Breaking News
Loading...
வெள்ளி, 4 அக்டோபர், 2013

Info Post
திருக்கலிமாவை முன்மொழிந்து ஈமான்
கொண்டுவிட்டதால் நரகம்
சென்றாவது சொர்க்கம்
சென்றுவிடலாம் என்று சில முஸ்லிம்கள்
மார்க்கத்தை கடைப்பிடிப்பதில் அலட்சியமாக இருக்கிறார்கள்.
கண்மூடித்தனமாக வாழ்கிறார்கள். நரகம்
சென்று வேதனைகள் அனுபவித்த
பிறகாவது சொர்க்கம் சென்றுவிடுவோம்
என்று பலர் அலட்சியமாக இருக்கிறார்கள். இந்த
எண்ணம் நமக்கிருந்தால் இந்த நிமிடமே நம்மை மாற்றிக்
கொள்ள வேண்டும். நரகம் என்பது சாதாரண
வேதனை கொண்ட வாழ்க்கையல்ல. நரகம்
போன்று எந்தவொரு தீமையும் எங்கும் இல்லை.
இதோ நபிகளார் சொல்வதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்த
(
நண்பகலின்) போது (தம் இல்லத்திலிருந்து)
புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்)தார்கள்.
பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)
மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள்.
அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும்
எனவும் குறிப்பிட்டார்கள். பிறகு (அவர்கள் விரும்பாத
பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்டபோது), "(இன்று)
யார் எது குறித்துக் கேட்கவிரும்பினாலும் கேட்கட்டும். இந்த
இடத்தில் நான் இருக்கும் வரை எது குறித்து நீங்கள் என்னிடம்
கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான்
தெரிவிக்காமல் இருக்கமாட்டேன்'' என்று (கோபத்துடன்)
கூறினார்கள். எனவே மக்கள் மிகுதியாக அழலாயினர்.
நபி (ஸல்) அவர்களோ, "கேளுங்கள் என்னிடம்''
என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி)
அவர்கள் எழுந்து, " என் தந்தை யார்?'' என்று கேட்டார்கள்
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஹுதாஃபாதாம் உன் தந்தை''
என்று பதிலளித்து விட்டு மீண்டும், "கேளுங்கள் என்னிடம்''
என்று அடிக்கடி கூறலானார்கள். (நபியவர்களின்
முகக்குறியை அறிந்துகொண்ட) உமர் (ரலி) அவர்கள்
மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வை இறைவனாகவும்
இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்)
அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன்
ஏற்றுக்கொண்டோம்'' என்று கூறினார்கள். (இதைக்கேட்ட)
நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு,
நபி (ஸல்) அவர்கள், "சற்றுமுன் இதோ இந்த சுவரின் பரப்பில்
சொர்க்கத்தையும் நரகத்தையும் எனக்கு எடுத்துக்
காட்டப்பட்டது. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சி போன்று)
நன்மையிலும் தீமையிலும் வேறெந்த காட்சியையும் நான்
(
ஒருபோதும்) கண்டதில்லை'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), 

ஆதாரம் : புகாரி (540)

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டாலும் சரி! குஜராத்தில்
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்
கொல்லப்பட்டாலும் சரி! இந்த அக்கிரமத்திற்கு
எதிராக, அநீதிக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.
மாறாக வாய் மூடி வாளாவிருப்பார்கள்.

வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளைக்
கண்டிக்காததுடன் மட்டுமில்லாமல் அந்த வரதட்சணைத்
திருமணத்தையும் அதில் நடைபெறும் விருந்துகளையும்
புறக்கணிக்க மாட்டார்கள். அவ்வாறு புறக்கணிப்பது
நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் தப்லீக் பணியில் மிக உயர்ந்த
தரத்தில் உள்ள செயலாகும்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி
செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள்
வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்!
(
அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப்
போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன்
அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர்
அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் 4:140

இதைக் கவனத்தில் கொண்டு இத்தகைய திருமண
விருந்துகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பந்திக்கு முந்து,
படைக்குப் பிந்து என்பது போன்று சாப்பாட்டிற்கு முதல் ஆளாய்
முந்திக் கொள்கிறார்கள்.
காடே, செடியே, கண்ணே, ரஹ்மானே என்று மனைவி
மக்களை விட்டு விட்டு, அல்லாஹ் பார்த்துக்
கொள்வான் என்று நாற்பது நாட்கள், நான்கு
மாதம் பத்து நாட்கள் ஊர் ஊராய் சுற்றக் கிளம்பி
விடுவார்கள். மனைவி மக்களுக்கு உழைத்துக் கொடுப்பது
மார்க்கக் கடமை என்பதை உணர மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "உம்முடைய
விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு
இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
உமக்கு இருக்கின்றன!'' என்றார்கள். "தாவூத் நபி (அலை)
அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?'' என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வருடத்தில் பாதி நாட்கள்!''
என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: புகாரி 1974

இந்த ஹதீஸின் அடிப்படையில் மனைவிக்குச் செய்ய
வேண்டிய கடமையை இவர்கள் செய்வதில்லை. மனைவி
மக்களுக்காகப் பாடுபட்டு சம்பாதிப்பதற்கும்
அல்லாஹ்விடம் கூலி இருக்கின்றது என்பதை இவர்கள்
கவனத்தில் கொள்வதில்லை.

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மனைவி, மக்களுக்குச்
செலவு செய்வதும் ஒரு தர்மம் என்பதை இவர்கள்
அறவே சிந்திப்பது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக்
கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு
செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன்
நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர்
ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 56

சூஃபிகள் என்ற வழிகேடர்கள் திருமணம் முடிக்காமல்
சன்னியாசி ஆனார்கள். ஆனால் இவர்கள் திருமணம்
முடித்து விட்டு, பிள்ளைகளையும் பெற்று விட்டு அவர்களைக்
கவனிக்காமல் அவர்களுக்குச் செய்ய வேண்டியதைச்
செய்யாமல் அநீதி இழைக்கின்றனர். இத்துடன்
இவர்களது அநியாயங்கள் நின்று விடுவதில்லை. தனது பிள்ளை
தப்லீக்கில் செல்லவில்லை என்பதற்காக
காட்டுமிராண்டித் தனமாக அந்தப் பிள்ளையைத் தாக்கி,
சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்ட
கொடுமையும் நடந்துள்ளது.
_______________________
தப்லீக் ஜமாஅத்தில் செல்பவர்கள் பீடி,
சிகரெட் புகைப்பதை ஒரு பொருட்டாகக் கருதுவது
கிடையாது. இதில் இருப்பவர்கள் பலர் சர்வ
சாதாரணமாக பீடி, சிகரெட் புகைப்பதைக் காண
முடியும்.

தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் மாணவர்கள் படிப்பில்
கவனம் செலுத்தாமல் அங்கு தரப்படும் உணவுக்கும்
ஓய்வுக்கும் அடிமையாகி படிப்பில் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம்.

அதுபோன்று தொழில் செய்பவர்கள் தங்கள்
தொழிலை ஒழுங்காகச் செய்யாமல் 40 நாள்,
4
மாதம் 10 நாள் விடுமுறை விட்டுச் செல்வதால்
திவாலாகி விடுவதையும், ஒரு நிறுவனத்தில் வேலை
செய்பவர்கள் தப்லீக் செல்வதால் வேலையை விட்டு
வெளியேற்றப்படுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

இப்படி தப்லீக் என்ற பெயரில் மார்க்கத்தில்
இவர்களது அறியாமையின் பட்டியல் நீண்டு கொண்டே
செல்கின்றது. அவை அனைத்தையும் சொல்வதற்கு
இந்த இதழ் போதாது. விரிவான விளக்கங்களுக்கு தஃலீம்
தொகுப்பு ஓர் ஆய்வு என்ற நூலைப் பார்க்கவும்.


__________
 [இதுவரை]மேலே நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தப்லீக் என்ற
இயக்கம், ஏகத்துவக் கொள்கையிலிருந்து நம்மை விலகச்
செய்து, குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலிருந்து
முற்றிலும் தடம் மாற்றி தஃலீம் புத்தகத்தை மட்டும் வேதமாகி,
அறியாமை வழியில் அழைத்துச் செல்லும் ஓர் இயக்கம்
என்பதில் சந்தேகமில்லை.

சமாதி வழிபாட்டிலிருந்து மக்களைக் காப்பதற்காக
இல்யாஸ் மவ்லானா ஆரம்பித்த தப்லீக் இயக்கம்
இப்போது தடம் மாறி நிற்கின்றது.

நமது பிள்ளைகளை அதில் சிக்காமல் காக்க வேண்டும். எனவே
தான், பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பப்ளிக் ஜாக்கிரதை
என்று எச்சரிக்கின்றோம்.