வியாழன், 30 ஏப்ரல், 2026

மொத்தம் 5050 இடங்கள்; தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கை இந்த ஆண்டு கூடுமா?

 

medical college

2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு, தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், சேலத்தில் உள்ள பிளஸ் மேக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற புதிய தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடங்க விண்ணப்பித்துள்ளது. அதேபோல், ஏற்கனவே உள்ள சில கல்லூரிகள் கூடுதல் இடங்களை கோரியுள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்த பின்னரே இடங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என்று மாநிலத் தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2025-ஆம் ஆண்டில், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் எய்ம்ஸ்-மதுரை என மொத்தம் 78 கல்வி நிறுவனங்கள் இருந்தன. அரசு கல்லூரிகளிர் 5,050 எம்.பி.பி.எஸ் இடங்கள். இ.எஸ்.ஐ.சி (ESIC) மருத்துவக் கல்லூரி (கே.கே. நகர்) 150 இடங்கள், எய்ம்ஸ் மதுரை 50 இடங்கள், சுயநிதி கல்லூரிகள், 3,900 இடங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் முறையே 850 மற்றும் 3,050 இடங்கள் உள்ளன. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை நிறுவுவதே மாநில அரசின் கொள்கை என்றும், இதற்காக புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்திய மருத்துவச் சங்கம் (IMA) மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் (TNDGA) உள்ளிட்ட அமைப்புகள், புதிய கல்லூரிகளைத் திறப்பதையோ அல்லது இடங்களை அதிகரிப்பதையோ தள்ளி வைக்குமாறு அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைப்படி 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தற்போது சுமார் 700 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர் என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தலைவர் டாக்டர் கே. செந்தில், தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் 10,000 எம்.பி.பி.எஸ் பட்டதாரிகளும், 1,500 வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளும் உரிமம் கோரி விண்ணப்பிப்பதால், அடுத்த 10 ஆண்டுகளில் 350 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை ஏற்படும். மேலும், தமிழகத்தின் பிறப்பு விகிதம் 1.4 ஆக இருப்பதால் மக்கள் தொகையும் குறைந்து வருகிறது. எனவே, எம்.பி.பி.எஸ் இடங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக, முதுநிலை (PG) மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளர்.

இருப்பினும், இந்திய அளவில் உலக சுகாதார அமைப்பின் (WHO) விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படுவதால், தமிழகக் கல்லூரிகள் நாட்டுக்கு அதிக மருத்துவர்களை வழங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், மாநிலத்திற்குள்ளேயே மருத்துவர்களின் பரவல் சீராக இல்லை என்றும், அதிக மருத்துவக் கல்லூரிகள் உருவாவதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகள் மற்றும் மருத்துவர்களின் முறையான பகிர்வு உறுதி செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-medical-college-seat-matrix-chance-less-for-increase-update-in-tamil-11780408

லடாக்கில் லேசான நில அதிர்வு - 4.1 ரிக்டர் அளவில் பதிவு

30 04 2026 


காஷ்மீரில் லடாக்கில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-politics-dmk-admk-tvk-live-updates-today-weather-update-in-tamil-11780380

புதன், 29 ஏப்ரல், 2026

பயனுள்ள கல்வி எது?

பயனுள்ள கல்வி எது? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப்பொதுச்செயலாளர்,TNTJ பெண்கள் தர்பியா - 11.04.2026 தென்சென்னை-சேப்பாக்கம்

முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்!

முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்! கே.சுஜா அலி M.I.Sc பேச்சாளர்,TNTJ குடும்பவியல் இஜ்திமா - 16.08.2025 சேத்துப்பட்டு கிளை, திருவண்ணாமலை மாவட்டம்

மனிதா தடுமாற்றம் ஏன்?

மனிதா தடுமாற்றம் ஏன்? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்,TNTJ TNTJ, தலைமையக ஜுமுஆ - 24.04.2026

நன்மைகள் தீமைகளோடு கலக்கப்பட்டால்

நன்மைகள் தீமைகளோடு கலக்கப்பட்டால் உரை : M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc பேச்சாளர்,TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா கிளை ஜுமுஆ மேலப்பாளையம் - 24.04.2026

விவகாரம் மதமாற்றமா? மதவெறுப்பா?

TCS விவகாரம் மதமாற்றமா? மதவெறுப்பா? ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ அமைந்தகரை ஜுமுஆ இரண்டாம் உரை - 24.04.2026

தடுமாறும் இளைய சமுதாயம்

தடுமாறும் இளைய சமுதாயம் அ.சபீர் அலி (மாநிலச் செயலாளர், TNTJ) பொதுக்கூட்டம் - 29.06.2025 குலசேகரன்பட்டினம் - தூத்துக்குடி மாவட்டம்

செயல் திட்டமும்! செயல்பட வேண்டிய நாமும்!

செயல் திட்டமும்! செயல்பட வேண்டிய நாமும்! இ.முஹம்மது மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மாவட்ட செயற்குழு - 05.04.2026 வடசென்னை மாவட்டம்

இறைத்தூதரின் இறுதிப் பேருரை

இறைத்தூதரின் இறுதிப் பேருரை மே மாத செயல்திட்டம் கலந்துரையாடல் - 28.04.2026 காஞ்சி A .இப்ராஹீம் (மாநிலப் பொருளாளர்,TNTJ) AK.அப்துர் ரஹீம் (மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்) ஐ.அன்சாரி (மாநிலச்செயலாளர்,TNTJ) அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்துமாத செயல் திட்டம்

விற்க போகும் நகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா ?

விற்க போகும் நகைக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா ? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் K.சுஜா அலி M.I.Sc பேச்சாளர், TNTJ திருத்தணி கிளை - 05.09.2025 திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

தமிழ்நாடு வாழட்டும்...

தமிழ்நாடு வாழட்டும்... ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - 26.04.2026

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - 26.04.2026 ஏ.முஜீபுர்ரஹ்மான் மாநிலப்பொதுச் செயலாளர் கடலூர் தெற்கு மாவட்டப் பொதுக்குழு அடுத்த ஆட்சியாளருக்கு...! யார் ஆட்சிக்கு வந்தாலும்!

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - 26.04.2026

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - 26.04.2026 ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் TNTJ புதுச்சேரி மாவட்டப் பொதுக்குழு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

தமிழக தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம்: இறுதி நிலவரத்தை இதுவரை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்காதது ஏன்?

 

தமிழக தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம்: இறுதி நிலவரத்தை இதுவரை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்காதது ஏன்?


கடந்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்து 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து 5 நாட்கள் ஆகியும், இறுதிப்புள்ளி விவரங்கள் வெளியிடாத நிலையில், இது குறித்த தகவலுக்காக அரசியல் கட்சிகள் இன்னும் காத்திருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது. 4 முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அன்றைய தினத்தின் இறுதியில் வாக்குப்பதிவு 85.15% ஆக இருந்தது. 2 நாட்களுக்குப் பிறகு, மறுசரிபார்ப்பிற்குப் பின் இந்த தற்காலிக சதவீதத்தை 85.10% ஆக (0.05% குறைவு) ஆணையம் திருத்தியது. 

அதே சமயம், பாலின வாரியான விவரங்களையோ (ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்) அல்லது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையையோ அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. பல ஆண்டுகளாக தேர்தல்களைச் சந்தித்து வரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு முக்கிய திராவிடக் கட்சிகளும், வாக்குச் சாவடி மற்றும் தொகுதி வாரியாக தங்களின் வெற்றி வாய்ப்புகளைக் கணிக்க படிவம் 17C-ஐப் பெற்றுள்ளன. ஆனால், சீமானின் நாம் தமிழர், புதிய கட்சிகளான விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) உள்ளிட்ட புதிய கட்சிகள், திராவிடக் கட்சிகளின் இந்த அனுபவத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தபால் மற்றும் சேவை வாக்குகள் இல்லாத இறுதி அறிக்கைகளுக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றுதான் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி காலை 8 மணி வரை நாங்கள் தபால் வாக்குகளைச் சேகரிப்போம். எனவே, அதுவரை முழுமையான அறிக்கையை வழங்க முடியாது. எங்கள் இணையதளத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் புதுப்பித்துள்ளோம். சுமார் 6 லட்சம் தபால் வாக்குகள் உள்ளதால், ஏதேனும் மாற்றம் இருந்தால் அது வெறும் 1% என்ற அளவில் மிகக் குறைவாகவே இருக்கும்," என்று மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2025 நவம்பரில் பீகாரில் வாக்குப்பதிவு நாளன்றே பாலின வாரியான விவரங்கள் உட்பட அனைத்துத் தரவுகளையும் எப்படி வெளியிட முடிந்தது என்று கேட்டபோது, அந்த அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. 2 முறையுமே, வாக்குப்பதிவு நாளன்று இரவு 11 மணிக்குள் ஈவிஎம் (EVM) வாக்கு எண்ணிக்கையை ஆணையம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முழுமையான தரவுகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். ஆனால், துல்லியத்தன்மையை உறுதிப்படுத்த எண்களை மறுசரிபார்ப்பு செய்வதாகக் கூறி அவர்கள் எங்களைத் தவிர்த்து வருகின்றனர். தரவுகளில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பின் நீதிமன்றத்தை அணுகுவோம்," என்று தெரிவித்தார். அதேபோல், அதிமுக நிர்வாகியும், ராஜ்யசபா எம்.பியுமான இ.எஸ். இன்பாதுரை, கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள் அந்தந்தப் பகுதிகளில் தரவுகளைச் சேகரித்துள்ள போதிலும், முழுமையான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-election-eci-yet-to-release-final-poll-numbers-update-in-tamil-11776828

ஈரான் நிலைகுலைந்துவிட்டது; ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவி கேட்டது

 

ஈரான் நிலைகுலைந்துவிட்டது; ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவி கேட்டது

மேற்காசிய மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், ஈரான் ஒரு "நிலைகுலைந்த நிலையில்" இருப்பதாக வாஷிங்டனிடம் "தற்போது தகவல் தெரிவித்துள்ளதாகவும்", தெஹ்ரான் ஹார்முஸ் ஜலசந்தியை "முடிந்தவரை விரைவில்" மீண்டும் திறக்க அமெரிக்காவிடம் விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஈரான் தான் 'நிலைகுலைந்த நிலையில்' இருப்பதாக தற்போது எங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கள் தலைமைத்துவ சூழலைச் சரிசெய்ய முயற்சிக்கும் வேளையில் (அவர்களால் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்!), ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் 'திறக்க' வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிக சமீபத்திய முன்மொழிவில், அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டு வரவும், தெஹ்ரானின் துறைமுகங்கள் மீதான தடையை நீக்கவும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகு அணுசக்தித் திட்டம் குறித்து இஸ்லாமிய தேசம் விவாதிக்கும் என்றும் ஈரான் முன்மொழிந்ததாகத் தெரிகிறது.

ஆனால், அணுசக்தி விவகாரங்கள் ஆரம்பத்திலிருந்தே கையாளப்பட வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதாக, அமெரிக்க அதிபரின் திங்கட்கிழமை ஆலோசனைக் கூட்டம் குறித்துத் தெரிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பலத்த காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், ஈரானில் உள்ள யாரிடம் அமெரிக்க நிர்வாகம் பேசி வருகிறது என்பதை டிரம்ப் வெளிப்படுத்தவில்லை.

எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

மேற்காசிய மோதலில் முட்டுக்கட்டை நீடிப்பதால், சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இது 3% உயர்ந்து ஒரு பேரல் 111.40 டாலராக அதிகரித்துள்ளது, இது கடந்த மூன்று வாரங்களில் இல்லாத உச்சமாகும்.

2026-ஆம் ஆண்டில் எரிசக்தி விலைகள் 24% உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது, இது பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்தியதற்குப் பிறகு எண்ணெய் விலையை அதன் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வரும்.

இதற்கிடையில், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (OPEC) மற்றும் ஓபெக் பிளஸ் (OPEC+) குழுக்களில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது உறுப்பு நாடுகளுக்கும், அந்த குழுக்களின் உண்மையான தலைவரான சவுதி அரேபியாவிற்கும் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து மாஸ்கோவின் ஆதரவைப் பெற்ற நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அரக்சி தனது பயணத்தின் போது ஓமனுக்கும் சென்றிருந்தார்.


source https://tamil.indianexpress.com/international/trump-iran-state-of-collapse-strait-of-hormuz-reopening-request-11776669

கோடையில் மாணவர்களை பாதுகாப்பது எப்படி? பள்ளிகளுக்கு புதிய உத்தரவுகளை வழங்கிய கல்வித் துறை

 school children 2

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனைத் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால், அந்த நேரங்களில் மாணவர்களை எக்காரணம் கொண்டும் திறந்த வெளியில் அமர வைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மைதானங்களில் வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மாணவர்கள் நேரடியாக வெயில் படும் இடங்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வகுப்புகளுக்கும் (P.T. periods) கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெயில் வாட்டி வதைக்கும் நேரங்களில் மாணவர்களைத் திறந்தவெளி மைதானங்களில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்றும், உடற்பயிற்சி வகுப்புகளை நிழலான இடங்களிலோ அல்லது வகுப்பறைகளுக்குள்ளோ ஆக்கப்பூர்வமான முறையில் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், கட்டாயம் குடைகளைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்களின் உடல் ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பள்ளிகளில் போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும். மாணவர்கள் அவ்வப்போது தண்ணீர் பருகுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், வெயில் காரணமாக மாணவர்களுக்குத் தலைச்சுற்றலோ அல்லது மயக்கமோ ஏற்பட்டால், உடனடி முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். (ORS) கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியோர்களும் இந்த வெயில் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கோடைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் தேவையான விழிப்புணர்வை மாணவர்களிடையே தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-school-education-department-guidelines-for-summer-heat-safety-11776633

சி.பி.எஸ்.இ 2026 தேர்வு - ஆன் ஸ்கிரீன் மார்கிங் வசதியால் என்னென்ன நன்மை?

 

CBSE 12th Results Today Live Updates

CBSE 12th Result 2026: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை results.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் (Roll number), பிறந்த தேதி மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முக்கிய சீர்திருத்தமாக, இந்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய திரைவழி மதிப்பீட்டு (On-Screen Marking - OSM) முறையை அறிமுகப்படுத்துவதாக சி.பி.எஸ்.இ (CBSE) அறிவித்திருந்தது. அதன்படி, இந்த முறை 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் பாரம்பரிய நேரடி முறைக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன. இருப்பினும், 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் வழக்கம் போல நேரடி முறையிலேயே மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்த ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ (CBSE) 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடைபெற்றன. இறுதித் தேர்வாக சட்டப் படிப்பு (Legal Studies) தேர்வு நடைபெற்றது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10:30 மணிக்குத் தொடங்கி ஒரே ஷிப்ட்டாக நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு, 12-ஆம் வகுப்புத் தேர்வில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.64% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.70% ஆகவும் இருந்தது.

29 4 2026


source https://tamil.indianexpress.com/tamilnadu/cbse-class-12th-result-2026-date-direct-link-scorecard-download-live-update-11776724

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

அணுசக்தி விவகாரத்தில் டிரம்பின் கறார் முடிவு

 

 அணுசக்தி விவகாரத்தில் டிரம்பின் கறார் முடிவு

trump

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான புதிய முன்மொழிவை அமெரிக்காவிற்கு ஈரான் வழங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஈரான் - அமெரிக்கா இடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இதன் பின்னர் எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்றும் எதுவாக இருந்தாலும் ஈரான் தொலைபேசி வாயிலாக அமெரிக்காவை அழைக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கவலைகளுக்குத் தீர்வு காணாததால், அந்த நாடு அளித்த முன்மொழிவால் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். மேலும், டிரம்பிற்கு இந்த முன்மொழிவு பிடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தகவலின் படி,  தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் முடிவுக்கு வரும் வரையிலும், வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து தொடர்பான சர்ச்சைகள் தீர்க்கப்படும் வரையிலும், அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களை ஒத்திவைக்க அந்த முன்மொழிவு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அணுசக்தி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியக உள்ளது. 

எந்த பேச்சுவார்த்தை என்றாலும் அதில் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் முக்கிய விஷயமாக உள்ளது என்றும் அவற்றை தாமதப்படுத்த முடியாது என்றும் அமெரிக்கா மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானின் முன்மொழிவு குறித்து தனது மூத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் அளித்த தகவலின் படி, இரு தரப்பிற்கும் இடையிலான பிரச்சனைகளை சரி செய்ய  முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் இஸ்லாமாபாத் பயணத்தை டிரம்ப் ரத்து செய்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது. 

இந்தப் பயணம் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது ரத்து செய்யப்பட்டது தற்போதைய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதலால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

27 4 2026


source https://tamil.indianexpress.com/international/us-says-donald-trump-doesnt-love-iran-proposal-as-it-leaves-out-nuclear-issue-11773126

திங்கள், 27 ஏப்ரல், 2026

செய்தியாளரை சாடிய டிரம்ப்

 அமெரிக்காவில் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை, வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மேடையில் இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றின

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட நபர் 31 வயதான கோல் தாமஸ் ஆலன் எனவும் அவர் விருந்து அரங்குக்குள் நுழைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டதாக சட்ட அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் டிரம்பை ஒரு பாலியல் குற்றவாளி என்றும் குழந்தை பாலியல் குற்றவாளி என்றும் ஒரு வாசகத்தை எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து '60 மினிட்ஸ்' நேர்காணலின் போது டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது "நீங்கள் அதை வாசிப்பீர்கள் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன். ஆம், அவர் அப்படி எழுதியிருந்தார். 

நான் ஒன்றும் பாலியல் குற்றவாளி கிடையாது. நான் அந்த அறிக்கையைப் படித்தேன். உங்களுக்குத் தெரியும், அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர். நீங்கள் அதை வாசித்திருக்கக் கூடாது” என்றார். மேலும், இந்தச் சம்பவத்தின் போது தான் பதற்றமடையவில்லை என்று கூறிய டிரம்ப், தனது நடவடிக்கைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் வேகத்தைக் குறைத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். 

source https://tamil.indianexpress.com/international/i-am-not-a-pedophile-trump-snaps-at-reporter-over-shooter-manifesto-11769403

அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர்  டாட் பிளான்ச்-ன் கூற்றுப்படி, சந்தேகிக்கப்படும் நபர் நிர்வாகத்தின் உறுப்பினர்களை இலக்கு வைத்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபர் எழுதியதாகக் கூறப்படும் அறிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

NEET UG 2026: தேர்வர்கள் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டியது அவசியம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 


இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) எழுதும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் பயோமெட்ரிக் (Aadhaar biometric) விவரங்களைப் புதுப்பித்து வைத்திருக்குமாறு தேசிய தேர்வு முகமை (NTA), அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நடைபெறும் நாளில், தேர்வு மையங்களில் எவ்வித தடையுமின்றி பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்வதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

26 4 2026 

தேர்வு மையத்தில் சுமூகமான பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்கு இது அவசியமானது" என்று குறிப்பிட்டுள்ள தேர்வு வாரியம் "தேவைப்பட்டால், தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவா மையத்திற்குச் சென்று முன்கூட்டியே தங்களது விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்" என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) வழிகாட்டுதல்களின்படி, ஒரு குழந்தைக்கு 15 வயது பூர்த்தியாகும்போது ஆதார் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும். 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்தப் புதுப்பித்தல் செயல்முறை முற்றிலும் இலவசமாகும். தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களை uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கண்டறியலாம்.


பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், முகவரி மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் துல்லியமாக இருப்பது அவசியம். இது பதிவு அல்லது சரிபார்ப்புச் செயல்பாட்டின் போது ஏற்படக்கூடிய குளறுபடிகளைத் தவிர்க்க உதவும். ஆதார் தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான யு.டி.ஐ.டீ (UDID) அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ்கள் (EWS/SC/ST/OBC-NCL) போன்றவை செல்லுபடியாகும் நிலையில் இருப்பதையும், புதுப்பிக்கப்பட்டிருப்பதையும் தேர்வர்கள் உறுதி செய்ய வேண்டும். நீட் யுஜி 2026 தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 27, காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட் கொண்டு வருவது கட்டாயம்; அது இல்லையெனில் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையை மாதிரித் தேர்வுகள் எழுத அல்லது பாடங்களைத் திருப்புதல் செய்யப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீட் யுஜி 2026 தேர்வு மே 3 அன்று நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெற உள்ளது.

source https://tamil.indianexpress.com/education-jobs/nta-advises-to-neet-ug-2026-candidates-for-aadhaar-biometric-details-update-11768760

வரலாற்றில் ஒரு திருப்புமுனை நேரம் - ப.சிதம்பரம்

 

P Chidambaram

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க, இந்தியாவின் கடந்த கால அல்லது தற்போதைய மற்ற எந்தக் கட்சிகளையும் போன்றது அல்ல. அதன் இலக்கு அடிக்கடி தேர்தல்களில் வெற்றி பெறுவது மட்டுமல்ல; அதன் இலக்கு தேர்தல்களில் வெற்றி பெற்று எப்போதும் ஆட்சியில் நீடிப்பதுதான். அந்த வகையில், பா.ஜ.க சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் (சி.பி.சி) போன்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஜப்பானிய ஊடுருவல்காரர்களுக்கு எதிரான கொடூரமான போர் மற்றும் 1945-ல் ஜப்பான் சரணடைந்த பிறகு 'குவோமிண்டாங்' (கே.எம்.டி) கட்சிக்கு எதிராக 1949-ல் நடந்த கசப்பான உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் மூலமே அதிகாரத்திற்கு வந்தது. அன்று முதல் இன்று வரை அக்கட்சியே ஆட்சியில் நீடிக்கிறது.

மாவோ சேதுங் 1949-ல் சீனாவை ஒரு கட்சி நாடாக அறிவித்தார். இந்தியா 1947-ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்று, மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் குடியரசு அரசியலமைப்பை எழுதியது. 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு, பல அரசியல் கட்சிகளை அனுமதிக்கிறது; குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்களையும், மத்திய மற்றும் மாநில அளவில் அமைதியான முறையில் அதிகார மாற்றத்தையும் கட்டாயமாக்குகிறது. இதுவே சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மிக முக்கியமான வித்தியாசம்.

பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்

தொடக்கத்தில் ஜனசங்கம், பின்னர் பாரதிய ஜனசங்கம் மற்றும் அதன் தற்போதைய வடிவமான பா.ஜ.க ஆகியவை இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருந்தன. இது ஒரு ஜனநாயகக் கட்சியாக வளர்க்கப்பட்டு, அரசியல் களத்தில் வலதுசாரி நிலைப் பாட்டில் வைக்கப்பட்டது. இடதுசாரி நிலையை ஆக்கிரமித்திருந்த இந்திய தேசிய காங்கிரஸிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட அது முயன்றது. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, ஏ.பி. வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோரின் தலைமையின் கீழ் பா.ஜ.க பல ஆண்டுகளாக ஒரு ஜனநாயகக் கட்சியாகவே இருந்தது. இருப்பினும், பா.ஜ.க-வின் அரசியல் குருவான ஆர்.எஸ்.எஸ், இந்தியாவின் அரசியல் கட்டமைப்பு குறித்து வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தது (தற்போதும் கொண்டுள்ளது): இந்தியா ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே அரசியல் கட்சி மற்றும் சாத்தியமான அளவிற்கு ஒரே மதம் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது.

நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்-ன் இந்தியாவைப் பற்றிய பார்வையை ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கைவாதி. அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்கை வெறும் தேர்தல் வெற்றியால் மட்டும் அடைந்துவிட முடியாது, மாறாகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மூலமே சாத்தியப்படுத்த முடியும் என்பதை உணர்ந்த ஒரு நடைமுறைவாதியாகவும் அவர் இருக்கிறார். 2014 முதல் மோடி அரசு எடுத்துள்ள அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் இந்த கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் (யு.சி.சி) ஆகியவற்றுக்கான மோடியின் தீவிரமான ஆதரவு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அரசியலமைப்பின் 73, 162 ஆகிய பிரிவுகள் மற்றும் XI, XII, XIV ஆகிய பகுதிகளின் விதிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்கப்பூர்வமான விளக்கங்கள் மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' (ONOE) திட்டத்தை அமல்படுத்த எடுக்கும் உறுதியான முயற்சி ஆகியவை அனைத்தும் 'விக்சித் பாரத்' எனப்படும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளாகும்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

2014 முதல் 2024 வரை மோடி உச்சத்தில் இருந்தார். 2024 தேர்தலில் இந்திய மக்கள் தனது கட்சிக்கு மக்களவையில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வழங்குவார்கள் என்று அவர் உறுதியாக எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டது - மக்கள் அவருக்கு 240 இடங்களை மட்டுமே வழங்கினர், இது 543 இடங்களைக் கொண்ட அவையில் தனிப் பெரும்பான்மைக்கும் குறைவானது. 2024-க்குப் பிறகு அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் 2029-க்குள் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதற்கானவை. ஒருவேளை பா.ஜ.க அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026-ஐ நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றிருந்தால் என்னவாகியிருக்கும்? பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற போர்வையில், அந்த மசோதா தொகுதி மறுவரையறை மற்றும் தங்களுக்குச் சாதகமாகத் தொகுதிகளை மாற்றி அமைக்கும் (Gerrymandering) பணிகளைத் திணித்திருக்கும். புதிய சட்டங்களும் அவற்றின் அமலாக்கமும் நாட்டின் நிர்வாகத்தில் தென்னிந்திய மாநிலங்களைப் பொருத்தமற்றதாக மாற்றியிருக்கும். மேலும், 2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைச் செயல்படுத்தும் மசோதாக்கள் உள்ளிட்ட பிற அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்ற பா.ஜ.க நாடாளுமன்றத்தைத் திணறடித்திருக்கும்.

2024 மக்களவைத் தேர்தல் வரை, தேர்தல்களில் வெற்றி பெற தன்னிடம் ஒரு வெற்றிகரமான சூத்திரம் இருப்பதாக பா.ஜ.க நினைத்தது - ஒன்பது இந்தி பேசும் மாநிலங்கள், குஜராத் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சி இயந்திரம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு, பண பலம், இணக்கமான ஆளுநர்கள், பயந்த நிலையில் உள்ள அதிகாரிகள், சோதனையிடவும், கைது செய்யவும் மற்றும் வழக்குத் தொடரவும் அதிகாரம் கொண்ட அடங்கிய புலனாய்வு அமைப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட ஊடகங்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நீதித்துறை. முழுமையான அதிகாரத்திற்குத் தடையாக இருந்தது தென்னிந்திய மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மட்டுமே. இதனால்தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' (ONOE) என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டால், அது எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சிதறடித்துவிடும் என்று நான் அஞ்சுகிறேன். பிராந்தியக் கட்சிகளும் காங்கிரஸும் இணைந்ததே எதிர்க்கட்சிக் கூட்டணி. அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில், 2024-ல் செய்தது போல மக்களவைத் தேர்தலில் ஒரு கூட்டணியாக உருவெடுக்கும் திறன் அவர்களுக்கு உண்டு. அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும்; அதுவே மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும். இருப்பினும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது மக்களவை, மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும். இது எதிர்க்கட்சிக் கூட்டணியின் நோக்கத்தையே சிதைத்துவிடும். அதனால்தான், பா.ஜ.க தனது பெரும் திட்டத்தின் மகுடமாக இந்த மசோதாவைப் பார்க்கிறது.

2024 மக்களவைத் தேர்தலின் பாடம் என்னவென்றால், பல கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கிய போதிலும், 240 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க-வை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை. விட்டுக்கொடுத்தல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுடன், 'இந்தியா' கூட்டணி தன்னை விரிவுபடுத்திக் கொள்ளவும், பா.ஜ.க-வுக்குக் கடுமையான சவாலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இறுதியில், மக்களவைத் தேர்தலில் இரண்டு பெரிய கூட்டணிகள் இருப்பது பா.ஜ.க மத்திய அதிகாரத்தைத் தனித்துவமாக ஆக்கிரமிப்பதைத் தடுக்கும், மாற்று அரசியல் தேர்வுக்கான இடத்தை உருவாக்கும் மற்றும் இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் குடியரசு அரசியலமைப்பை நிலைநிறுத்தும்.


source https://tamil.indianexpress.com/opinion/p-chidambaram-writes-a-decisive-moment-in-history-11769249

பொள்ளாச்சி இளநீர் ஏற்றுமதியில் கடும் பாதிப்பு

 

pollachi Coconut

ஈரான்-இஸ்ரேல் மோதலால் ஏற்பட்டுள்ள சரக்குக் கட்டண உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு காரணமாக இந்தியாவின் முக்கிய மையங்களில் ஒன்றான பொள்ளாச்சியிலிருந்து நடைபெறும் இளநீர் ஏற்றுமதி, கடந்த இரண்டு மாதங்களாகத் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

இது குறித்து டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள தகவலின்படி, கப்பல் போக்குவரத்து செலவு திடீரென அதிகரித்துள்ளதாலும், தளவாட ரீதியான நிச்சயமற்ற தன்மையாலும் வெளிநாட்டு வர்த்தகம் சாத்தியமற்றதாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் தேவை நிலையாக இருந்தபோதிலும், கட்டண உயர்வு காரணமாக வேறு வழியின்றி ஆர்டர்களை ரத்து செய்யும் ஏற்படுவதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். .

சரக்கு அனுப்புவதற்கான கப்பல் கட்டணம் ஒரே மாதத்தில் 1.60 லட்சம் ரூபாயிலிருந்து 4.50 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். இதனால் லண்டனுக்கு அனுப்பப்படும் 25 டன் இளநீர், ஆர்டர் நிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இன்னும் ஆர்டர்களை வழங்குகிறார்கள், ஆனால் தற்போதைய சூழலில் அவர்கள் டெலிவரிக்கு பிறகு பணம் செலுத்த விரும்புகிறார்கள். ஆனால் அந்த ரிஸ்க்கை எங்களால் எடுக்க முடியாது என்பதால் பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

முக்கிய கடல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் இந்த நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக லண்டனை அடைய பொதுவாக 18 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது தாமதமாகிறது. மாற்று வழிகளில் செல்லும்போது பயண நேரம் ஒரு மாதம் வரை நீடிக்கிறது. அதேபோல், துபாய்க்கு ஒரு வாரத்தில் சென்ற சரக்குகள், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக இப்போது பயண நாள் 15 நாட்களுக்கு மேலாகின்றன.

இதன் விளைவாக, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. லண்டன், ஜெர்மனி, மொரிஷியஸ், ஜப்பான், கென்யா, ஈரான், கனடா மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதியும் முடங்கியுள்ளது. "துபாயில் இருந்து ஏற்றுமதி குறித்து விசாரித்து வந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாக ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளனர்.

அதே சமயம் தேர்தல் தொடர்பான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை, உரித்தல், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது, இளநீரின் ஆயுட்காலம் ஒரு வாரம் மட்டுமே என்பதால், போக்குவரத்து தாமதம் அதன் தரத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
போருக்குப் பிறகு உரங்களின் விலை உயர்ந்துள்ளது, தொழிலாளர் பற்றாக்குறையும் நீடிக்கிறது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது," ஏற்றுமதி சரிந்தாலும், உள்நாட்டுத் தேவை வலுவாக இருப்பது விவசாயிகளுக்குச் சற்று ஆறுதலாக உள்ளது என்று ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் முதன்மையான இளநீர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக பொள்ளாச்சி இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 86,800 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இளநீரின் உச்சக்கட்ட சீசன் மார்ச் முதல் ஜூன் பாதியளவு வரை ஆகும். பொள்ளாச்சி இளநீர் அதன் இனிப்புச் சுவை மற்றும் அதிக நீர்ச்சத்திற்குப் பெயர் பெற்றது. இளநீர் பண்ணை விலை ரூ. 49 ஆகவும், சில்லறை விற்பனை விலை ரூ. 60 மற்றும் அதற்கு மேலாகவும் உள்ளது.

வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் மற்றும் நீண்ட வறட்சி காரணமாக மகசூல் 25% வரை குறைந்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, உர விலை உயர்வு. வளைகுடா நாடுகள், லண்டன், ஜெர்மனி, மொரிஷியஸ், ஜப்பான், கென்யா, ஈரான், கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி நிறுத்தம். மாற்று கடல் வழித்தடங்களால் பயண நேரம் ஒரு மாதம் வரை நீடிக்கிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pollachi-coconut-export-impact-for-gulf-crisis-ocean-freight-rates-triple-11769418

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

அமைப்பை விளாசிய ராகுல் காந்தி

 

Rashtriya Surrender Sangh

ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விளாசிய ராகுல் காந்தி

அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்தியா வளைந்து கொடுத்தும் இருநாட்டு உறவில் ஏன் விரிசல் நிலவுகிறது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் எழுப்பியுள்ள கேள்வி, தேசிய அளவில் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரும், பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளருமான ராம் மாதவ், அமெரிக்காவின் பல்வேறு கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக்கொண்ட பிறகும், இரு நாட்டு உறவில் விரிசல் நிலவுவது ஆச்சரியமாக இருக்கிறது. உள்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், அமெரிக்காவின் விருப்பத்திற்காக ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டோம். புதிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 18% வரி விதிப்புக்கு ஒப்புக்கொண்டோம். 50% வரி விதிப்புக்கும் உடன்பட்டோம். அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதில் இந்தியா எங்கே தவறியது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராம் மாதவின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாக்பூரில் போலித் தேசபக்தி... அமெரிக்காவில் அடிபணிதல். இதுதான் ராஷ்ட்ரிய 'சரண்டர்' (சரணாகதி) சங்கம். ராம் மாதவ் சங்கத்தின் உண்மையான சுபாவத்தை வெளிப்படுத்திவிட்டார் என்று கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில், ஆர்.எஸ்.எஸ் தேசபக்தி பற்றிப் பேசினாலும், வெளிநாடுகளில் அங்கீகாரத்திற்காக ஏங்குகிறது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் உண்மையில் இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 'கொள்ளை'. இந்திய விவசாயிகளின் நலன்களைப் பலிகொடுத்து, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் முழுமையாக சரணடைந்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து நரேந்திர மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/rashtriya-surrender-sangh-rahul-gandhi-slams-rss-over-ram-madhavs-controversial-us-remarks-11764826

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: தேர்தல் முடிந்த கையோடு மாநகராட்சி அதிரடி

 

Malaikkottai

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் சுற்றியுள்ள ஆக்கிரப்புகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளம் அருகே உள்ள பர்மா பஜார் கடைகளை சிங்காரத்தோப்பில் புதிய இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக அங்கு இருந்த 70 க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. பிறகு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து மீதமுள்ள 20க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்படாமல் அப்படியே செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து இன்று திருச்சி கோட்டை போலீசார் உதவியுடன், மாநகராட்சி நிர்வாகத்தினர் மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பர்மா பஜார் கடைகளை அகற்றினர். 

ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு போதிய அவகாசம் கொடுத்த நிலையில் கடைகள் அகற்றப்படாததால் தேர்தல் முடிந்த கையோடு இன்று கடைகளை அகற்றியது  குறிப்பிடத்தக்கது.




source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-trichy-malaikkottai-shops-and-building-update-in-tamil-11766034

வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு:

 US-3-19

வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சியில், திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் பிற முக்கிய தலைவர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உடனடி காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

25 4 2026

சுமார் 2,600 விருந்தினர்கள் கலந்துகொண்ட அந்த விருந்தின்போது ஹோட்டல் வளாகத்தில் கேட்ட பலத்த சத்தத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினர் உடனடியாக குவிக்கப்பட்டனர். அந்த சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்தனர். மக்கள் மேஜைகளுக்கு அடியில் பதுங்கிப் பாதுகாப்பு தேடிக் கொண்டதாகவும், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிபர் டிரம்ப் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சம்பவம் குறித்து ட்ரூத் சோஷியல்தளத்தில் பதிவிட்ட டிரம்ப், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பிடிபட்டதாகவும், தானும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தச் சம்பவம் ஒரு தனிநபர் நடத்திய வெறிச்செயல் (lone wolf whack job) என்று குறிப்பிட்டார். தாக்குதல் நடத்தியவர் பல ஆயுதங்களுடன் பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்குள் நுழைய முயன்றதாகவும், பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அவர் பிடிபட்டதாகவும் டிரம்ப் விவரித்தார்.



இந்தத் தாக்குதலில் ரகசிய சேவை அதிகாரி ஒருவர் மிக நெருக்கமான தொலைவில் இருந்து சுடப்பட்டார். இருப்பினும், அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத கவச உடையால் உயிர் தப்பினார். அந்த அதிகாரியுடன் தான் பேசியதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். இந்தச் சம்பவத்தை எப்.பி.ஐ உறுதி செய்துள்ளதுடன், சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

New Project

நிகழ்ச்சி மேடையிலிருந்து சுமார் 40 அடி தொலைவில் இருந்த பிபிசி செய்தியாளர், தானியங்கி துப்பாக்கியிலிருந்து வரும் ஒருவித முழக்கச் சத்தம் கேட்டதாகத் தெரிவித்தார். அந்தச் சமயத்தில் மேடையில் இருந்த ராபர்ட் எஃப். கென்னடி உள்ளிட்ட தலைவர்கள் உடனடியாகப் பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியின் செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர், குடியரசுக் கட்சியின் செனட்டர் ரேண்ட் பால் மற்றும் பிரதிநிதி நான்சி மேஸ் ஆகியோர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதாகக் கூறினர்.

செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப், தனது முந்தைய பட்சலர் மற்றும் பாம் பீச் ஆகிய இடங்களில் நடந்த கொலை முயற்சி சம்பவங்களை நினைவுகூர்ந்தார். இந்தச் சம்பவம் மெலனியா டிரம்ப்பிற்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒரு தேதியில் நடைபெறும் என்றார். அப்போது தான் மிகவும் கடுமையாகப் பேசாமல், கண்ணியமான உரையை நிகழ்த்தப் போவதாகவும் டிரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பிடிபட்ட நபர் மற்றும் பாதுகாப்பு கேமரா காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், சமூகத்தைச் சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

source https://tamil.indianexpress.com/india/us-president-donald-trump-evacuated-from-white-house-correspondents-dinner-following-shooting-incident-11766734

சனி, 25 ஏப்ரல், 2026

உங்கள் வாக்கை யோசித்து பயன்படுத்துங்கள்.

 பாசிச முகம் மறைக்கப்பட்டாலும்…

அதுக்குள்ள இருக்கிற உண்மை மறையாது!


பாரதிய ஜனதா கட்சி – பெயர் மட்டும் மாறலாம்…

ஆனா செயல் மாறல!


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – என்பது பாஜகவின் முகத்திரை மாத்திரம்!


“பாஜக வந்துடும்”ன்னு சொல்வது பூச்சாண்டி கதையில்லை…

நடந்த வரலாறு தான்… நினைவில் இருக்க வேண்டிய உண்மை!

பல்கிஸ் பானு வழக்கு – நீதிக்கு கேள்விக்குறி!

கோத்ரா ரயில் எரிப்பு – தீயின் தொடக்கம்!

குஜராத் கலவரம் – மனிதத்தன்மையின் அழிவு!

இது எல்லாம் கதையில்லை…

இது நடந்த உண்மை!


இப்போ தமிழகத்துலவும்…

திருப்பரங்குன்றம் மாதிரி இடங்களில்

அதே விதமான அரசியல் நடக்குது!

புறக்கணிப்போம் பாஜக கும்பலை...


இன்னொரு கும்பல் சுத்துது  ஒருமுறை மட்டும் ஓட்டு போடுங்க  என்று சொல்லி சுற்றும் கும்பலை நம்புவது சாதாரண விஷயம் இல்லை — அது ஒரு வலை.


ஒரு வாக்கு என்பது ஒரு நாளுக்கான முடிவு இல்லை…

அது ஐந்து ஆண்டுகளுக்கான உங்கள் வாழ்க்கை, உங்கள் குடும்பம், உங்கள் உரிமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி.


“ஒரு முறை மட்டும்” என்று கேட்பவர்கள்,

அந்த ஒரு முறைக்குப் பிறகு உங்களை நினைப்பார்களா?

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவார்களா?

அல்லது மறுபடியும் அடுத்த தேர்தல் வரைக்கும் காணாமல் போய்விடுவார்களா?


வாக்கு என்பது பரிசு இல்லை — பொறுப்பு.

அதை யாரோ சொன்னதற்காக போடக்கூடாது.

யார் உங்களுக்கு வேலை செய்திருக்கிறார்கள்,

யார் உங்கள் பகுதியை முன்னேற்றியிருக்கிறார்கள்,

யார் உண்மையாக உங்கள் பக்கம் நிற்கிறார்கள் — அதை பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.


“ஒரு முறை மட்டும்” என்று சொல்வது,

உங்களை ஒரு முறை ஏமாற்றுவதற்கான திட்டம் தான்.

25 4 2026 

ஆகையால்,

அந்த மாதிரி வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள்.

உங்கள் வாக்கை யோசித்து பயன்படுத்துங்கள்.

ஏமாற்றத்துக்கு வாக்கு போடாதீர்கள்.

ஓட்டுகேட்டு நமது வீடுகளுக்கு வரதவர்கள் எப்படி நம் குறைகளை கேட்க, தீர்க்க போகிறார்கள் சிந்தியுங்கள்..

திருத்தப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம்!

 திருத்தப்பட வேண்டிய முஸ்லிம் சமூகம்!

25 04 2026


உல்லாச வாழ்க்கையில் ஊறிக்கிடந்த சினிமா நடிகர் விஜய்க்கு பதவி ஆசை காட்டி அவரை பாஜகதான் களத்திற்கு கொண்டு வந்தது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.


பாஜகவிற்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக்குச் செல்லும் வாக்குகளைத் தனியாகப் பிரித்து அதன் மூலம் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை அதிகரிப்பது மட்டும்தான் இதன் நோக்கமாக இருக்கிறது.


ஏற்கனவே நடிகர் ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வந்து அதன் மூலம் வாக்குப்பிரிப்பு வேலையைச் செய்வதற்கு பெரு முயற்சி எடுத்து தோல்வி அடைந்த பாஜக விஜய் விஷயத்தில் கவனமாக செயல்பட்டு அவரை களத்தில் இறக்கி விட்டது.


நடிகர் விஜய்யை பாஜகதான் களமிறக்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தும் கூட பல இஸ்லாமியர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.


இஸ்லாமியப் பெண்கள், குறிப்பாக இஸ்லாமிய இளம்பெண்கள் எது எப்படிப் போனாலும் பரவாயில்லை நாங்கள் விஜய்யைத்தான் ஆதரிப்போம் என்று சொல்வதைக் காண முடிகிறது.


எக்ஸாம் போனாலும் பரவாயில்லை நான் விஜய்யைப் பார்க்க வந்தேன் என்று பர்தா அணிந்த பெண்கள் சொல்வதும், விஜய்யைப் பார்த்துவிட்டு கண்ணீர் வடித்து அழுவதும், துள்ளிக் குதித்து ஆடுவதும், இன்னும் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு நான் பல காலமாக நடிகர் விஜய்யின் ரசிகர் என்று சொல்வதும், ஒருசில இஸ்லாமியப் பெண்கள் எங்கள் கணவனை விட விஜய்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அது அவருக்கும் தெரியும் என்று சொல்வதும், நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு உலமாக்கள் அணி அமைக்கப்பட்டதும் இந்த சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கேள்வி எழுப்ப வைத்துள்ளது.


திருக்குர்ஆனும், ஹதீஸும் மட்டும்தான் நேர்வழி தரக்கூடியது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சினிமா கூத்தாடியின் பின்னால் சென்று கொண்டிருக்கும் சமூகத்தை யார் நேர்வழிக்கு கொண்டு வருவது? நடிகர் விஜய்யை பாஜகதான் களமிறக்கியுள்ளது என்று சொன்னால் அதனால் என்ன தவறு? என்று விஜய் ஆதரவு இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் .


விஜய் வெற்றி பெற்றால் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பார் என்று சொன்னால், அதனால் என்ன பிரச்சினை? என்று கேட்கிறார்கள்.


இஸ்லாமியர்களை விஜய் பல சினிமாக்களில் தீவிரவாதியாகக் காட்டி குத்திக் குதறியுள்ளார். கடைசியாக அவர் நடித்த ஜனநாயகன் படத்தில் முஸ்லிம்களை மிக பயங்கரவாதிகளாக காட்டியுள்ளாரே! என்று விஜய்யை ஆதரிக்கும் முஸ்லிம்களிடம் கேள்வி எழுப்பினால், இதற்கு முன்னால் முஸ்லிம்களை யாரும் பயங்கரவாதிகளாக சினிமாவில் காட்டவில்லையா? விஜய்யை மட்டும் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்? என்று உயிரோடும், உணர்வோடும் விஜய்யை நினைத்து சில பெயர் தாங்கி இஸ்லாமியர்கள் ஆட்டம் போடுவதைக் காண முடிகின்றது.


இந்த கொடூரத்தைப் பார்த்து கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை.


இந்த கூமுட்டை கூட்டத்திற்காகவா வெயிலிலும், மழையிலும் கிடையாய்க் கிடந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடினோம்? இந்த கூமுட்டைக் கோமாளிகளுக்கும் சேர்த்துத்தானே குடியுரிமை கேட்டுப் போராடினோம்? ஆனால் நம் போராட்டங்களின் வீரியத்தை அடியோடு உடைக்கும் அளவிற்கு இந்த பெயர் தாங்கிகளின் செயல் அமைந்திருக்கிறதே!.


ஒரு சினிமா கூத்தாடிக்காக சமுதாயத்தை அடகு வைத்துவிட்டு மார்க்கத்தை பணயமாக்கிவிட்டு பாதை மாறி நடந்து கொண்டிருக்கும் இந்த பெயர் தாங்கி இஸ்லாமியர்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை?


இன்னும் சில முஸ்லிம்கள் பல தொகுதிகளில் நாதக, தவெக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்களிக்க பிறரையும் வலியுறுத்தியுள்ளார்கள்.


நம்ம சமுதாய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் வாக்கு சேகரித்ததையும் பார்க்க முடிந்தது. ஆனால் கடைசிவரை அதற்குள் இருக்கும் அரசியல் சூட்சமத்தை மக்கள் புரிந்து கொள்ளவே இல்லை.


முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி அதன் மூலம் திமுகவிற்குச் செல்லும் இஸ்லாமிய சமூகத்தின் வாக்குகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் போன்றவர்கள் முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்கள்.


இஸ்லாமிய வேட்பாளர்கள் தவிர்த்து அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது எவ்விதமான அக்கறையும் கிடையாது. அவர்களுடைய நோக்கம் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை தேடித் தர வேண்டும் என்பது மட்டும்தான்.


இப்படியாக கண்மூடித்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கும் ஒருசில பெயர்தாங்கி இஸ்லாமியர்கள் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை .


இது போன்ற சமுதாய பொறுப்பற்ற பெயர் தாங்கிகள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் பல நேரங்களில் தலை குனிந்திருப்பதையும் இங்கே நினைவு படுத்த வேண்டியுள்ளது.


இவர்களைப் போன்ற தற்குறிகளை அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர்த்து இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவராக எந்த நிலையிலும் பார்க்கக் கூடாது.


இதுபோல சரியான பாதை தெரியாமல் சினிமா கூத்தாடிக்குப் பின்னால் சென்று இம்மையையும், மறுமையையும் இழந்து கொண்டிருக்கும் இந்த இஸ்லாமிய இளம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சரியான மார்க்கத்தை மீண்டும் மீண்டும் போதிக்க வேண்டியது சமூகத்தின் கடமை என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள வேண்டியுள்ளது.

நரகக் குழி'... இந்தியாவை விமர்சித்த டிரம்ப்;

 இந்தியாவையும் சீனாவையும் "பூமியில் உள்ள நரகம்" என்று வர்ணிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்த கருத்துக்கு கடும் எதிர்வினைகள் கிளம்பி வருகிறது. டிரம்ப்பின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த கருத்துக்கள் "அறிவற்றவை" மற்றும் "மிகவும் தரம் தாழ்ந்தவை" என இந்திய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது.

23 4 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை பற்றி பழமைவாத எழுத்தாளரும் வானொலி தொகுப்பாளருமான மைக்கேல் சாவேஜ் எழுதிய ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். அதில், புலம்பெயர்ந்தோர் கர்ப்பத்தின் "ஒன்பதாவது மாதத்தில்" அமெரிக்காவிற்கு வருவதன் மூலம் உள்ளூர் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, தற்போதைய சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று சாவேஜ் விமர்சித்துள்ளார்.

டிரம்ப் பகிர்ந்த மைக்கேல் சாவேஜின் அறிக்கையில், "இங்கே ஒரு குழந்தை பிறந்ததும் குடிமகனாகிறது. பின்னர் அவர்கள் சீனா அல்லது இந்தியா அல்லது உலகின் ஏதோ ஒரு நரகக் குழியிலிருந்து முழு குடும்பத்தையும் அழைத்து வருகிறார்கள். அதைக் காண நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. இங்கே இப்போது ஆங்கிலம் பேசப்படுவதில்லை"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. மும்பையில் அமைந்துள்ள ஈரான் துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் மும்பையின் புகழ்பெற்ற கணேசா உத்சவத்தின் பல்வேறு காட்சிகளைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், "யாராவது டிரம்பிற்கு கலாசார ரீதியாகத் தெளிவுபெற ஒரு பயணத்தை முன்பதிவு செய்ய வேண்டும். அது ஒருவேளை அவரது அறியாமையை கொஞ்சம் குறைக்கக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் ஐதராபாத்தில் உள்ள ஈரானிய துணை தூதரகம், மும்பை தூதரகத்தின் பதிவைப் பகிர்ந்து, "மும்பையில் எங்களுக்குப் பிடித்தவை என்ன? டீயுடன் பன் மஸ்கா, வடை பாவ் மற்றும் பாவ் பாஜி போன்ற இவை மூன்றும் ஒரு மோசமான நாளை சரிசெய்யக் கூடியவை. நாங்கள் ரொட்டியையும் மரியாதையையும் நம்புகிறோம், ஆனால் தென்னிந்தியாவிற்குள் நுழைந்துவிட்டால்... அது ஒரு தனி ரகம். இந்தியா தனது 'சொர்க்க நிலையை' அடைந்தது போல இருக்கும். அது இன்னும் அழகானது"என்று கூறியுள்ளது. 

ஈரானிய துணைத் தூதரகம் மற்றொரு பதிவில், "சீனாவும் இந்தியாவும் நாகரிகத்தின் தொட்டில்களாக இருந்துள்ளன. உண்மையில், நரகம் என்பது போர்-குற்றவாளியான அதிபர், இரானின் நாகரிகத்தை அழிப்பதாக அச்சுறுத்தும் இடமாகும்"என்று கூறியிருக்கிறது.



source https://tamil.indianexpress.com/international/iran-cultural-detox-jibe-at-trump-over-hell-hole-remark-tamil-news-11760914

தமிழகம், மேற்கு வங்கத்தில் வாக்கு சதவிகிதம் உயர இதுதான் காரணமா?

 வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிகுந்த நம்பிக்கையுடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத் தேர்தலின் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில், அதில் 110-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறினார். இரண்டாம் கட்டத் தொகுதிகளையும் சேர்த்து, கட்சி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களிடம் இருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில், முதற்கட்டத்திலேயே வங்காள மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிட்டனர்... 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளில் 92.88% வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது 'தீதி' (மம்தா பானர்ஜி) வெளியேறுவதையும், பாஜக உள்ளே வருவதையும் தெளிவாகக் காட்டுகிறது.

அச்சம் நீங்கி, நம்பிக்கை பிறக்கும். நேற்று (வியாழக்கிழமை) இரவு எங்கள் கட்சித் தொண்டர்களுடன் நடத்திய உள் மதிப்பீட்டிற்குப் பிறகு, 152 இடங்களில் 110-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக வெல்லும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்று அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறினார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவர பாஜக காட்டும் ஆர்வம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) வாக்கு சதவீதத்தை 3% முதல் 5% வரை உயர்த்தக்கூடும் என கூட்டணி வட்டாரங்கள் கருதுகின்றன.

இதனை 2025 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற உதவிய ரூ.12.5 லட்சம் வரையிலான வருமான வரி விலக்கு அறிவிப்புடன் சில தலைவர்கள் ஒப்பிடுகின்றனர். தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பெண் வாக்காளர்களின் தாக்கம் அதிகம் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்த இடஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததை ஒரு முக்கிய தேர்தல் பிரச்சாரமாக பாஜக மாற்றியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் (RSS) ஆதரவுடன், மே மாதம் தொடக்கம் வரை 15 நாட்கள் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 17 அன்று அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் தோல்வியடைந்த அடுத்த நாளே, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை மையப் பொருளாக மாற்றினார். ஏப்ரல் 18 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர்:

"எங்கள் சகோதரிகள் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திமுக, காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவை வெறுப்புக்கு உள்ளாக்கின. இந்த மசோதா முன்பே நிறைவேற்றப்பட்டிருந்தால், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பல தமிழ் பெண்கள் இன்று எம்.பி-க்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் இருந்திருப்பார்கள்," என்று குறிப்பிட்டார்.

சாதனை படைத்த வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள்

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்த முறை சாதனை அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது:

தமிழ்நாடு: 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன (2021-ல் இது 73.6%). இதில் பெண்களின் வாக்குப்பதிவு 85.76% ஆகவும், ஆண்களின் வாக்குப்பதிவு 83.57% ஆகவும் உள்ளது.

மேற்கு வங்கம்: முதற்கட்டத் தேர்தலில் 92.88% வாக்குகள் பதிவாகியுள்ளன (2021-ல் இது 82.3%). இங்கும் பெண்களின் வாக்குப்பதிவு (92.69%) ஆண்களை விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 5.67 கோடி வாக்காளர்களில் பெண்கள் (2.89 கோடி) ஆண்களை விட (2.77 கோடி) எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பெண்களால் வழிநடத்தப்படும் தேர்தல் முறையைக் கொண்டவை. எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்ட பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நாங்கள் மக்களிடம் கொண்டு சென்ற கருத்துக்கள், பெண் வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன," என்று தெரிவித்தனர்.



source https://tamil.indianexpress.com/india/tamil-nadu-assembly-polls-record-voting-womens-reservation-bill-2026-nda-vote-share-bengal-tamil-nadu-11763541