செவ்வாய், 17 மார்ச், 2026

8 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: நாடாளுமன்றத்தில் 'லட்சுமண ரேகை' உடன்பாடு - எதனால் இந்த மோதல்?

 

8 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: நாடாளுமன்றத்தில் 'லட்சுமண ரேகை' உடன்பாடு - எதனால் இந்த மோதல்? 17 3 2026


Congress Protest 2

நாடெங்கும் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எம்.பி.க்கள் ஹிபி ஈடன், பிரசாந்த் படோலே, சாமலா கிரண் குமார் ரெட்டி, அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர் மற்றும் பிறர். Photograph: (ANI Photo)

மக்களவையின் கண்ணியத்தைப் பேணுவதென சபை தீர்மானித்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 3-ம் தேதி "கட்டுப்பாடற்ற நடத்தைக்காக" இடைநீக்கம் செய்யப்பட்ட 8 உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய செவ்வாய்க்கிழமை சபை ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வரிசைகளுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

சபை நடவடிக்கைகளின் போது "லட்சுமண ரேகையை" தாண்ட மாட்டோம் என்றும், சபையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். குரல் வாக்கெடுப்புக்குப் பிறகு இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், குர்ஜித் சிங் ஆஜ்லா, ஹிபி ஈடன், சி. கிரண் குமார் ரெட்டி, டீன் குரியகோஸ், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், பிரசாந்த் படோலே மற்றும் சி.பி.ஐ(எம்) கட்சியைச் சேர்ந்த எஸ். வெங்கடேசன் ஆகிய 8 பேரும் பிப்ரவரி 3 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

மக்களவை காங்கிரஸ் தலைமைச் கொறடா கே. சுரேஷ், இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார். "அவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன்... நேற்று நீங்கள் ஒரு கூட்டத்தை நடத்தினீர்கள். அதில் நாங்கள் விரிவாக விவாதித்தோம்... அதன்படியே முடிவு எடுக்கப்பட்டது," என்று சுரேஷ் கூறினார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ் பேசுகையில், ஆளுங்கட்சியும் சபையின் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும் என்றார். "8 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன்... ஆளுங்கட்சியினர் இங்கே நிபந்தனைகளை விதிக்கிறார்கள். சபையின் கண்ணியத்தைப் பேணுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பு. எனது கட்சி மற்றும் எனது தலைவர் அகிலேஷ் யாதவ் சார்பில், நாங்கள் ஒருபோதும் சபையின் கண்ணியத்தைத் தாண்ட மாட்டோம் என்று உறுதி கூறுகிறேன். ஆனால், ஆளுங்கட்சியினரும் இதைச் செய்யத் தீர்மானிக்க வேண்டும். அது இல்லாமல் சபை நடக்காது. நிஷிகாந்த் துபே தனது நடத்தையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று யாதவ் கூறியது சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டாம் என்று உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த துபே, "நான் 17 ஆண்டுகளாக இந்தச் சபையில் உறுப்பினராக இருக்கிறேன். நான் ஒருபோதும் எல்லையைத் தாண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் இந்தச் சபை நடக்காது," என்றார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) உறுப்பினர் சுப்ரியா சுலே, இரு தரப்பு உறுப்பினர்களும் தனிப்பட்ட விமர்சனங்களைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். "நேற்றைய முடிவின்படி 'லட்சுமண ரேகை' தாண்டப்படக்கூடாது. நாங்கள் முயற்சிப்போம். ஆனால் ஆளுங்கட்சி வரிசை தயாராக இல்லை. நான்கு அமைச்சர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்," என்று சுலே கூறினார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், சுலேவின் கருத்தை ஏற்றுக்கொண்டு 'லட்சுமண ரேகை' தாண்டப்படக்கூடாது என்றார். "ஒரு கையால் தட்ட முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், விவாதங்களுக்கு ஆளுங்கட்சி எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். "நேற்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். இன்று சபையில் பேசியபோது, சில வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் தயக்கம் காட்டினர். நான் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன், சபையின் கருத்து குறித்துத் தெளிவு இருந்தால், நான் தீர்மானத்தைக் கொண்டு வரத் தயார்," என்று கூறினார்.

"நாங்கள் கடந்த காலத்திலும் விதிகளையே பின்பற்றினோம், எதிர்காலத்திலும் அதையே செய்வோம்," என்றும் ரிஜிஜு கூறினார்.

பின்னர் காங்கிரஸின் கே. சுரேஷ் கூறுகையில், "நேற்று முதல் பதாகைகள் ஏந்தப்படவில்லை. மகர் துவாரில் போராட்டமும் இல்லை. நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், ஆளுங்கட்சிக்கு வழங்கப்படுவது போலவே எதிர்க்கட்சி வரிசைக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது எல்லாம் சரியாகிவிடும்," என்றார்.

சபாநாயகர் பிர்லா பேசுகையில், "சபையின் கண்ணியம் மற்றும் பாரம்பரியத்தைப் பேணுவதற்குப் பங்களிப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதியளித்துள்ளன. உறுப்பினர்கள் யாரும் போலியான, ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதை நான் புல்லட்டினிலும்  கோரியுள்ளேன்," என்றார்.


source https://tamil.indianexpress.com/india/suspension-of-8-lok-sabha-mps-revoked-parliament-decorum-debate-11220674