புதன், 31 ஜூலை, 2013

மதுவிலக்கு

தமிழகத்தில் 1947ல் இருந்து 1971ம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. ஓமந்தூர் ராமசாமி, பக்தவச்சலம், அண்ணாதுரை, காமராஜர் மதுவிலக்கினை அமல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தினர். ஆனால், தமிழகத்தில் ராஜாஜிக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானவுடன் மீண்டும் மது விற்பனையை அமல்படுத்தினார்.
தற்போதும் காந்தி பிறந்த குஜராத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
குடும்பத்தை கவனிக்க வேண்டிய பெரும்பாலான ஆண்கள், தாங்கள் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் மதுவுக்கே செலவழிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்ப்படுத்துவது மிக அவசியம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மகாத்மா காந்தியை நாடு மறந்ததோடு, அவருடைய மதுவிலக்கு விருப்பத்தையும் மறந்துவிட்டது.
மது விற்பனை மூலம் வருமானம் வருவதை விட்டுவிட்டு மாற்றுத் திட்டம் மூலமாக வருமானம் ஏற்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய அரசு முன்வரலாம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவர தீவிர அகிம்சை வழி போராட்டத்திற்கு ஆதரிப்போம்