Breaking News
Loading...
புதன், 19 நவம்பர், 2014

Info Post
ஏக இறைவனின் திருப்பெயரால்....அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கொள்கையற்றவர்கள் யார் என்ற தலைப்பில் அதிராம்பட்டிணத்தில் நான்கு நாட்கள் விவாதம் நடந்ததை அறிவீர்கள். அது தொடர்பாக நமக்கு பலரும் எழுதி கேட்டதால் சில தகவல்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

வெற்றுக் கூடாரத்தை நிரப்ப விவாத விளம்பரம்.
சூனியம் என்ற (இல்லாத ஒன்று) கடந்த அகோரி மணிமகண்டனுடைய இமாலய தோல்வியுடன் தமிழ் நாட்டில் சூனியம் ஞான சூனியமாகி (முடிவுக்கு வந்து) விட்டது. தமிழ்நாட்டில் உள்ள மக்களில் முஸ்லிமல்லாதோரும் கூட இதை ஏற்றுக்கெண்டனர். சூனியம் என்பது வெறும் 'பீலாதான் என்றும்சூனியத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலம் சூனியம் வைக்கப்பட்டு விட்டது என்று தெளிவாக ஊடகங்களும் எழுதி முடித்து வைத்து விட்டன.

ஆனால் இதை இலங்கையில் உள்ள சில ஆலிம்கள் (எல்லோரும் அல்ல) ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அவர்கள் தங்களுடைய சூனியம் உண்டு என்ற கொள்கையை மீண்டும் தமிழகத்தில் விதைத்து மறு குழப்பத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்ற திட்டம் அவர்களிடம் இருந்தது. அதை செய்வதற்கு அதிரை தாருத்தவ்ஹீத் என்ற சூனியக் கூடம் வழிவகுத்துக் கொடுத்துள்ளது. தாருத்தவ்ஹீத் காரர்களுக்கு பல வருடங்களாக காலியாக கிடந்த வெற்றுக் கூடாரத்தை இந்த விவாத விளம்பரம் மூலமாக ததஜவின் எதிர்ப்பாளர்களைக் கொண்டு நிரப்பி விடுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.

ரஷாதி வியாதி
சும்மாக் கிடந்த என்னை இந்தளவுக்கு மக்களிடம் பிரபலடுத்தியதற்கு காரணமே பீஜே அவர்கள் தான். விரட்டி விரட்டிப் பிடித்து என்னை இந்த விவாத மேடையில் அமரச் செய்து விளம்பரம் தேடித் தந்து விட்டார் அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று செய்ஃபுதீன் ரஷாதி அறிவித்ததிலிருந்து ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த பல செல்லாக் காசுகள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து எங்களையும் விளம்பரப்படுத்தி விடுங்கள் என்று வீதியில் நின்றுக் கொண்டு ஒப்பாறி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதில் ஒன்று தான் தாருத்தவ்ஹீத் கார்களின் இந்த விவாத எற்பாடும் அடங்கும் அதற்காகத்தான் இதை ரஷாதி வியாதி என்கின்றோம்.

சூனியத்துக்கு நாங்களும் எதிரானவர்களே !.
1984லேயே நன்பர் பீஜே அவர்களுடைய சூனியம் தொடர்பான விளக்கதை கேட்டு தெளிவு பெற்று அப்பொழுதே சூனியம் இல்லை என்ற பிரச்சாரத்தை நானே கையிலெடுத்து செய்தேன் என்கிறார் ஜமீல் பிறகு ஏன் இந்த விவாதம் ?. அது தான் நீ மாவு கொடு நான் அப்பம் தருகிறேன் எனும் இலங்கை சூனியக் காரர்களுடனான இவர்களுடைய மறைமுக ஒப்பந்தம்.
நான்கு நாட்களும் அதிகம் பேசப்பட்டவை சூனியம் தொடர்பானவை தான் அதுவும் அரைத்த மாவையே அரைக்கிறீர்களே என்று வெட்கமில்லாமல் அந்த அணியினர் சொல்லிக் கொண்டே வந்தது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் இவர்கள் அரைத்தனரா அல்லது ததஜ தாஇகள் அரைத்தனரா ?. கடந்த ரமலான் தொடர் உரையில் சகோ: பீஜே அவர்கள் பத்து நாட்கள் தெளிவுப்படுத்தி விட்டு 50 லட்சமும் பரிசு அறிவிக்கப்பட்டு அதை ஏற்று ஒருவர் தோற்கவும் செய்து விட்டார் மேட்டர் ஓவர்.  இதன் மூலமாக அரைத்து அவித்து கொடுத்து சாப்பிட்டு முடிந்தப் பின் மாவு அரைக்கப் போதவில்லை என்று பிதற்றுவது ஜமீல் அவர்களின் அறியாமையின் உச்சக்கட்டம் ?.

கொள்கையற்றவர்கள் யார் ?.
அடுத்தது இவர்கள் நம்மைப் பார்த்து கொள்கையற்றவர்கள் என்றுக் கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

இவர்கள் பத்து பேர் இருந்து கொண்டு அதற்கு அமைப்பு என்று பெயர் வைத்துக்கொண்டுபல லட்சக்கணக்கான ஊறுப்பினர்ளைக் கொண்டு உலகம் முழுவதிலும் பல நூறு கிளைகளைக் கொண்ட மாபெரும் மக்கள் பேரியக்கத்தை கொள்கையற்றவர்கள் என்றுக் கூறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு வானை நோக்கி உமிழ்ந்ததாக கருதப்படாதா ?.

தவ்ஹீத் கொள்கையில் முக்கியமானது ஏகஇறைவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கலாகாது 
என்பது தலையாய அம்சம். சூனியத்தை எந்த வழியில் நம்பினாலும் இணைவைப்பில் சேரும் என்று பொட்டிலறைந்தாற்போல் ரமலான் தொடர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதங்கள் யூதன் செய்த சூனியத்தால் அறிவை இழந்து முன்னுக்குப் பின் முரனாக பிதற்றிக் கொண்டிருந்தார்கள் என்றுக் கூறுவது தான் கொள்கையா ?.

1984ல் சூனியத்திற்கு எதிரான நம்பிக்கை 2014ல் சூனியத்திற்கு ஆதரவான நம்பிக்கையாக மாறியது எப்படி ?. இதன் மூலமாக தாருத்தவ்ஹீதுக்கு கூலிக்கு மாறடிக்க இலங்கை காரர்கள் வந்தார்களா ?. இலங்கை காரர்களுக்கு கூலிக்கு மாறடிக்க தாருத் தவ்ஹீத் களம் அமைத்தார்களா ?.

கடிதத்தில் ஸலாம் இல்லை.
அவர்களுக்கு பதில் எழுதிய கடிதத்தில் சில கடிதங்களில் ஸலாம் இருக்கிறது சில கடிதங்களில் இல்லை. ஒட்டு மொத்த கடிதங்களிலும் இல்லை என்பது பொய். இதை வைத்துக் கொண்டு நாம் ஸலாத்திற்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு முனைகின்றனர்.

தமிழகத்திலேயே முதல் முதலாக இந்த ஸலாத்தை கடிதங்களிலும் பரப்ப வேண்டும் என்றுக் கூறி ஏகஇறைவனின் சாந்தியும்சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாகஏகத்துவ சிந்தனையில் இக்கடிதம் உங்களை சந்திக்கட்டுமாக என்று கடிதங்களில் கூட ஸலாத்தையும்தவ்ஹீதையும் அழகிய முiறியல் அiஅமத்துப் பரப்பியது தவ்ஹீத் ஜமாத் தான் என்பதை உலகறியும்.
இஸ்லாம் கூறுகின்ற அனைத்து நற்செயல்களையும் தங்களுக்கும் நடைமுறைப்படுத்திக் கொண்டு மக்களுக்கும் ஏவுவதற்கு ஆர்வமூட்டியது இந்த தவ்ஹீத் ஜமாத் தான். இன்று இவர்கள் இந்த மேடையில் உட்கார்ந்து கொண்டு ஒன்றிரெண்டு குர்ஆன் -ஹதீஸை கூறுகின்றார்கள் என்றால் அதை இந்த ததஜவில்  இருந்து கற்றுக்கொண்டது தான்.

மஞ்சள் பத்திரிகைக்கு நிகரான அதிரை வவெத இணையதளம் ?,
இவர்களை அதிரை ததஜ இணையதளத்தில் மஞ்சள் பத்திரிகை ரேஞ்சில் எழுதி உள்ளதாகவும்பல இடங்களில் வால்போஸ்டர்கள் மூலம் சீண்டியதாகவும் இதனால் தான் விவாதத்திற்கு ஏற்பாடு செய்தது போலவும் ஒரு மாயையை தோற்றுவிக்கின்றனர்;. உண்மை அதுவல்ல ஜமீல் ததஜவுடன் ஒற்றுமையாக இருக்கும் போதே தாருத்தவ்ஹீதை ஆரம்பித்தார். 

எந்த சிறிய மனஸ்தாபமும் ஏற்படாமல் மாநில தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் போதே மாநில தலைமையின் அனுமதிப் பெறாமல் தனி அமைப்பு கண்டு அதில் நிகழ்ச்சிக்கு (சாரா கல்யாண மண்டபத்தில்) ஏற்பாடு செய்து மாநில தலைமையிலிருந்து தாஇக்களை கேட்டார்மாநிலத் தலைமை திட்டவட்டமாக மறுத்து விட்டது. அதில் ஜமீல் கடுப்பானார்.

1997ல் சகோ: அமீன் தலைமையில் நான் உட்பட அண்ணன் அவர்களை வைத்து ஏகத்துவ எழுச்சி மாநாடு நடத்தியபோது தாருத் தவ்ஹீதின் நகரச் செயலாளர் சகோ: தமிமுன் அன்சாரி அண்ணன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்க வந்தார் அப்பொழுது அண்ணன் அவர்களுடன் நானும் இருந்தேன்.

அப்பொழுது அண்ணன் அவர்கள் நீங்கள் இவ்வாறு தவ்ஹீத் ஜமாத்திற்கு ஆதரவாளர்களாக இருந்துக் கொண்டு தனியாக அமைப்பு நடத்துவது சரி அல்ல என்று தமீம் அன்சாரி அவர்களிடம் அட்வைஸ் செய்தார்கள். ஏற்க மறுத்தனர் அது இன்று விபரீதமாக மாறியதை நான் காண்கினறேன். இவர்களுடைய இந்த அமைப்பை மாநிலத் தலைமை ஏற்றிருந்தால் இன்று இலங்கை சூனியகாரர்களுக்கு கூஜா தூக்கி இருக்க மாட்டார்கள்.

ஜமாலியாக மாறிய ஜமால்.
ஒரே நாளில் முடிய வேண்டிய ஒன்றுமில்லாத இந்த விவாதத்தை முடிய விடாதவாறு தடுத்துக் கொள்ளும் வேலை(?)யை ஜமால் கையிலெடுத்துக் கொண்டு ஜமாய்த்து விட்டார்.

கேட்டதற்கெல்லாம் தௌளத் தெளிவாக பதிலளித்தப் பின் சேக் அப்துல்லாஹ் ஜமாலி ஸ்டைலில் இன்ன இன்ன கேள்விகள் கேட்டோம் இதுவரை பதில் இல்லை என்று வெட்கப்படாமல் பொய் சொல்லிக் கொண்டே நான்கு நாட்களை இழுத்தடிப்பதற்கு துபாயிலிருந்து ஸ்பெஷலாக இவரை வரவழைத்துள்ளார் ஜமீல் அவர்கள்.

அரைத்த மாவை திருப்பி அரைப்பது யார் ?
ராஜேந்தர்தேவநாதன் மேடையில் ஏற்றியது எப்படி இதற்கெல்லாம் பதிலளிக்கப்பட்டு எத்தனை மாதங்கள்எத்தனை வருடங்கள் ஆகி விட்டன ?.

தங்களைப் பற்றி மட்டும் எங்காவது எழுதி இருக்கிறதா என்று நோட்டமிடுவது மட்டும் தான் அமைப்பு நடத்துபவர்களுக்கு அழகா ?. இவைகளுக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டு விட்டன. இருந்தும் இதிலும் பதிலளித்து நேரம் வீணடிக்கப்பட்டுள்ளன. தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த வீணர்களுக்காக நான்கு நாட்கள் வீணடிக்கப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.

கொள்யைற்றவர்களும்கையாளாகதவர்களும் இவர்கள் தான்.
இவர்கள் கையாளாகாதவர்கள்கொள்கையற்ற்வர்கள்நேர்வழி பொற்றபின் தடம் புரண்டவர்கள் உறுதியாக இவர்கள் தான் என்பதற்கு இவர்களுடைய கொள்கையை எடுத்துச் சொல்ல கூலிக்கு மாரடிக்க கடல் கடந்து இறக்குமதி செய்ததும்சூனியத்தை தாங்கிப் பிடித்ததும் தெளிவான சான்றுகள்.எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!81 எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.3:8 திருக்குர்ஆனில் இடம் பெறும் இந்த துஆவை இவர்கள் அதிகமாக ஓத வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

சில நேரங்களில் அகிலங்களின் அதிபதியாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிரியைக் கொண்டே உண்மையை வெளிக் கொண்டு வந்து விடுவான். அவன் சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சிறந்த சூழ்ச்சிக் காரனல்லவா ?.
கூலிக்கு மாரடிக்க வந்தவர்களில்  ஒருவர் ஹூதைஃபா (ரலி) அவர்கள் அறிக்கக் கூடிய ஹதீஸை அறிவித்தார்.

பிந்தைய காலத்தில் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள் என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லாமல் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள் என்றால் என்ன செய்வது என்று கேட்டேன். ஆதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு விலகி  ஒதுங்கிவிடுஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்துஅதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக் கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே) என்று பதிலளித்தார்கள். என்று கடுமையான சப்தத்துடன் உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.

ததஜவிலிருந்து பாடம் பயின்று அதன் கூட்டமைப்பையும்அதன் தலைவரையும் பற்றிப் பிடிக்கால் தனியே பிரிந்து மக்களை நரக வாயிலை நோக்கி அழைக்கும் தாருத்தவ்ஹீதை தாங்கிப்பிடிக்க எப்படி இவர் கடல் கடந்து வந்தார்.

கொள்கையற்றவர்களுடன்கொள்கையற்றவர்கள்.
இவர்களுக்காகத் தான் அல்லாஹ்வின் தூதுர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால்அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச்சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள்...இவர்கள் மக்களிடத்திலே பிரிவினையை ஏற்படுத்தப் படுவார்கள் என்றும் எச்சரித்துக் கூறினார்கள். புகாரி 3610.

அதனால் அவர்களின் வெற்றுக் கூடாரத்தை நிரப்புவதற்கு ரஷாதி வியாதி இவர்களை பற்றிப் பிடித்துக் கொண்டது அதனடிப்படையில் தான் இந்த விவாத விளம்பரம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

Reported by Adirai Farook