திங்கள், 24 நவம்பர், 2014

Quran & Hadis

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர்
ஒவ்வொரு நாளும் (தமது உடலிலுள்ள)
ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம்
செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும்
ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்)
தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-
அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும்.
ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி'யும் (-
லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப்
பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-
அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும்
தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே!
இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில்
(ளுஹா) இரண்டு ரக்அத்கள்
தொழுவது போதுமானதாக அமையும்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் 1302


_______________
நம்பிக்கை கொண்டோரே! உங்களின்
பொருட்செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின்
நினைவை விட்டு உங்களை திசை திருப்பி விட
வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம்
உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்)
செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம்
வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா?
தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே''
என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
அல்குர்ஆன் 63:9,10