வெள்ளி, 17 அக்டோபர், 2014

பெண்கள்- திருக்குர்ஆன்

*** திருக்குர்ஆன் ***
தமிழாக்கம் : பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.


அத்தியாயம் : 4

அன்னிஸா - பெண்கள்
மொத்த வசனங்கள் : 176

மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.

பெண்களின் சொத்துரிமைகுடும்ப வாழ்க்கைவிவாகரத்துபோன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது "பெண்கள்எனும் பெயர் பெற்றது.



அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ...

160, 161. யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26
162. எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும்நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.
163. நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.
164. (முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.488
165. தூதர்களை அனுப்பிய பின்னர் அல்லாஹ்வைக் குறை கூற மனிதர்களுக்கு எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதற்காக நற்செய்தி கூறி, எச்சரிக்கும் தூதர்களை (அவன் அனுப்பினான்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
166. எனினும் (முஹம்மதே!) அல்லாஹ் உமக்கு அருளியதற்கு அவனே சாட்சியாக இருக்கிறான். தனது விளக்கத்துடன் அதை அவன் அருளினான். வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
167. (ஏகஇறைவனை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்போர், (உண்மைக்கு வெகு) தூரமான வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.
168, 169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490 நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.26