திங்கள், 22 ஜூலை, 2013

Quan & Hadith

அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து  அதைச் சொல்லிக் காண்பிக்காமலும்,  அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு;  இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள், 2:262

******************
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு,
நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்!
ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக
நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக
நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது.
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள்
செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:08

******************
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான்
கேட்டேன்:

யார் தொழுகைக்காக முழுமையான
முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து,
கடமையான தொழுகைக்காக நடந்துசென்று,
மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத்
தொழுகையில்
கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில்
தொழுகிறாரோ அவருக்கு அவருடைய
பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான்.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள்
கூறியது

ஸஹீஹ் முஸ்லிம் 393

Related Posts: