திங்கள், 22 ஜூலை, 2013

யாராலும் தடுக்க முடியாது!

பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது!

அண்ணா ஹசாரே பேட்டி!!
+++++++++++++++++++++++++++++++++++++++

நரேந்திர மோடி, "மதவெறியர்" என்றும், பாஜக மதவெறிக் கட்சி என்றும் கடுமையாக சாடிய அண்ணா ஹசாரே,

இவர்களின் மதவெறியால் இந்திய தேசம் துண்டு துண்டாக உடைந்து சிதறிப்போவதை யாராலும் தடுக்க முடியாது, என்றார்.

தான் ஒருபோதும், மோடியை மதச்சார்பற்றவர்-நேர்மையானர் என்று சொல்லவில்லை, குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்காத மோடியை நான் எப்படி நேர்மையானர் - மதசார்பற்றவர் என்று சொல்ல முடியும்? எனக் கேள்வி எழுப்பினார், ஹசாரே.

முன்னதாக, நேற்று (19/07) இந்தூரிலிருந்து வெளியாகும் காலைப் பத்திரிகை ஒன்றில், மோடி நேர்மையானர் என அண்ணா ஹசாரே நற்சான்று வழங்கியதாக கூறப்பட்டிருந்தது.

இந்த செய்திக்கு உடனடி "மறுப்பு" கொடுப்பதற்காக, டெல்லி மருத்துவமையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஹசாரே, அவசரம்-அவசரமாக நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

நரேந்திர மோடி மதச்சார்பற்றவர் என்று தான் ஒருபோதும் சொல்லவில்லை, அவரது மதவெறிச் செயல்களுக்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் இல்லை என்று தான் தெரிவித்திருந்தேன்.

எனது கருத்து திருத்தி போடப்பட்டுள்ளது, என தெரிவித்த அவர், நரேந்திர மோடி தலைமை தாங்கும் பாஜக, ஒரு மதவாதக் கட்சி என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் தன்னிடமிருப்பதாக தெரிவித்தார்,ஹசாரே.

ஒரு கட்சி தனது கொள்கைகளை சொல்லுவதை வைத்தும், செயல்படுத்துவதை வைத்தும், அந்தக் கட்சி மத சார்பற்ற கட்சியா? மதவாதக் கட்சியா? என்பதை தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும், என தெரிவித்த அவர்,

சந்தேகமின்றி, பாஜக ஒரு சமூகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக சொன்னாலும், மற்றொரு சமூகத்துக்கு எதிராக செயல்படும் மதவாதக் கட்சி என்றார், அண்ணா ஹசாரே.

இவர்களின் மதவாதத்தால், இந்திய தேசம் தேசம் துண்டு துண்டாக சிதறி, சின்னாபின்னமாகப் போவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.