுவரப்பட்டன என்றால், அடிப்படை எம்.சி.க்யூ (MCQ) சரிபார்ப்பு மற்றும் ஸ்டெப்-மார்க்கிங்கில் இன்னும் ஏன் முரண்பாடுகள் இருப்பதாக மாணவர்கள் புகாரளிக்கின்றனர்?

மதிப்பெண்களில் அதிருப்தி அடையும் மாணவர்கள், புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள குறைகேட்பு நெறிமுறைகளின் கீழ் ஸ்கேன் நகல்கள், சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/cbse-class-12-results-osm-evaluation-glitches-students-protest-answer-sheets-mixup-11878161

பண மோசடி வழக்கு: பினராயி விஜயன் வீட்டில் இறங்கிய இ.டி

 ed

கனிமவள மோசடி வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் (CMRL), பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திற்கு எந்தவொரு சேவையையும் வழங்காத நிலையிலும், பணம் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் துவங்கியது. அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சி.எம்.ஆர்.எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கேரள உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

pina

இந்நிலையில், திருவனந்தரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீடு உட்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது. கேரள தேர்தல் மாநாடு ஒன்றின்போது ​​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கேரள முதலமைச்சரை பா.ஜ.க ஏன் தாக்குவதில்லை என்று நான் கேரள மக்களிடம் கேட்க விரும்புகிறேன். முதலமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு ஏன் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்கிறது? இது பா.ஜ.க-வுக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையிலான கூட்டுச் சதிக்கு சிறந்த சான்றாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.



source https://tamil.indianexpress.com/india/ed-raids-ex-kerala-cm-pinarayi-vijayans-house-in-money-laundering-case-11878592

செவ்வாய், 26 மே, 2026

மதரஸாக்கள் பற்றிய அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்து பெண்

 

















மதரஸாக்கள் பற்றிய அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்து பெண் ஆசிரியர்: சமூக வலைத்தளங்களின் பொய் முகத்திரை கிழிந்தது!

மதரஸாக்களைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் எதிர்மறையான கதையாடல்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மதரசாவில் பணிபுரியும் இந்து பெண் ஆசிரியை ஒருவர் அங்குள்ள உண்மை நிலவரத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

ஊடகங்களிலும், யூடியூப் மற்றும் கூகுள் போன்ற சமூக வலைத்தளங்களிலும் மதரஸாக்களைப் பற்றி காட்டப்படும் எதிர்மறையான செய்திகளைப் பார்த்து ஆரம்பத்தில் தானும் அச்சமடைந்ததாகக் கூறும் அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் அங்கு பணியாற்றி வரும் தனது நேரடி அனுபவத்தின் மூலம் அந்தப் பொய் மூட்டைகளைத் தவிடுபொடியாக்கியுள்ளார்.

மதரஸாக்களில் உருது, ஹிந்தி, ஆங்கிலம், கணிதம் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களும் முறையாகக் கற்பிக்கப்படுவதாகவும், அங்கு கல்வி மட்டுமே பிரதானமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அங்கு தீவிரவாதமோ அல்லது வெறுப்புணர்வோ கற்பிக்கப்படவில்லை என்பதற்கு மாணவர்களின் கல்வியின் மீதுள்ள பெரும் ஆர்வமே சாட்சி என்று கூறும் அவர், தனக்கு அங்கு முழு பாதுகாப்பு இருப்பதாகவும், சக ஆசிரியர்களும் மாணவர்களும் தன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பெண் பிள்ளைகளின் கல்விக்காகவே தான் அங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும், மதரஸா மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறி, மதரஸாக்கள் குறித்த இந்துத்துவவாதிகளின் போலிப் பிரச்சாரங்களின் முகத்திரையைக் கிழித்துள்ளார்.

வீடியோ மற்றும் அதன் தமிழாக்கம் முதல் Comment ல் இணைக்கப்பட்டுள்ளது !



source fb page Islam Album




அரை கிலோ மட்டன் இருந்தா பக்ரீத்துக்கு இத செய்யுங்க: சாதம், பரோட்டாவிற்கு செம்ம காம்பினேஷன்

Mutton Kulambu in Tamil Mutton Kuzhambu Recipe

Mutton Kulambu in Tamil | Mutton Kuzhambu Recipe

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் திருநாளை முன்னிட்டு, வீடுகளில் பிரியாணி மற்றும் மட்டன் உணவுகள் பிரதானமாக இடம்பெறும். இந்த சுபதினத்தில், இல்லத்தரசிகள் மசாலா அரைக்கும் சிரமமே இல்லாமல், மிக எளிமையாகவும் அதே சமயம் அம்புட்டு ருசியாகவும் செய்யக்கூடிய ஒரு அட்டகாசமான மட்டன் குழம்பு செய்முறையை இங்கே பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

  • மட்டன் - அரை கிலோ (500g)
  • நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • பட்டை - 2, கிராம்பு - 4, ஏலக்காய் - 4
  • சோம்பு - அரை டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • தக்காளி - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (நல்ல நிறத்திற்காக)
  • மல்லித்தூள் (தனியாத் தூள்) - 1 டீஸ்பூன்
  • மட்டன் மசாலா தூள் - 3 ஸ்பூன்
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலாவதாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு பொரிந்தவுடன், நறுக்கி வைத்துள்ள 3 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக மசிந்து சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

தக்காளி வதங்கிய பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை ஒரு நிமிடம் வதக்கவும். (விருப்பப்பட்டால் இந்தத் தருணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக்கொள்ளலாம், இது மட்டனை மேலும் மென்மையாக்கும்).

இப்போது, நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள அரை கிலோ மட்டனை குக்கரில் சேர்த்து, மசாலாக்களுடன் நன்றாகக் கலந்து விடவும். மட்டனில் இருந்து தானாகவே தண்ணீர் பிரிந்து வரும் வரை சுமார் 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்க வேண்டும். பின்னர், 3 ஸ்பூன் மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி, குழம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து விடவும்.

உப்பு மற்றும் காரம் சரிபார்த்த பின்பு, குக்கரை மூடி விசிலிடவும். மட்டன் நன்றாக வேகுவதற்காக உங்கள் குக்கரின் அளவிற்கு ஏற்ப 5 விசில் விட்டு இறக்கவும். பிரஷர் முற்றிலும் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்தால், எண்ணெய் பிரிந்து மட்டன் பஞ்சு போல் வெந்திருப்பது தெரியும்.

மீண்டும் ஸ்டவ்வை ஆன் செய்து, குழம்பை மிதமான தீயில் (Medium Flame) 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு நல்ல கெட்டியான பக்குவத்திற்கு வந்ததும், கமகமக்கும் வாசனையுடன் எண்ணெய் மிதக்கத் தொடங்கும். இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், நாவில் எச்சில் ஊறும் சுவையான மட்டன் குழம்பு தயார்!

சுவை மொட்டுக்களுக்கான டிப்ஸ்:

இந்த இன்ஸ்டன்ட் மட்டன் குழம்பு சுடச்சுட சாதம், சப்பாத்தி, தோசை, பரோட்டா என அனைத்து உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட அற்புதாமாக இருக்கும். இந்த பக்ரீத் பண்டிகைக்கு உங்கள் வீட்டில் இந்த எளிய முறையை முயற்சி செய்து அசத்துங்கள்!

2026-ல் வாழ தகுதியான டாப் 10 நாடுகள் இவைதான்

 உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வேலை-வாழ்க்கை சமநிலைக்கான தேவை மற்றும் வரிச் சலுகைகள் போன்ற காரணங்களால் அமெரிக்காவில் வசிக்கும் பலர் தற்போது வெளிநாடுகளுக்கு குடியேறும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக 2026-ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், குடியேற்ற எளிமை மற்றும் குறைந்த செலவு ஆகிய அடிப்படைகளில் சில நாடுகள் அதிக கவனம் பெற்றுள்ளன.

போர்ச்சுகல் – குறைந்த செலவில் உயர்ந்த வாழ்க்கைத் தரம்

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் விரும்பப்படும் குடியேற்ற நாடாக போர்ச்சுகல் தொடர்ந்து திகழ்கிறது. பாதுகாப்பான சூழல், குறைந்த வாழ்க்கைச் செலவு, நல்ல காலநிலை மற்றும் ஓய்வுபெற்றோருக்கான வரிச் சலுகைகள் காரணமாக அமெரிக்கர்கள் அதிகமாக இங்கு குடியேறுகின்றனர். “இணைய வழி தொலைவேலை செய்பவர்களுக்கான விசா” மற்றும் “தங்க முதலீட்டு விசா” திட்டங்களும் வெளிநாட்டவர்களுக்கு ஈர்ப்பாக உள்ளன.

மெக்சிகோ – அமெரிக்கர்களின் முதல் விருப்பங்களில் ஒன்று

அமெரிக்காவுக்கு அருகில் இருப்பது மற்றும் குறைந்த செலவில் வசிக்க முடிவது மெக்சிகோவின் மிகப்பெரிய பலமாகும். உணவு, வீடு வாடகை, மருத்துவம் போன்றவை அமெரிக்காவை விட மிகவும் மலிவாக உள்ளதால் ஓய்வுபெற்றோர் மற்றும் தொலைவேலை செய்பவர்கள் அதிகம் குடியேறுகின்றனர். கடற்கரை நகரங்கள் மற்றும் கலாச்சார வாழ்க்கையும் இதற்குக் காரணமாக உள்ளது.

கனடா – பாதுகாப்பு மற்றும் தரமான மருத்துவ வசதிகள்

உயர்ந்த வாழ்க்கைத் தரம், உலகத் தரமான சுகாதார சேவைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற சூழல் காரணமாக கனடா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் மருத்துவ துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருப்பதும், திறமையான தொழிலாளர்களுக்கான குடியேற்ற திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதும் முக்கிய அம்சமாகும்.

கோஸ்டாரிகா மற்றும் பனாமா – ஓய்வுபெற்றோரின் சொர்க்கம்

இயற்கை வளம், அமைதியான வாழ்க்கை முறை மற்றும் மலிவு மருத்துவ வசதிகள் காரணமாக கோஸ்டாரிகா மற்றும் பனாமா அமெரிக்க ஓய்வுபெற்றோரின் விருப்ப நாடுகளாக மாறியுள்ளன. குறிப்பாக பனாமாவில் உள்ள ஓய்வூதிய திட்டம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

ஸ்பெயின் – ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கான முக்கிய மையம்

சிறந்த பொது போக்குவரத்து, உயர்தர மருத்துவ வசதிகள், கலாச்சார செழிப்பு மற்றும் மெடிட்டரேனியன் காலநிலை ஆகியவை ஸ்பெயினை பிரபலமாக்குகின்றன. வேலை செய்யாமல் தங்க அனுமதிக்கும் விசா மற்றும் இணைய வழி தொலைவேலை செய்பவர்களுக்கான விசா திட்டங்கள் வெளிநாட்டவர்களுக்கு எளிதான குடியேற்ற வாய்ப்புகளை வழங்குகின்றன.

ஜார்ஜியா – எளிதான விசா மற்றும் குறைந்த செலவு

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சந்திப்பில் உள்ள ஜார்ஜியா, மிகவும் குறைந்த செலவில் வாழக்கூடிய நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல நாடுகளின் குடிமக்களுக்கு நீண்டகால விசா இல்லா தங்கும் அனுமதி வழங்கப்படுவதால் இணைய வழி தொலைவேலை செய்பவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

மலேசியா – ஆசியாவில் வளர்ந்து வரும் வெளிநாட்டவர் மையம்

மலேசியாவின் “மலேசியா எனது இரண்டாவது வீடு” திட்டம் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் முக்கிய காரணமாக உள்ளது. குறைந்த செலவு, நவீன நகர வசதிகள், ஆங்கில மொழி பயன்பாடு மற்றும் சிறந்த மருத்துவ சேவைகள் அமெரிக்கர்களை இங்கு குடியேற தூண்டுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் – வரியில்லா வருமானம்

துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்கள் உலகளாவிய தொழில்முனைவோர் மற்றும் உயர்ந்த வருமானம் பெறுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தனிநபர் வருமான வரி இல்லாதது, நவீன உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான நகர வாழ்க்கை ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தை முக்கிய குடியேற்ற இடமாக மாற்றியுள்ளன.

சுவிட்சர்லாந்து – உயர்ந்த வாழ்க்கைத் தரத்தின் சின்னம்

உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து பார்க்கப்படுகிறது. உயர்ந்த சம்பளம், சிறந்த பொது சேவைகள் மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை இதன் பலமாக இருந்தாலும், வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் குடியேற விரும்புவோர் கவனிக்கும் முக்கிய அம்சங்கள்

2026-ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு குடியேறும் அமெரிக்கர்கள் முக்கியமாக கவனிக்கும் அம்சங்களில் பாதுகாப்பு, குறைந்த வரி, மலிவு மருத்துவம், நிரந்தர குடியுரிமை பெறும் எளிமை, இணைய வசதி மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை இடம்பெறுகின்றன. குறிப்பாக தொலைவேலை அதிகரித்துள்ளதால், இணைய வழி தொலைவேலை செய்பவர்களுக்கான விசா வழங்கும் நாடுகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

முன்னதாக வேலை வாய்ப்புகளுக்காக மட்டுமே வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த அமெரிக்கர்கள், தற்போது வாழ்க்கைத் தரத்தை முன்னிலைப்படுத்தி நாடுகளை தேர்வு செய்கின்றனர். இதனால் வருங்காலங்களில் குறைந்த செலவு மற்றும் அதிக சலுகைகள் வழங்கும் நாடுகள் உலகளாவிய வெளிநாட்டவர் மையங்களாக மாறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.


source https://tamil.indianexpress.com/india/top-10-best-countries-for-americans-to-relocate-in-2026-based-on-cost-safety-and-visa-benefits-11871993