திங்கள், 20 மே, 2013

Say No to - வந்தே மாதரம்

வந்தே மாதரம் விவகாரம் : வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்........!!

வந்தே மாதரம் பாடலின்போது நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்த ஷபீகுர் ரஹ்மான் எம்பி.,க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை லக்னவ் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சவுரப் ஷர்மா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா அடங்கிய இரு நபர் அமர்வு நீதிமன்றத்தில், காரசாரமான விவாதம் நடை பெற்றது.

வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது, இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என எடுத்துக் கூறப்பட்டது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கரிஞரும் "ஜன கன மன" தான் தேசிய கீதம் என எடுத்துரைத்ததுடன் வந்தே மாதரம் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும் ஆமோதித்தார்.

இதை தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியை புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

News : Maruppu