/indian-express-tamil/media/media_files/2026/03/03/govt-shcool-students-2026-03-03-15-23-28.jpg)
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநிலப் பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ந் தேதியில் இருந்து 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் தொடங்கி மார்ச் 26-ந் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து மார்ச் 11-ந் தேதி தொடங்கிய 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 6-ந் தேதி வரை இந்த தேர்வு நிறைவு பெறுகிறது. இதனிடையே இன்று (ஏப்ரல் 1) முதல் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 24.2 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முற்பகலிலும், 7 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும். இன்று தமிழ் பாடத்துடன் தொடங்கும் இத்தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதி அறிவியல் பாடத்துடன் நிறைவடைகின்றன.
அதேபோல், 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4-ஆம் தேதியும், 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன. 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 பாடங்களுக்கும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 6 பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இந்த வகுப்புகளுக்கான தேர்வு தேதிகள் முன்கூட்டியே மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-state-board-exam-schedule-for-6th-to-9th-students-update-in-tamil-11441410





