வெள்ளி, 10 மே, 2013

படிக்கும் போது கண்ணீர் வந்து விட்டது ...



கடந்த இரண்டு நாட்களாக முயற்சி செய்தும் சகோ.புகாரி உள்ளிட்ட சகோதரர்களை பார்க்க விடாமல் அலைக்கழித்த காவல்துறை இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்தியது.அப்போதுதான் காவல்துறை எங்களை பார்க்க அனுமதிகாததின் காரணம் புரிந்தது சகோ.புகாரி காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து தூங்க விடாமல் கரண்ட் ஷாக் கொடுத்ததும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்த பட்டுள்ளதும் தெரிய வந்தது.புகாரியை பார்த்ததும் நமக்கே கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இதையடுத்து நீதிபதியிடம் வழக்கரிகனர்கள் சார்பாக முறையிடப்பட்டது.நீதிபதி உடனே அதை பதிவு செயது கொண்டு புகாரி உள்ளிட்டோரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ சான்றிதல் பெற்று சமர்பிக்க வேண்டும் அதன பின்னரே காவல் துறை வசம் விசாரணைக்கு ஒப்படைப்பது குறித்து முடிவு செய்ய படும் என்று தெரிவித்தார்.மேலும் இந்த வழக்கில் இன்று மேலும் 5 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ரிமான்ட் செய்ய கொண்டு வரப்பட்டனர்.அனைவரும் இளைஞர்கள்.கோவை மற்றும் நெல்லையை சேர்ந்த இவர்களையும் நிர்வாணமாக்கி நிற்க வைத்தே சித்திரவதை செய்துள்ளனர். அப்பாவிகளான இவர்களின் எதிர்காலம் என்ன ? மேலும் இந்த வழக்கில் யாரை வேண்டு மானாலும் கைது செய்யவும் சோதனை இடவும் நீதிமன்ற அனுமதி பெற்று ்ளது கர்நாடக (?) காவல் துறை. தமிழக காவல் துறை உதவியுடன் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்க களமிறங்கி இருக்கும் இவர்களை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தமிழக முஸ்லிம்கள் என்ன செய்ய போகிறார்கள்...