நபி (ஸல்) அவர்கள்
தொழுகையை நிறைவேற்றிய
நிலையில்
ஒரு மனிதர் வந்தார்.
அப்போது நபி
(ஸல்) அவர்கள்,
"(இவருடன்
சேர்ந்து தொழுவதன் மூலம்)
இவருக்கு லாபம்
அளிக்கக்கூடியவர் யார்?'' என்று
கேட்டனர். ஒரு
மனிதர்
முன்வந்தார். அவருடன் வந்த
மனிதர்
சேர்ந்து தொழுதார்
அறிவிப்பவர்: அபூ ஸயீத்
(ரலி)
நூல்: திர்மிதி (204), அபூதாவூத்
487
மேற்கண்ட ஹதீஸ், ஒரு
பள்ளியில் முதலில்
ஜமாஅத்தாகத்
தொழுகை நடத்தி முடிந்த
பிறகு மீண்டும்
அதே பள்ளியில்
#ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு
மிகத் தெளிவான
ஆதராமாகும்.
********
ஒரு #உளூ-வில்
பல தொழுகைகளைத்
#தொழுதல்:
ஒரு தடவை
உளூச் செய்த
பின் அந்த
உளூ நீங்காத
வரை எத்தனை
தொழுகைகளையும் தொழலாம். ஒவ்வொரு தொழுகை நேரம்
வந்ததும் உளூச்
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை.
'#நபி (ஸல்)
அவர்கள் ஒவ்வொரு
தொழுகையின் போதும் உளூச் செய்வது வழக்கம்'
என்று அனஸ்
(ரலி) கூறினார்கள்.'அப்படியானால் நீங்கள்
எப்படி நடந்து
கொள்வீர்கள்?' என்று அனஸ் (ரலி)யிடம்
கேட்டேன். அதற்கவர்கள்,
'உளூ நீங்காத
வரை ஒரு
உளூவே எங்களுக்குப்
போதுமானதாகும்' என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர்
பின் ஆமிர்
(ரலி)
நூல்: புகாரீ
214
நபி (ஸல்)
அவர்கள் மக்கா
வெற்றியின் போது ஒரு உளூவின் மூலம்
பல தொழுகைகளைத்
தொழுதார்கள். அப்போது தமது காலுறைகள் மீது
மஸஹ் செய்தார்கள்.
'ஒரு நாளும்
செய்யாத ஒன்றை
இன்றைய தினம்
செய்தீர்களே!' என்று உமர் (ரலி) கேட்டார்கள்.
அதற்கு நபி
(ஸல்) அவர்கள்,
'உமரே! வேண்டுமென்று
தான் அவ்வாறு
செய்தேன்' என்று
விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: புரைதா
(ரலி)
நூல்: #முஸ்லிம்
415
#நெருங்காதீர்
இன்று நம்
குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால்,
எல்லோருமே விபச்சாரம்
எனும் அசிங்கத்தில்
சர்வ சாதரணமாக
ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற
எல்லாருமே சினிமாக்களை
(சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது
விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச்
செய்வதற்கு நெருங்கிய குற்றத்தில் வரும்.
விரலசைத்தல்:
நபி (ஸல்)
அவர்கள் தமது
விரலை உயர்த்தினார்கள்.
பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அவர்கள்
அசைத்துக் கொண்டிருந்ததை
நான் பார்த்தேன்.
இதன் பிறகு
குளிர் காலத்தில்
நான் (மறுபடியும்)
வந்தேன். அப்போது
மக்கள் ஆடைகளைப்
போர்த்தி இருந்தனர்.
குளிரின் காரணத்தால்
அவர்கள் போர்த்தியிருந்த
ஆடைகளுக்குள் அவர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்ததை
கண்டேன்.
18115حَدَّثَنَا
عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ
أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ أخْبَرَهُ قَالَ
قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَيْفَ يُصَلِّي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ
حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ
الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ ثُمَّ قَالَ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ
رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ
رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ
أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى فَوَضَعَ كَفَّهُ
الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ
الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ
حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ثُمَّ
جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ
الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنْ الْبَرْدِ رواه
أحمد
அறிவிப்பவர் : வாயில்
பின் ஹுஜ்ர்
(ர-லி),
நூல் : அஹ்மது
(18115)
__________---