செவ்வாய், 1 அக்டோபர், 2013

அப்பாவி முஸ்லிமும்

எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்டெல்லி: தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது செய்யப்படமால் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில்

கூறியிருப்பதாவது,அப்பாவி முஸ்லிம் வாலிபர்கள் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது. தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தாங்கள் வேண்டும் என்றே குறிவைக்கப்படுவதாக சில சிறுபான்மையின வாலிபர்கள் கருதுகின்றனர்.தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு தீவிரவாத வழக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்கும்போது சமுதாய நல்லிணக்கத்தை மனதில் வைத்து சட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும். தவறுதலாக கைது செய்யப்படும் சிறுபான்மையினரை உடனே விடுவிப்பதுடன் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.மேலும் அவர்களை தவறுதலாக கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கடந்த மே மாதம் 39 சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷிண்டேவின் இந்த திடீர் உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.