வியாழன், 31 அக்டோபர், 2013

72 கூட்டத்தில் ஒரு கூட்டம் தான் சொர்க்கம் செல்லும்

72 கூட்டத்தில் ஒரு கூட்டம் தான் சொர்க்கம் செல்லும் என்றால் என்ன தான் நன்மை செய்தாலும் சொர்க்கம் செல்ல முடியாதா?

அமீன் ஜித்தா

பதில்:

ஒரு குறிப்பிட்ட கூட்டம் தான் சொர்க்கம் செல்லும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விட்டானோ அவர்கள் ஒரு போதும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள், அல்லாஹ்வை நிராகரித்தவர்கள், கொலை செய்தவர்கள் போன்ற சிலருக்கு சொர்க்கம் ஹராமாக்கப்பட்டு விட்டது.

மற்றவர்கள் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் சொர்க்கம் செல்லுதல் இரு வகைகளில் உள்ளது. தீர்ப்பு அளிக்கும் போதே சொர்க்கத்துக்கு அனுப்பப்படுதல் ஒரு வகை.

தீய செயல்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டு கடைசியாக சொர்க்கத்துக்கு அனுப்பப்படுதல் இன்னொரு வகை. இவர்கள் கூட அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டால் எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் போய் விடுவார்கள். கடுகளவு ஈமான் உள்ளவராக இருந்தாலும் அவர் இறுதியில் சொர்க்கம் செல்வார். சொர்க்கத்துச் செல்லும் கூட்டம் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களை எடுத்த எடுப்பிலேயே – நரகத்துக்கு போகாமல் – சொர்க்கம் செல்லுதல் என்று புரிந்து கொண்டால் குழப்பம் இராது.

Source from Onlinepj