சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை தாங்கள் தயாரிக்க இல்லை என்று, கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் தலித் குறித்த சர்ச்சை கேள்விகள் கேட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.@HRDMinistry
இதைப் பற்றி 969 பேர் பேசுகிறார்கள்
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், அந்த சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் உண்மையில்லை என கேந்திரிய வித்யாலயா தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இது போன்ற கேள்வித்தாள் தயாரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளவாசிகள் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென்றும் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv