நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!... அவர் ஏன் கொல்லப் பட்டார்?... அரசு மற்றும் மீடியாக்கள் என்ன சொல்கின்றன?...ஆதாரம் கீழே!
நாகை புகழேந்தி என்பவர் போலி பத்திரம் தயார் செய்து செய்து ஒரு கோடி மதிப்புள்ள
வீட்டை அபகரித்து அதன் மூலம் சிறைக்கு சென்றவர். ஜாமீனில் வெளியில் வந்த போது முனிஸ்வரன் என்பவரால் கொல்லப்பட்டார்.
இதுதான் உண்மை.
ஆனால் தமிழிசை சௌந்தரராஜன் நாகை புகழேந்தியை முஸ்லிம்கள் கொன்றார்கள் என பொய் செய்தி பரப்புகின்றார்.
சேலம்: நாகை பா.ஜ.க பிரமுகர் புகழேந்தி கொலை வழக்கில், சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். புகழேந்தி கடந்த 4ம் தேதி நாகையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த, முனீஸ்வரன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த முனீஸ்வரனை 15 நாள் சிறையில் அடைக்குமாறு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மேகலா உத்தரவிட்டுள்ளார்
நன்றி - தினகரன் WEBSITE 06-07-2012 FRIDAY
அதுமட்டுமா நாகை புகழேந்தியின் லட்சணன் கீழே!!!நாகப்பட்டினம்: போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்த பாஜக நிர்வாகி புகழேந்தியை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (38). ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அவர் தனக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி (52) என்பவர் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்துக் கொண்டதாக கடந்த 2011ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் புகழேந்தி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த புகழேந்தியின் மகன்கள் ரகுராமன், சிவராமன், புகழேந்தியின் நண்பர் கீவளூரைச் சேர்ந்த தினேஷ்பாபு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசார் புகழேந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நன்றி - ஓன்.இந்தியா
http://www.dinakaran.com/News_Detail.asp?nid=18393
Read more at: http://tamil.oneindia.in/news/2012/06/13/tamilnadu-land-abduction-case-bjp-functionary-held-155605.html