வியாழன், 31 அக்டோபர், 2013

72 கூட்டத்தில் ஒரு கூட்டம் தான் சொர்க்கம் செல்லும்

72 கூட்டத்தில் ஒரு கூட்டம் தான் சொர்க்கம் செல்லும் என்றால் என்ன தான் நன்மை செய்தாலும் சொர்க்கம் செல்ல முடியாதா?

அமீன் ஜித்தா

பதில்:

ஒரு குறிப்பிட்ட கூட்டம் தான் சொர்க்கம் செல்லும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விட்டானோ அவர்கள் ஒரு போதும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள், அல்லாஹ்வை நிராகரித்தவர்கள், கொலை செய்தவர்கள் போன்ற சிலருக்கு சொர்க்கம் ஹராமாக்கப்பட்டு விட்டது.

மற்றவர்கள் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் சொர்க்கம் செல்லுதல் இரு வகைகளில் உள்ளது. தீர்ப்பு அளிக்கும் போதே சொர்க்கத்துக்கு அனுப்பப்படுதல் ஒரு வகை.

தீய செயல்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டு கடைசியாக சொர்க்கத்துக்கு அனுப்பப்படுதல் இன்னொரு வகை. இவர்கள் கூட அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டால் எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் போய் விடுவார்கள். கடுகளவு ஈமான் உள்ளவராக இருந்தாலும் அவர் இறுதியில் சொர்க்கம் செல்வார். சொர்க்கத்துச் செல்லும் கூட்டம் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களை எடுத்த எடுப்பிலேயே – நரகத்துக்கு போகாமல் – சொர்க்கம் செல்லுதல் என்று புரிந்து கொண்டால் குழப்பம் இராது.

Source from Onlinepj

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

எஜூகேஷனை அல்ல

கோ எஜூகேஷனைத் தான் இஸ்லாம் தடுக்கின்றது,
எஜூகேஷனை அல்ல.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பெண்களுக்கான பல்கலைக்கழகம்.

இந்த பல்கலைக்கழகத்தில் 60 ஆயிரம் மாணவியர் படிக்க முடியும்.
உலகளாவிய கட்டட வல்லுனர்களைக் கொண்ட 'பர்கின்ஸ் பிளஸ் வில்' என்னும் கட்டுமான நிறுவனம் இந்த பல்கலைக்கழகத்தை வடிவமைத்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான துறைகள் பெண்களுக்கு பயன்படும்படி உருவாக்கப்பட்டுள்ளன.

பெண்கள் கல்வி கற்பது மற்றும் இன்னும் பிற துறைகளில் சிறந்து விளங்குவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதற்கு ரியாதில் உருவாகும் பிரம்மாண்டமான பல்கலை கழகம் சான்றுப் பகர்ந்து நிற்கின்றது.

கோ எஜூகேஷனைத் தான் இஸ்லாம் தடுக்கின்றது,
எஜூகேஷனை அல்ல. என்பதற்கு இந்த பல்கலைக் கழகம் சான்றுப் பகர்நது நிற்கின்றது

திறமையான மாணவியாக

உலகின் திறமையான மாணவியாக ஸஹீலா இப்ராஹீம்!

உலகின் திறமையான இளம் வயதினர் (World Smartest Teenagers) 50 பேரில் நைஜீரியாவைச் சார்ந்த 16 வயது ஸஹீலா இப்ராஹீம் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள எடிசனில் இவர் வசித்து வருகிறார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பை மிகக் குறைந்த வயதிலேயே பெற்ற சிறுமி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
நைஜீரியாவில் சாதாரண முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் ஸஹீலா இப்ராஹீம்.


மார்ககம் கூறும் அடிப்படையில் பர்தாவைப் பேணி திறமையாகப் படித்து முன்னேற அல்லாஹ் அருள் புரிவானாக !

வெள்ளி, 25 அக்டோபர், 2013

முன்னோர்களை பின்பற்றலாமா ?

 ## நமது முன்னோர்கள் என்று யார் யாரெல்லாம் வாழ்ந்து மரணித்தார் களோ அவர்கள் எந்த முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்தார் களோ அந்த முறையில் தான் நாமும் வாழ வேண்டும் என்பது சிலரது வாதமாகும். எந்தப் பெரிய அறிஞனாக இருந்தாலும்,விஞ்ஞானியாக இருந்தாலும், மிகப் பெரிய ஆய்வாளனாக இருந்தாலும் அனைவரையும் முட்டாலாக மாற்றும் ஒரு குருட்டு பக்திதான் இந்த முன்னோர்கள் வாதம். எந்தப் பெரிய கல்வியாளனையும் முன்னோர்கள் என்ற வாதம் ஒரு பக்தி வட்டத்திற்குள் கொண்டு வந்து விடும். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த குருட்டு பக்தியை துடைத்தெரிகிறது. குர்ஆன் கூறும் செய்திகளைப் பாருங்கள். وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آَبَاءَنَا أَوَلَوْ كَانَ آَبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ (2:170) அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170) மனிதனது அறிவுக்கும்இ சுயமரியாதை உணர்வுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய இந்தக் குருட்டு பக்தி முஸ்லிம்களிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் இந்த வசனத்தில் கட்டளையிடுகின்றான். ஆயினும் பெரும்பாலான முஸ்லிம்கள் பிற மதத்தவரிடமிருந்து காப்பியடித்து இந்தப் போக்கைத் தமதாக்கிக் கொண்டனர். முன்னோர்களின் கொள்கைகள் குர்ஆனுக்கு நேர் முரணாக அமைந்திருந்தாலும், தெளிவாக அது சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் கூட, "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அதையே நாங்களும் செய்கிறோம்'' எனக் கூறுகின்றனர். சமாதிகளில் வழிபாடு செய்வதும், ஷைகுமார்களின் கால்களில் விழுவதும், சந்தனக் கூடு, கொடியேற்றம் நடத்துவதும், கத்தம் பாத்திஹாக்களை சிரத்தையுடன் செய்து வருவதும், இது போன்ற இன்னும் பல காரியங்களும் மார்க்கத்தின் அம்சங்களாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் முன்னோர்களைப் பின்பற்றுவது தான். அல்லாஹ்வும் அவனது தூதரும் இவற்றைத் தடை செய்துள்ளனர் என்று யாரேனும் சுட்டிக் காட்டினால், "எங்கள் முன்னோர்கள் இப்படித் தான் செய்தனர்; அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?'' என்பதே அவர்களின் பதிலாக இருக்கின்றது. இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான மறுப்பு அமைந்துள்ளது. இவர்களின் இந்தக் குருட்டு பக்திக்கான காரணம் என்ன? நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து நபித்தோழர்கள் மார்க்கத்தைக் கற்றனர். அவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றனர். இப்படியே வாழையடி வாழையாகவே மார்க்கத்தை நாம் கற்று வருகிறோம். எனவே எங்கள் முன்னோர்கள் செய்தவை யாவும் நபி صلى الله عليه وسلم அவர்களின் வழியாக வாழையடி வாழையாகவே வந்திருக்க முடியும் என்று இவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும். நபி صلى الله عليه وسلم அவர்களிடமிருந்து நபித்தோழர்களும், அவர்களிட மிருந்து அடுத்த தலைமுறையினரும் வாழையடி வாழையாக இம்மார்க்கத்தைக் கற்றாலும் கூட, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒன்றைக் கூட்டவோ, குறைக்கவோ செய்திருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. ஏசுவை இறைவனின் மகன் என்று ஒரு கூட்டத்தினர் நம்புகின்றனர். இந்தக் கொள்கை ஏசுவிடமிருந்து தங்களுக்கு வாழையடி வாழையாகக் கிடைத்தது என்று தான் அவர்கள் நம்புகிறார்கள். இறைவனுக்கு மகன் இல்லை என்று போதனை செய்த ஏசுவின் பெயரால் அவரது போதனைக்கு முரணான கொள்கை நடைமுறைக்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது? வாழையடி வாழையாக முழுமையான போதனை வந்து சேர முடியாது என்பதைக் காட்டவில்லையா? இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைக்கேற்ப இறைவனை வணங்குவதற்காக கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார்கள். அந்தக் கஅபாவுக்குள் அவர்களின் சந்ததியினரே 360 சிலைகளை வைத்து வழிபட்டது எதைக் காட்டுகிறது? முன்னோர்கள் முழு அளவுக்கு நம்பகமானவர்கள் அல்லர் என்பதைக் காட்டவில்லையா?

மலாலா பகிஸ்தானியப் பெண் அல்ல – திடுக்கிடும் மர்மம்



  மலாலா பாகிஸ்தானியக் குழந்தை அல்ல. அவளின் நிஜப்பெயர் ஜேன் (Jane). 1997 இல் ஹங்கேரி (Hungary) நாட்டில் பிறந்தாள். அவளது உண்மையான பெற்றோர்கள் கிரிஸ்தவ மிஷனரிகள் ஆவர்.
 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் சுவாத் மாநிலத்தில் இரகசியமாக கிரித்தவ சமயத்தைத் தழுவிய தம்பதியினருக்கு தம் குழந்தையை தத்துக்கொடுத்தார்கள்.


 அவள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவும் பாகிஸ்தானிய இராணுவமும் இணைந்து அரங்கேற்றிய ஒரு நடாகம்.
 மேலும் பல திடுக்கிடும் தகவல்களை தரவு ரீதியாக ஊடகவியலாளர் லதீப் பாரூக் (Latheef Farook) தருகின்றார்.
 முழுமையான ஆங்கிலக் கட்டுரையை வாசிப்பதற்கு கீழ் லிங்கினைத் தொடருங்கள்


ஏற்காடு இடைத்தேர்தலில்

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல.

பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.

பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம் என்பது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தாகும்.

ஏற்காடு இடைத்தேர்தலில் கலைஞர் எங்களின் இயக்கத்தின் ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதிய போது பா.ஜ.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கும் திமுகவை ஆதரிப்பதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் பதில் அளித்தோம்.

பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவோரையே ஆதரிக்காத எங்கள் ஜமாஅத் எந்தக்காலத்திலும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. இது எங்கள் பல்வேறு செயற்குழு, பொதுக்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

ரியாதிலிருந்து பொதுச்செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தப்லீக் செல்லலாமா?





தப்லீக்கில் செல்லலாமா தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? - விளக்கம் தேவை.

முஹம்மது ஆரிப்

நாம் அறிந்த சத்திய மார்க்கத்தை பிற மக்களுக்கு எடுத்துரைப்பது அவசியமான அதிக நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய நல்ல பணியாகும். நாமும் பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் (தப்லீக்) செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிரச்சாரம் செய்வது ஓர் இறை வணக்கம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இஸ்லாத்தில் இது போன்ற வணக்க வழிபாடுகளைக் காரணம் காட்டி நம்பெற்றோர்களுக்கும், மனைவிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிடமுடியாது.

அவ்வாறு ஒருவர் செய்வாரானால் குற்றவாளியாகவே கருதப்படுவார்.இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சமயங்களில்உணர்த்தியிருக்கின்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ் , நீர் பகலெல்லாம் நோன்புநோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்றுகேட்டார்கள். நான் "ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் "இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சிலநாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம்உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன;

உம் கண்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டியகடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டியகடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்புநோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொருநற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்றுகூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம்சுமத்தப்பட்டுவிட்டது!''

அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!''என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தாவூத் நபி (அலை)அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்கவேண்டாம்!'' என்றார்கள். "தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். "வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள். "அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின்"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!'என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல்: புகாரி 1975)


அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும்சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது(அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக்கண்டார். "உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்குஉம்முத் தர்தா (ரலி) அவர்கள், "உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத்தேவையுமில்லை' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்துசல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், "உண்பீராக!' என்று கூறினார்.

அதற்கு அபுத்தர்தா, "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்'என்றார். சல்மான், "நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்' என்று கூறியதும்அபுத்தர்தாவும் உண்டார்.


இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத்தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், "உறங்குவீராக!' என்று கூறியதும்உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், "உறங்குவீராக!'என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், "இப்போதுஎழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம்சல்மான் (ரலி) அவர்கள், "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டியகடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன;


உம்குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரியகடமைகளை நிறைவேற்றுவீராக!'' என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி)அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "சல்மான் உண்மையையே கூறினார்!''என்றார்கள். (நூல்: புகாரி 1968) இந்த செய்திகளும் இது போன்ற பல செய்திகளும் இறைவனுக்குச் செய்ய வேண்டியகடமைகளைக் காரணம் காட்டி, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையில் தவறுவதும் பெற்றோர் மற்றும் உறவினருக்கு செய்யும் கடமைகளில் குறைவைப்பதும் குற்றம் என்று அறியலாம். தப்லீக் செல்வதாகக் கூறிக்கொண்டு மாதக்கணக்கில் ஊர் ஊராகச் சுற்றும் பலர் தங்கள்குடும்பத்தார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றத்தவறிவிடுகிறார்கள்.


மேலும் பின்வரும் இணைப்புகளில் உள்ளதை வாசிக்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/tntj_moolam_thableek_sellaame/ http://onlinepj.com/books/thablik_thalim/

இந்த பதில்களைக் கண்டிப்பாக கேட்கவும்

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thableek_jamath_patri/ http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/thableek_janath_patri_enna_solkireerkal/

சனி, 19 அக்டோபர், 2013

பேய், பிசாசு உண்டா ?

அளவற்ற அருலாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.

வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லித் தருவதே இஸ்லாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மாத்திரமே இஸ்லாம் சொல்லித் தருகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். புறச்செயல்களை மாத்திரம் ஒழுங்கு படுத்தும் மார்க்கம் என்பர் வேறு சிலர். புறச்செயல்களைப் புறம் தள்ளிவிட்டு அகத்தை மட்டும் சுத்தம் செய்வதே இஸ்லாம் என்பர் இன்னும் சிலர். வெளிப்படையாக இவ்வாறு இவர்கள் கூறாவிடினும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

பலரும் பலவிதமாக இஸ்லாத்திற்கு வடிவம் கொடுக்க முயன்றாலும், மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தக்க தீர்வை வழங்குவதே இஸ்லாம். மனிதனது செயல்களில் மட்டுமன்றி அவனது நம்பிக்கையிலும் எண்ணத்திலும் கூட இஸ்லாம் தலையிடுகிறது. எவற்றைச் செய்யலாம் எவற்றைச் செய்யலாகாது என்பதை இஸ்லாம் விளக்குவது போலவே, எவற்றை நம்பலாம் எவற்றை நம்பலாகாது என்பதையும் இஸ்லாம் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. செயல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட சற்று அதிகமாகவே எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது.

செய்ய வேண்டியவைகளைச் செய்யாமலிருப்பதும், செய்யக் கூடாதவைகளைச் செய்வதும் எப்படிக் குற்றமோ அது போலவே நம்ப வேண்டியவைகளை நம்பாமலிருப்பதும் நம்பக் கூடாதவற்றை நம்புவதும் குற்றமே. இதன் காரணமாகவே ‘பேய் பிசாசுகள் என்று மக்களால் நம்பப்படும் விசித்திரமான படைப்பைப் பற்றி இஸ்லாமிய அடிப்படையில் நாம் ஆராயும் அவசியம் ஏற்படுகிறது.

‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

‘பெண் என்றால் பேயும் இரங்கும்
‘நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்

என்றெல்லாம் தமிழகத்தில் வழங்கும் பழமொழிகள், தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உலகின் பல பகுதிகளில் பேய்களின் நடமாட்டம் உண்டு எனினும் தமிழகத்தில் இவற்றின் நடமாட்டம் மிக அதிகம். எண்ணிலடங்காத பேய்கள் உலா வருவதால் அவற்றின் பெயர்களும் தன்மைகளும் மிகத்துல்லியமாக வித்தியாசப்பட்டுள்ளதை தமிழகத்தில் காண முடியும்.

நள்ளிரவில் கதவைத் தட்டும் பேய்களும் உள்ளன. வீடுகளில் கல்லெறிந்து விட்டு மாயமாய் மறைந்திடும் பேய்களும் உள்ளன. பழிவாங்கும் பேய்கள்; இரத்தம் குடிக்கும் பேய்கள்; இளைஞர்களை மாத்திரமே ‘தப்பு செய்வதற்காக அழைக்கும் மோகினிப் பேய்கள், வேண்டியவர்களுக்கு உதவி செய்யும் பேய்கள் என்றெல்லாம் பேய்களில் பல வகைகள் உள்ளன. இல்லறத்தில் தோல்வியடைந்து இலக்கின்றி அலையும் பேய்களும் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் மீது மேலாடுகின்ற மகாசக்தி படைத்த பேய்களும் உள்ளன.

பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி, கொள்ளிவாய்ப் பிசாசு என்பது போன்ற செல்லப் பெயர்களும் பேய்களுக்கு உள்ளன. பேய்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வெல்வாக்குக்கு இவை சான்றுகள்.

பேய் வீடு, பேய் மாளிகை என்றெல்லாம் பேய்களைக் கதாநாயகர்களாக்கி பி.டி. சாமி போன்றவர்கள் தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடிகின்றதென்றால் பேய் சமாச்சாரங்களை வெளியிட்டு தமிழகப் பத்திரிகைகள் பல சமூகத் தொண்டாற்ற (?) முடிகிறது என்றால் பேய்களின் ஆதிக்கத்தை அளவிட வேறு அளவுகோல் எதுவும் தேவையில்லை.

“அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார் என்று நெஞ்சு பொறுக்காமல் சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

மற்றவர்கள் பேய்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் நம்பிவிட்டுப் போகட்டும்! முஸ்லிம்கள் இது பற்றி எத்தகைய முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் பேய்களை நம்புவதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் அவற்றை மறுப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் திருக்குர்ஆன் வெளிச்சத்தில், திருநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் துணையுடன் ஆராய்வோம்.

மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் “பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் ‘இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39:42)

பேய்-பிசாசுகள் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக தெளிவாகவே இங்கே இறைவன் குறிப்பிடுகிறான். இறைவனது கைவசத்திலேயே ஆவிகள் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன் (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு என்று கூறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது. உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் அறிவித்து விட்ட பின் பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், எப்படி இறைவனையும் இறைத் தூதரையும் நம்பியவனாக முடியும்?

இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அர்குர்ஆன் 23:99,100)

பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது. இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகுக்கு திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே இவ்வாறு மனிதன் கேட்கிறான். நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவது இயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான்.

நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்?

இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும். மனிதன் மரணித்த பின்பு அவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸஹ் எனும் அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது. பர்ஸஹ் என்றால் கண்களுக்குப் புலப்படாத, உடைக்க முடியாத திரை என்பது பொருள். இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ள மற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். . இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. என்ற கருத்தை 55வது அத்தியாயம் 19,20 வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான். விஞ்ஞானிகளும் இதனை ஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும், ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர்.

அதே வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன் பயன்படுத்தியுள்ளான். மனிதன் இறந்த பின் அவனுக்கும் இவ்வுலகுக்கும் இடையே “பர்ஸஹ் எனும் திரை போடப்படுவதாக வல்ல இறைவன் குறிப்பிடுகின்றான். இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது என்பதை இதன் மூலம் அறிவிக்கின்றான். இறைவனின் இவ்வசனத்தை நம்பக் கூடிய ஒரு முஸ்லிம், ஆவிகள் வந்து நடமாடுவதை எப்படி நம்ப முடியும்? ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நம்பிக்கைகள், ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்?

“பர்ஸஹ் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் போடப்படுவதில்லை. மாறாக, மனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும் இறைவன் அதே வசனத்தில் தெரிவிக்கின்றான்.

இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும் ஆவிகள் – நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் – எப்படி இந்த உலகுக்கு வர இயலும்? பேய்களுக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதி செய்து கொள்ளலாம்.

மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லை என்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூற்கள் : புகாரி, முஸ்லிம்

மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபி (ஸல்) அவர்களின் போதனையை பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் ​உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் “முன்கர் மற்றொருவர் “நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் எனறு அம்மலக்குகள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி “உறங்குவீராக! என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ

நல்ல மனிதர்களது உயிர்களானாலும் கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

திடல் தொழுகை...!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில்  பெருநாள் திடல் தொழுகை...!
InShaAllah on 7.30 am at SENGULAM , Near Aysha Madras on 16/10/2013

வியாழன், 10 அக்டோபர், 2013

#குர்பானியின்சட்டங்கள்

யார்மீது கடமை?

இவ்வளவு பணம் இருந்தால்தான் குர்பானி கடமை என்று திருக்குர்ஆனிலே அல்லது நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. யாருக்கு ஜகாத் கடமையோ அவர்கள்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. 

பொதுவாக ஒரு கடமையைச் செய்ய வலியுறுத்தப்பட்டால் அதைச் செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்ற வேண்டும். 

முக்கியமான சுன்னத்

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளது.

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ قَالَ ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُضْحِيَةً ذَاتَ يَوْمٍ فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلَاةِ فَقَالَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ رواه البخاري

ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தியாகப் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய தியாகப் பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்து விட்டிருப்பதைக் கண்டபோது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) நூல் : புகாரி (5500)

திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியிருப்பதால் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் திருக்குர்ஆனும் இதை வலியுறுத்தியுள்ளது.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ(2) سورة الكوثر
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (அல்குர்ஆன் 108: 1,2)


பள்ளி வாகனம் விபதுகுள்ளனது


13/09/2013 முபட்டி  -மாலை 3.30 மணியளைவில்   மெஜஸ்டிக்  பள்ளி வாகனம்  விபதுகுள்ளனது.  பூலாம்பட்டி   அருகே கட்டுபாட்டை இழந்து பள்ளி வாகனம் குளத்துக்குள் கவிழ்த்தது. சுமார் 25 மாணவர்கள்  மற்றும் பெண் நடத்துனர் சிறு காயங்களுடன் தப்பினர் 

நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது

தினமும் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம் தொடர்பான 25 ஆண்டுத் தரவுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.

குறிப்பாக திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து 25 சதவிகிதம் குறைகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த மக்களுடைய பதிவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்தியாவில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம். தமிழகத்தில் சுமார் 10 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவதால், இந்த ஆராய்ச்சி நமக்கும் முக்கியமானதாகிறது.

ஐவேளைத் தொழுகைக்


ஐவேளைத் தொழுகைக்காக விரைவாகச் சென்று அதை நிறைவேற்ற காத்திருந்தால் அந்த நேரத்தில் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய) சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.

நூல் : புகாரி (445)

இவ்வாறு முறையாக உளூ செய்வதினாலும் தொழுவதினாலும் நமது சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது வானவர்களே அல்லாஹ்விடம் நமக்காக துஆ செய்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.

கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பாவம் அழிக்கப்படும்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي يَعْنِي عَلَيْهِ الْمَلَائِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ رواه البخاري

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், "இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கின்றார்கள்.

 நூல் : புகாரி 477



புதன், 9 அக்டோபர், 2013

தெலங்கானா



தெலங்கானா உறுதியாகிவிட்டது. பல்லாண்டுகால மக்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. இன்றைக்கு தெலங்கானா பிரிவினையை எதிர்த்து எழுத முற்படுவது வெகுஜன விரோதம். அரசியல் அப்படிக் கட்டமைத்திருக்கிறது. அதனாலேயே எழுதாமல் இருக்க முடியாது.

மக்கள் போராட்டங்கள் சரியா என்று கேட்டால், எல்லாக் காலகட்டங்களிலும் சரி என்ற பதிலே வரலாற்றிலிருந்து கிடைக்கிறது; அதே சமயம், இந்தப் போராட்டங்களினூடே அவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் சரியா என்று கேட்டால், சரி - தவறு என்கிற பதில்களுக்குமே வரலாற்றில் இடம் உண்டு. இன்னும் சொல்லப்போனால், சரியான தீர்வுகள் மக்களிடமிருந்து வரவில்லை; தொலைநோக்குள்ள தலைவர்களிடமிருந்தே வந்திருக்கின்றன - அப்படிப்பட்ட தீர்வுகளும் வெகுஜன எதிர்பார்ப்புக்கு முரணாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன என்னும் பதிவுகளே அதிகம்.

இந்திய ஒன்றியத்தின் ஆணிவேர்

இந்தியா என்றால், பன்மைத்தன்மை. பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மரபுகள்... உலகில் இப்படி ஒரு தேசம் நீடிக்க முடியுமா என்ற கேள்வி நூற்றாண்டுப் பழமையானது. இந்தக் கேள்வியை உலுத்துப்போகச் செய்ததில் முக்கியமான பங்கு மொழிவழி தேசிய இனங்களை அங்கீகரிக்கும் வகையில் மாநிலங்கள் நிர்மாணிக்கப்பட்டதற்கு உண்டு.

இப்படிப்பட்ட பல்வேறு இனங்கள் கலந்த ஒரு தேசத்தைக் கட்டியமைக்கும்போது, உலகின் பார்வை இருந்த விதம் வேறு. மிகச் சிறந்த உதாரணம் ரஷ்யாவின் ஸ்டாலின். "ஒரே சமயத்தில் பல மொழிகளைப் பேசும் எந்த தேசமும் நீடித்துச் செயல்பட முடியாது" என்று உறுதியாகச் சொன்னார் அவர். சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழி கட்டாயமாக்கப்பட இதுவே காரணம். சோவியத் ஒன்றியம் சிதறக் காரணமாக இருந்த தேசிய இனங்களின் போராட்டங்களுக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்தது இது.

இந்தியாவையும் அப்படிப்பட்ட ஒருமைத்தன்மை கொண்ட - 'இந்து, இந்தி, இந்தியா' - தேசமாகக் கட்டியமைக்கவே இங்குள்ள ஆதிக்கச் சக்திகள் விரும்பின. நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், "பன்மைத்தன்மை பிளவை வளர்க்கிறது. ஒருவரைத் தமிழராகவோ மகாராஷ்டிரராகவோ வங்காளியாகவோ பார்ப்பது நாட்டின் வல்லமையைக் குழிதோண்டி புதைக்கும். நாம் அனைவரும் இந்துக்கள்; ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதே நம் கொள்கையாக அமைய வேண்டும்" என்று செல்லும் இடங்களில் எல்லாம் வெளிப்படையாகவே முழங்கினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர்.

எது இந்த நாட்டை ஒருங்கிணைக்கும் என்பதை காந்தி உணர்ந்திருந்தார். 1920-களிலேயே காங்கிரஸ் மொழிவழி தேசிய இனங்களை அங்கீகரிக்கும் காந்தியின் குரலை எதிரொலித்தது. "இந்தியாவின் அத்தனை பிராந்தியங்களையும் இந்துஸ்தானி ஆள்வது அபத்தம். மொழிவழி மாநிலங்கள் அமைவதே நம்மிடையேயான சகோதரத்துவம் மேலும் வலுப்பெற உதவும்" என்றார். நேருவும் அதையே விரும்பினார். மராத்தியர்களுக்கு என பம்பாயை உள்ளடக்கிய மகாராஷ்டிரம் வேண்டும் என்று குரல் கொடுத்த அம்பேத்கருக்கும்கூட அந்த எண்ணம் இருந்தது.

இந்திய சுதந்திரத்தையொட்டி நடந்த பிரிவினைக் கலவரங்களோ எல்லோரையும் மாற்றி யோசிக்க வைத்தது. காந்தி, நேரு, படேலில் தொடங்கி எல்லோருமே மொழிவாரி மாநிலங்களைப் பிரிப்பது தேசத்தின் பிளவுக்கு வழிவகுக்குமோ என்று அஞ்சினார்கள். இந்தி ஆதிக்கத் தலைவர்கள் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையைக் கைவிடச் சொல்லி வலியுறுத்த இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஆந்திரம் இட்ட தீ

இந்தியாவை மொழிவழி மாநிலப் பிரிவினையை நோக்கி அடியெடுத்துவைக்கச் செய்தது தெலுங்கு பேசும் மக்கள்தான். பிரிட்டிஷார் ஆட்சியில் இருக்கும்போதே தெலுங்கு மக்களின் ஒற்றுமைக்காகக் கட்டமைக்கப்பட்ட 'ஆந்திர மஹா சபா' தெலுங்கர்கள் மிகத் தீவிரமான இயக்கங்களை முன்னெடுக்கப் பின்னணியில் இருந்தது. முதல்வர் டி.பிரகாசத்தின் விலகல்; மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த சுவாமி சீதாராமின் ஐந்து வார உண்ணாவிரதம், சென்னை மாகாண சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு பேசும் மக்கள் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி இடங்களைக்கூட வெல்ல முடியாத வகையில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி, எல்லாவற்றுக்கும் மேல் 58 நாள் உண்ணாவிரதத்தோடு போன பொட்டி ஸ்ரீராமலுவின் உயிர், அதையொட்டி நடந்த பெரும் போராட்டங்கள் - கலவரங்கள்... இவ்வளவுக்குப் பிறகுதான் நாட்டின் முதல் மொழிவழி மாநிலமாக 1953-ல் கர்னூலைத் தலைநகராகக் கொண்டு உருவானது ஆந்திரப் பிரதேசம்.

ஒரு வகையில், இந்தியாவின் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் தாய் ஆந்திரம்; தந்தை பொட்டி ஸ்ரீராமலு. ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் மொழிவழி மாநிலக் கோரிக்கைகளோடு உருவான பெரும் போராட்டங்கள் மாநில மறுசீரமைப்பு ஆணையத்துக்கு வழிவகுத்தன. நீதிபதி எஸ்.ஃபாஸில் அலி, வரலாற்றியலாளர் கே.எம்.பணிக்கர், ஹெச்.என்.குன்ஸ்ரு மூவரும் அடங்கிய இந்த ஆணையம் 18 மாதங்கள் கடுமையாக உழைத்தது. நாட்டின் 104 நகரங்களுக்குச் சென்று, 1,52,250 கோரிக்கை மனுக்களைப் பெற்று 16 மாநிலங்கள் மூன்று ஒன்றிய பிரதேசங்களுக்குப் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைகளோடு, நேரு செய்த சில மாறுதல்களோடு அமைக்கப்பட்டவையே மொழிவழி மாநிலங்கள்.

ஒரு விஷயத்தில் மிகத் தெளிவான பார்வையை நேரு கொண்டிருந்தார். பொதுவாகவே இந்தியா - இந்தி இரண்டும் சேர்த்துப் பார்க்கப்பட்ட காலகட்டம் அது என்பதால், இந்தி பேசும் பெரும் பகுதிகளான பிகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தவிர ஏனைய மொழிவழி மாநிலங்களின் பிரிவினை நல்லதல்ல என்பதே அது.

இந்திய மாநிலங்கள் மொழிவழியில் பிரிக்கப்பட்டது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாக அமையும் என்றே மேற்கத்தியர்களும் ரஷ்யர்களும் கருதினார்கள். ஆனால், பல தேசிய இனங்களின் கூட்டாகத் தொகுக்கப்பட்ட இந்தியா என்கிற தேசத்தின் பன்மைத்தன்மைக்கும் அந்தந்தச் சமூகங்களின் தனித்தன்மைக்கும் அற்புதமான அடிநாதமாக இன்றைக்கு மொழிவழியில் அமைக்கப்பட்ட மாநிலங்களே திகழ்கின்றன.

தெலங்கானா வரலாறு

இன்றைய ஆந்திரம் என்பது ராயலசீமா, கடலோர மாவட்டங்கள், தெலங்கானா பகுதி ஆகியவற்றின் தொகுப்பு. ஆந்திரம் ஒரு மாநிலமாக உருவெடுத்தபோது, இப்போதைய தெலங்கானா பகுதி அதன் ஓர் அங்கமாக இருக்கவில்லை. ஐதராபாத் சமஸ்தானத்தில் நிஜாம் உஸ்மான் அலி கான் ஆட்சியின் கீழ் இருந்தது. காட்டாட்சியும் அடிமை முறையும் வியாபித்திருந்த சமஸ்தானம் அது. ஒருபுறம் கம்யூனிஸ்ட்டுகள் நிஜாமுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தனி ராஜ்ஜியம் நடத்த முயன்ற நிஜாம் அரசு மீது படைகளை அனுப்பி இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது நேரு அரசு.

1948-ல் நடந்த இந்த இணைப்பின்போதே தனி தெலங்கானாவை மக்கள் விரும்பினார்கள்; மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தது என்பது உண்மை. ஆனால், அது இன்றைக்குக் கட்டமைக்கப்படும் அளவுக்கு நேரு அரசு ஏதோ தெலங்கானா மக்களுக்கு துரோகம் இழைத்து வலுக்கட்டாயமாக நடத்திய இணைப்பாக இருக்கவில்லை என்பதும் உண்மை. நிஜாமின் கொடுமையான ஆட்சியிலிருந்து வெளியேறி இந்திய ஒன்றியத்தில் இணைந்ததே பெரும்பான்மை மக்களுக்கு அப்போது புது விடியலாகத் தோன்றியது. ஐதராபாதைப் புதிய தலைநகரமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆந்திரத்தில், தெலங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வு, நிதிப் பகிர்வுகளை உறுதிசெய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த இடத்தில் தெலங்கானா மக்களின் சமூக வாழ்வின் பின்னணியைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். சாதவாகனர்கள், காகதியர்களின் பேரரசுகள் ஆண்ட பிரதேசமான இன்றைய தெலங்கானா பகுதி, 14-ம் நூற்றாண்டில் தில்லி சுல்தான்கள், பின்னர் பாமனி, குதுப் சாஹி மற்றும் மொகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் வந்தது. 18-ம் நூற்றாண்டில் அசஃப் ஜாஹி வம்சத்தின் ஆட்சிக்குப் பின் இந்தியாவுடன் இணையும் வரை ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டிப் பிழைப்பு நடத்தும் நிஜாம்களின் அரசாட்சியின் கீழேயே இருந்தது. காட்டாட்சி என்பதால், கல்வியிலும் சமூக வாழ்விலும் இப்பகுதி மக்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பின்தங்கிய நிலையில் இருந்தனர். ஏழ்மை, வறுமை ஆகிவற்றோடு கல்வியறிவின்மையும் சேர்ந்த இவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, மேம்படுத்தியிருக்க வேண்டியது புதிய ஆட்சியாளர்களின் கடமை. அப்படி நடக்கவில்லை. தனி தெலங்கானா கோரிக்கையுடன் 1969, 1972 ஆண்டுகளில் நடந்த போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கியது மத்திய அரசு. பல ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த தனி மாநிலக் கோரிக்கைக்கு, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இடம் கொடுத்து, உயிர் கொடுத்தது பா.ஜ.க. தொடர்ந்து காங்கிரஸும் அதே வழியில் செல்ல, எதிர்ப்புகளைக் கடந்து, பெரும் போராட்டங்களின் நடுவே தெலங்கானாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது இந்திய அரசு.

வளர்ச்சி சார்ந்து தெலங்கானா மக்கள் பின்தங்கி இருக்கிறார்கள்; பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்; அவர்களுடைய போராட்டங்களில் நியாயம் இருக்கிறது; அவர்களை முன்னோக்கி நகர்த்த நடவடிக்கைகள் வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அதே சமயம், இந்தப் போராட்டங்கள் முன்வைக்கும் தனி மாநிலத் தீர்வு எந்த அளவுக்குச் சரியானது?

சிறிய மாநிலங்கள் தீர்வா?

இந்தியாவில் இதுவரை பிரிக்கப்பட்ட மாநிலங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் தரவுகள் அப்படிச் சொல்லவில்லை.

கடந்த 2004-05 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் கல்வி வளர்ச்சி விகிதம் பிகாரில் 59% ; அங்கிருந்து பிரிந்த ஜார்க்கண்டில் 40%. மத்தியப் பிரதேசத்தில் 34%; அங்கிருந்து பிரிந்த சத்தீஸ்கரில் 24%; உத்தரப் பிரதேசத்தில் 44%; அங்கிருந்து பிரிந்த உத்தராகண்டில் 22%.

பொருளாதார வளர்ச்சி விகிதம் பிகாரில் 11% ; அங்கிருந்து பிரிந்த ஜார்க்கண்டில் 6%. மத்தியப் பிரதேசத்தில் 9%; அங்கிருந்து பிரிந்த சத்தீஸ்கரில் 9%; உத்தரப் பிரதேசத்தில் 7%; அங்கிருந்து பிரிந்த உத்தராகண்டில் 16%.

இதே காலகட்டத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாடுவோரின் விகிதத்தின் அடிப்படையிலான மாநிலங்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளவை சத்தீஸ்கரும் ஜார்க்கண்டும். ஆக, ஆளும் ஆட்சியாளர்களைப் பொறுத்தே மாநிலங்கள் வளர்ச்சி இருக்கிறது.

மாநிலங்கள் அமைப்பு என்பது ஒருவகையில் அதிகாரப் பகிர்வு - இன்னொரு வகையில் ஊழல் பகிர்வு. சிறிய மாநிலங்கள் அமைக்கப்பட்ட பின் நடக்கும் உள்கட்டுமானப் பணிகளில் ஆயிரக் கணக்கான கோடிகளைப் பெருநிறுவனங்களால் அள்ள முடியும். உள்ளபடி சிறிய மாநிலங்கள் பிரிக்கப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை நடந்திருக்கும் 'பெரிய சாதனை' ஜார்க்கண்ட் போன்ற ஒரு சிறிய மாநிலம் உருவானதால், மது கோடா போன்ற ஒரு சாமானியர் ரூ. 4000 கோடி ஊழல் செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பதுதான்.

போராட்டங்களின் சூட்சமம்

இதுவரை வளர்ச்சியின் பெயரால், எந்த மாநிலம் பிரிக்கப்படும்போதும் இந்தியா இவ்வளவு பெரிய இருவேறு போராட்டங்களைச் சந்தித்ததில்லை. ஆந்திரம் சந்திக்கிறது. ஏன்? அரசியல் - வியாபார சுய லாபக் கணக்குகள். உண்மையில் தெலங்கானா ஆதரவு - எதிர்ப்பு இரு தரப்பு போராட்டங்களையும் பின்னின்று இயக்குவது இந்தக் கணக்குகள்தான்.

ஒன்றுபட்ட ஆந்திரத்தின் வளங்களில் பெரும் பகுதி தெலங்கானா பகுதியில் இருக்கிறது. முக்கியமாக, காடுகளில் 45%. காடுகள் சார்ந்த கனிம வளங்கள் (நாட்டின் மொத்த நிலக்கரி வளத்தில் ஐந்தில் ஒரு பங்கு தெலங்கானாவில் இருக்கிறது). இந்த வளங்களைச் சூறையாடுவது எந்த மாஃபியா - சீமாந்திரா மாஃபியாவா; தெலங்கானா மாஃபியாவா - என்கிற லாபிதான் இன்றைய போராட்டங்களைத் தீர்மானிக்கின்றன.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பார்த்தால், ஓர் ஆச்சரியம் கிடைக்கும். காங்கிரஸ், பா.ஜ.க. மட்டும் அல்ல; மாவோயிஸ்ட்டுகளும்கூட தெலங்கானாவை விரும்புகிறார்கள். என்ன கணக்கு இது?

நேரு காலத்து காங்கிரஸ் ஒன்றுபட்ட ஆந்திரத்தை விரும்பியிருக்கலாம். சிங் காலத்து காங்கிரஸுக்கு பிளவுபட்ட மாநிலங்களே வசதி. பன்னாட்டு நிறுவனங்கள் எங்குமே ஒருங்கிணைந்த சமூகங்களை விரும்புவதில்லை. எது முதலீட்டுக்கு உகந்ததோ, அதுவே சந்தைக்கு உகந்தது. எது சந்தைக்கு உகந்ததோ, அதுவே முதலாளிகளுக்கு உகந்தது. எது முதலாளிகளுக்கு உகந்ததோ அதுவே அரசுக்கு உகந்தது - இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் வேறுபாடு இல்லை. சரி... மாவோயிஸ்ட்டுகள் கணக்கு?

இந்தியாவில் கம்யூனிஸப் போராட்டங்களுக்கான தொடக்கக் காலக் களங்களில் ஒன்று இன்றைய தெலங்கானா. 1946-1951 இடைப்பட்ட காலத்தில் இங்கு நடந்த விவசாயிகள் புரட்சி இன்னமும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கான உந்துசக்தி. இன்னும் மாவோயிஸ்ட்டுகளைப் பொறுத்த அளவில் ஒருவகையில் அது தாய் நிலம். அங்கிருந்து உருப்பெற்ற படைதான் பிரதமரின் வார்த்தைகளில், 'இந்தியாவின் மாபெரும் அச்சுறுத்தல்' ஆக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்த இயக்கத்தின் ஆணி வேர் முப்பால லட்சுமண ராவ் (எ) கணபதி, முக்கிய தளபதிகள் பலமுரி நாராயண்ராவ், மல்லா ராஜு ரெட்டி, வேணுகோபால், கதரி சத்யநாராயண ரெட்டி, புல்லுரி திப்பரி திருப்பதி யாவரும் தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கு தண்டகாரண்யத்தின் அடர்ந்த காடுகளில் ஆட்சி நடத்தும் மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானா அமைந்தால், மீண்டும் அது தங்கள் களமாகும் என்று நம்புகிறார்கள்.

தெலங்கானா விதைக்கும் விதை

இந்தியாவில் இதுவரை பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவம் தெலங்கானாவுக்கு உண்டு. இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களைத் தாண்டி, மொழிவழி அல்லாது பிரிக்கப்படும் முதல் மாநிலம் தெலங்கானா. எங்கே மொழிவழி மாநிலங்களுக்கான முதல் விதை விழுந்ததோ, அங்கேயே முதல் பிளவு. தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும் வலிமைக்கும் பெரும் கேடு இது.

இனி, தெலங்கானா மக்களின் முதல் எதிரி யார்? சக தெலுங்கர்கள். யாரை எதிர்த்து அவர்களின் பிரதான அரசியல் நகரும்? ஆந்திரத்தை நோக்கி. கிருஷ்ணா நீராதாரத்தில் 69%, கோதாவரி நீராதாரத்தில் 45% தெலங்கானாவில் இருக்கிறது; காலங்காலத்துக்கும் இரு மாநிலங்களும் அடித்துக்கொள்ள இது போதுமானது. கற்பனைசெய்து பாருங்கள்... திருச்சிக்காரர்களும் நாகப்பட்டினம்காரர்களும் பிரிந்து அரசியல் நடத்தும் கூத்தை. எங்கிருந்து வரும் ஒரே மொழி, ஒரே இனம் எனும் எண்ணமும் ஒற்றுமையும்?

அணிவகுக்கும் பிளவுகள்

தெலங்கானாவைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 20 தனி மாநிலக் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்திலிருந்து பூர்வாஞ்சல், ஹரீத் பிரதேசம், புந்தேல் கண்ட், பச்சிமாஞ்சல், அவத்; மேகாலயத்திலிருந்து காரோலாந்து; பிகாரிலிருந்து மிதிலாஞ்சல்; அசாமில் போடோலாந்து, தேமாஜி, கர்பி ஆங்லாங்க்; குஜராத்திலிருந்து சௌராஷ்டிரம்; மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து, காம்தாபூர்; மணிப்பூரிலிருந்து குகிலாந்து; மத்தியப் பிரதேசத்திலிருந்து விந்தியப் பிரதேசம்; கர்நாடகத்திலிருந்து துளு, குடகு; வடகிழக்கு மாநிலங்களிலிருந்து திமாஸா அல்லது திமாஜி; உத்தரப் பிரேதசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானின் சில பகுதிகளைச் சேர்த்து பிரஜ்; உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகாரின் சில பகுதிகளைச் சேர்த்து போஜ்பூர்; மேற்கு வங்கம், அசாமின் சில பகுதிகளைச் சேர்த்து காம்தாபூர்; இன்னும் நாகாலாந்து, லடாக்...

எல்லா இடங்களிலுமே மக்கள் போராடுகிறார்கள். எல்லா இடங்களையுமே பிரிக்கலாம். முழுவதுமாகக் கூறுபோட்ட பின் இடங்கள் இருக்கும்; மனிதர்கள் இருப்பார்கள்; ஆனால், இந்த தேசத்தின் பன்மைத்தன்மையை அவரவர் மொழி, கலை, கலாச்சாரக் கூறுகளோடு எது உயிரோடு வைத்திருக்கிறதோ அது - அந்தத் தேசிய இனம் என்ற கூறு - அடையாளம் தெரியாமல் சிதைந்திருக்கும். அது இன்றைய மாநிலங்களுக்கும் நல்லதல்ல; நாளைய இந்தியாவுக்கும் நல்லதல்ல!

திங்கள், 7 அக்டோபர், 2013

Jobs - UAE



Procurement Officer

Category: Sales and Marketing 
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Sharjah
Salary: 7,000 - 10,000 AED
We are looking procurement Officer(UAE D/L Must)with Ras Alkhaimah based company.Min 3-4 Year experience in electrical field.Who are available in UAE please send your resume to delmajob1@gmail.com.For more information please call to our office number
________________________________________

Assistant Indoor Sales

Category: Sales and Marketing
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 4,000 - 5,000 AED
Urgently looking for indoor sales agents to assist us in the shop with some of our sales and marketing functions indoor.

Please email: hudsonmeya@live.com
________________________________________

Requires a Salesman

Category: Sales and Marketing
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Ajman
Salary: 3,000 - 4,000 AED
Required an Indian salesman with driving license and transferable visa for a hygiene and paper products company based in Ajman for immediate start. Salary offered : Dhs 3500+ commission + car + annual benefits as per UAE labour law.

Email your CV to alferoz1@eim.ae
________________________________________

Looking for a Sales And Marketing

Category: Sales and Marketing
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 7,000 - 10,000 AED
Looking for Sales and Marketing Professional in the Smart Home Field, prior experience in the same field is MUST.

Apply to atcjobsonline@gmail.com
________________________________________

Sales Consultant

Category: Sales and Marketing
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 3,000 - 4,000 AED
Looking for a Sales Consultant / Buyer for e-commerce / daily deals website (bazaar section). Salary AED 3,000 - 5,000 + commissions.

Please email CV to: resume@cosmoscreatives.com
________________________________________

Requires a Salesman

Category: Sales and Marketing
Type: Full Time
Experience: 1 - 2 Year
Education: High School or equivalent
Location: Dubai
Salary: 1,000 - 2,000 AED
Looking for a Salesman, with good exp., required in RAK. Salary Dhs 1,200 P.M. Call 050-8999755.
________________________________________

Civil engineer Required

Category: Engineering
Type: Full Time
Experience: 5 - 7 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 10,000 - 12,000 AED
Candidate should be Civil engineer having (5-7) years of experience in the field of design-implement projects (Hospital are most favorable).Working level of proficiency for Auto CAD.Ready for immediate (if possible) relocation.Quantity measurement and calculation for Project implementation and execution. Motivated and good personality.

Forward your CV to mentormc@gmail.com
________________________________________

Requires a Civil Engineer

Category: Engineering
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 5,000 - 7,000 AED
A newly operational contracting company in Dubai is looking a civil engineer with at least 2 years minimum experienced in UAE or other GCC countries in the same field, preferably with UAE driving license.

Please forward your resume to larz25_dxb@yahoo.com
________________________________________

Requires a Civil Engineer

Category: Engineering
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 5,000 - 7,000 AED
A newly operational contracting company in Dubai is looking a civil engineer with at least 2 years minimum experienced in UAE or other GCC countries in the same field, preferably with UAE driving license.

Please forward your resume to larz25_dxb@yahoo.com
________________________________________

Junior MEP engineer

Category: Engineering
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Abu Dhabi
Salary: 5,000 - 7,000 AED
An reputed MEP company looking for dynamic candidate on the position of Junior MEP Engineer. Specially on HVAC/FF. right candidates are requested to send their CV"s on palmleaves_uae@yahoo.com
________________________________________


Requires a Secretary

Category: Secretarial
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 2,000 - 3,000 AED
Unrgently Required Secretary for a Engineering Company in DIP, Dubai. Interested Candidate apply
to:aces3@emirates.net.ae

________________________________________

Requires a Data Entry Operator - Male

Category: Secretarial
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 3,000 - 4,000 AED
Male Data entry operator required for a money exchange company located in Dubai . Candidates should have fair English and Computer skills.

Please mail your CV to careers@nedxb.com .
**Note :Must mention your nationality in the email subject field .
________________________________________

Personal Assistant

Category: Secretarial
Type: Full Time
Experience: 2 - 5 Years
Education: Bachelor of Science
Location: Dubai
Salary: 4,000 - 5,000 AED
Required a Personal Assistant lady for Company CEO preferably Philippine National. With or without experience.

Apply to samrich212@gmail.com

Attention

Dear Readers,
due to maintenance process are going, some pages are cannot be viewed, Sorry for the inconvenient, InshaAllah- Soon problem will solved

MKPatti -Events
Team
email : muckanamalaipatti@gmail.com

பாவங்கள் மன்னிக்கப்படும்

ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும்
உபரியான தொழுகைக்காகவும் நாம்
செய்யும் உளூவின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும்.
எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச்
செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும்.

361 ﻋَﻦْ ﻋُﺜْﻤَﺎﻥَ ﺑْﻦِ ﻋَﻔَّﺎﻥَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻣَﻦْ
ﺗَﻮَﺿَّﺄَ ﻓَﺄَﺣْﺴَﻦَ ﺍﻟْﻮُﺿُﻮﺀَ ﺧَﺮَﺟَﺖْ ﺧَﻄَﺎﻳَﺎﻩُ ﻣِﻦْ ﺟَﺴَﺪِﻩِ ﺣَﺘَّﻰ ﺗَﺨْﺮُﺝَ ﻣِﻦْ ﺗَﺤْﺖِ
ﺃَﻇْﻔَﺎﺭِﻩِ ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர்
முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர்
செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள்
அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில்,
அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய
பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி),

நூல் :
முஸ்லிம் (413)

வெள்ளி, 4 அக்டோபர், 2013

அரபா நோன்பு


     
அரபா   தினத்தன்று   நோன்பு   நோற்பது  முந்திய  மற்றும்  அடுத்த  இரண்டு  வருட  பாவங்களையும்  மன்னிக்கும்  என்று  நபி  ஸல்   அவர்கள்  கூறினார்கள்   . அறிவிப்பு  அபூகதாதா   ரலி  - நூல்  முஸ்லிம் .

நோன்பு  நோர்கவேண்டிய  நாள்  துள்  ஹஜ்ஜ்  பிறை  9 (15/10/2013)

கூட்டு  குர்பானி  - ஒரு  நபருக்கு  ரூபாய்   1500/-
    

தப்லீக் ஜமாஅத்

திருக்கலிமாவை முன்மொழிந்து ஈமான்
கொண்டுவிட்டதால் நரகம்
சென்றாவது சொர்க்கம்
சென்றுவிடலாம் என்று சில முஸ்லிம்கள்
மார்க்கத்தை கடைப்பிடிப்பதில் அலட்சியமாக இருக்கிறார்கள்.
கண்மூடித்தனமாக வாழ்கிறார்கள். நரகம்
சென்று வேதனைகள் அனுபவித்த
பிறகாவது சொர்க்கம் சென்றுவிடுவோம்
என்று பலர் அலட்சியமாக இருக்கிறார்கள். இந்த
எண்ணம் நமக்கிருந்தால் இந்த நிமிடமே நம்மை மாற்றிக்
கொள்ள வேண்டும். நரகம் என்பது சாதாரண
வேதனை கொண்ட வாழ்க்கையல்ல. நரகம்
போன்று எந்தவொரு தீமையும் எங்கும் இல்லை.
இதோ நபிகளார் சொல்வதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்த
(
நண்பகலின்) போது (தம் இல்லத்திலிருந்து)
புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்)தார்கள்.
பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)
மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள்.
அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும்
எனவும் குறிப்பிட்டார்கள். பிறகு (அவர்கள் விரும்பாத
பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்டபோது), "(இன்று)
யார் எது குறித்துக் கேட்கவிரும்பினாலும் கேட்கட்டும். இந்த
இடத்தில் நான் இருக்கும் வரை எது குறித்து நீங்கள் என்னிடம்
கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான்
தெரிவிக்காமல் இருக்கமாட்டேன்'' என்று (கோபத்துடன்)
கூறினார்கள். எனவே மக்கள் மிகுதியாக அழலாயினர்.
நபி (ஸல்) அவர்களோ, "கேளுங்கள் என்னிடம்''
என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி)
அவர்கள் எழுந்து, " என் தந்தை யார்?'' என்று கேட்டார்கள்
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஹுதாஃபாதாம் உன் தந்தை''
என்று பதிலளித்து விட்டு மீண்டும், "கேளுங்கள் என்னிடம்''
என்று அடிக்கடி கூறலானார்கள். (நபியவர்களின்
முகக்குறியை அறிந்துகொண்ட) உமர் (ரலி) அவர்கள்
மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வை இறைவனாகவும்
இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்)
அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன்
ஏற்றுக்கொண்டோம்'' என்று கூறினார்கள். (இதைக்கேட்ட)
நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு,
நபி (ஸல்) அவர்கள், "சற்றுமுன் இதோ இந்த சுவரின் பரப்பில்
சொர்க்கத்தையும் நரகத்தையும் எனக்கு எடுத்துக்
காட்டப்பட்டது. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சி போன்று)
நன்மையிலும் தீமையிலும் வேறெந்த காட்சியையும் நான்
(
ஒருபோதும்) கண்டதில்லை'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), 

ஆதாரம் : புகாரி (540)





பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டாலும் சரி! குஜராத்தில்
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்
கொல்லப்பட்டாலும் சரி! இந்த அக்கிரமத்திற்கு
எதிராக, அநீதிக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.
மாறாக வாய் மூடி வாளாவிருப்பார்கள்.

வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளைக்
கண்டிக்காததுடன் மட்டுமில்லாமல் அந்த வரதட்சணைத்
திருமணத்தையும் அதில் நடைபெறும் விருந்துகளையும்
புறக்கணிக்க மாட்டார்கள். அவ்வாறு புறக்கணிப்பது
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியில் மிக உயர்ந்த
தரத்தில் உள்ள செயலாகும்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி
செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள்
வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்!
(
அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப்
போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன்
அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர்
அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் 4:140

இதைக் கவனத்தில் கொண்டு இத்தகைய திருமண
விருந்துகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பந்திக்கு முந்து,
படைக்குப் பிந்து என்பது போன்று சாப்பாட்டிற்கு முதல் ஆளாய்
முந்திக் கொள்கிறார்கள்.
காடே, செடியே, கண்ணே, ரஹ்மானே என்று மனைவி
மக்களை விட்டு விட்டு, அல்லாஹ் பார்த்துக்
கொள்வான் என்று நாற்பது நாட்கள், நான்கு
மாதம் பத்து நாட்கள் ஊர் ஊராய் சுற்றக் கிளம்பி
விடுவார்கள். மனைவி மக்களுக்கு உழைத்துக் கொடுப்பது
மார்க்கக் கடமை என்பதை உணர மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "உம்முடைய
விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு
இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
உமக்கு இருக்கின்றன!'' என்றார்கள். "தாவூத் நபி (அலை)
அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?'' என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வருடத்தில் பாதி நாட்கள்!''
என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: புகாரி 1974

இந்த ஹதீஸின் அடிப்படையில் மனைவிக்குச் செய்ய
வேண்டிய கடமையை இவர்கள் செய்வதில்லை. மனைவி
மக்களுக்காகப் பாடுபட்டு சம்பாதிப்பதற்கும்
அல்லாஹ்விடம் கூலி இருக்கின்றது என்பதை இவர்கள்
கவனத்தில் கொள்வதில்லை.

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மனைவி, மக்களுக்குச்
செலவு செய்வதும் ஒரு தர்மம் என்பதை இவர்கள்
அறவே சிந்திப்பது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக்
கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு
செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன்
நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர்
ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 56

சூஃபிகள் என்ற வழிகேடர்கள் திருமணம் முடிக்காமல்
சன்னியாசி ஆனார்கள். ஆனால் இவர்கள் திருமணம்
முடித்து விட்டு, பிள்ளைகளையும் பெற்று விட்டு அவர்களைக்
கவனிக்காமல் அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச்
செய்யாமல் அநீதி இழைக்கின்றனர். இத்துடன்
இவர்களது அநியாயங்கள் நின்று விடுவதில்லை. தனது பிள்ளை
தப்லீக்கில் செல்லவில்லை என்பதற்காக
காட்டுமிராண்டித் தனமாக அந்தப் பிள்ளையைத் தாக்கி,
சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்ட
கொடுமையும் நடந்துள்ளது.
_______________________
தப்லீக் ஜமாஅத்தில் செல்பவர்கள் பீடி,
சிகரெட் புகைப்பதை ஒரு பொருட்டாகக் கருதுவது
கிடையாது. இதில் இருப்பவர்கள் பலர் சர்வ
சாதாரணமாக பீடி, சிகரெட் புகைப்பதைக் காண
முடியும்.

தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் மாணவர்கள் படிப்பில்
கவனம் செலுத்தாமல் அங்கு தரப்படும் உணவுக்கும்
ஓய்வுக்கும் அடிமையாகி படிப்பில் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம்.

அதுபோன்று தொழில் செய்பவர்கள் தங்கள்
தொழிலை ஒழுங்காகச் செய்யாமல் 40 நாள்,
4
மாதம் 10 நாள் விடுமுறை விட்டுச் செல்வதால்
திவாலாகி விடுவதையும், ஒரு நிறுவனத்தில் வேலை
செய்பவர்கள் தப்லீக் செல்வதால் வேலையை விட்டு
வெளியேற்றப்படுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

இப்படி தப்லீக் என்ற பெயரில் மார்க்கத்தில்
இவர்களது அறியாமையின் பட்டியல் நீண்டு கொண்டே
செல்கின்றது. அவை அனைத்தையும் சொல்வதற்கு
இந்த இதழ் போதாது. விரிவான விளக்கங்களுக்கு தஃலீம்
தொகுப்பு ஓர் ஆய்வு என்ற நூலைப் பார்க்கவும்.


__________
 [இதுவரை]மேலே நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தப்லீக் என்ற
இயக்கம், ஏகத்துவக் கொள்கையிலிருந்து நம்மை விலகச்
செய்து, குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலிருந்து
முற்றிலும் தடம் மாற்றி தஃலீம் புத்தகத்தை மட்டும் வேதமாகி,
அறியாமை வழியில் அழைத்துச் செல்லும் ஓர் இயக்கம்
என்பதில் சந்தேகமில்லை.

சமாதி வழிபாட்டிலிருந்து மக்களைக் காப்பதற்காக
இல்யாஸ் மவ்லானா ஆரம்பித்த தப்லீக் இயக்கம்
இப்போது தடம் மாறி நிற்கின்றது.

நமது பிள்ளைகளை அதில் சிக்காமல் காக்க வேண்டும். எனவே
தான், பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பப்ளிக் ஜாக்கிரதை
என்று எச்சரிக்கின்றோம்.