வியாழன், 9 மே, 2013

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில்




12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 84.7 சதவிகிதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91 சதவீதமாகவும் உள்ளது.
பிளஸ்-2 தேர்ச்சியில் மாவட்ட அளவில் விருதுநகர் 95.87 சதவிகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. மாவட்ட அளவில், 27 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று வருகிறது.
தூத்துக்குடி 95.46 சதவிகிதம் பெற்று 2-வது இடமும், நெல்லை மாவட்டம் 94.61 சதவிகிதம் பெற்று 3-வது இடத்திலும் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 85.39 சதவிகிதமும், சென்னை மாவட்டத்தில் 91.82 சதவிதித மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 94.28 சதவிகிதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 94.03 சதவிகிதமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 89.23 சதவிகித மாணவ-மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 81.92 சதவிகிதமும், தருமபுரியில் 86.22 சதவிகிதமும், தேனியில் 93.58 சதவிகிதி மாணவ, மாணவியரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 93.77 சதவிகிதமும், திண்டுக்கல்லில் 89.76 சதவிகிதமும், நீலகிரி மாவட்டத்ரிதல் 84.05 சதவிகிதமும், திருப்பூரில் 92.89 சதவிகிதமும், கோவையில் 92.95 சதவிகிதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் 86.95 சதவிகிதமும், சேலம் மாவட்டத்தில் 89.4சதவிகிதமும், நாமக்கல்லில் 94.41 சதவிகிதமும், கிருஷ்ணகிரியில் 83.18சதவிகிதமும், தேர்ச்சியாக உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 74.94 சதவிகிதமும், பெரம்பலூரில் 90.59 சதவிகிதமும், கரூர் மாவட்டத்தில் 91.03 சதவிகிதமும், திருச்சியில் 93.78 சதவிகிதமும் மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாகை-84.7 சதவிகிதமும், திருவாரூர்-82.53 சதவிகிதமும், தஞ்சை- 90.03 சதவிகிதமும், விழுப்புரம்-78.03 சதவிகிதமும், கடலூர்-73.21சதவிகிதமும், திருவண்ணாமலை -69.91 சதவிகிதமும், வேலூர்-81.13 சதவிகிதமும், காஞ்சிபுரம்-84.73 சதவிகிதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.