வியாழன், 20 மார்ச், 2014

இஷ்ரத் ஜஹான


இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் மோடியின் முகமூடியைக் கிழிக்கும் முக்கியசிடிஆதாரம் சிக்கியது...!


மோடியின் தனி செயலாளர்கள் ஜி.சி. முர்மு, .கே.சர்மா சதி திட்டம்.

குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதால் இந்த என்கவுன்டரை நடத்தியதாக காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால் இதுதொடர்பாக சி.பி.. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது.

இஷ்ரத் ஜஹான் உட்பட நான்கு அப்பாவிகளின் மீதான என்கவுன்டர் சம்பவம் நடந்தபோது அகமதாபாத் இணை கமிஷனராக இருந்த மூத்த போலீஸ் அதிகாரி பாண்டே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். காவல்துறையை சேர்ந்த சிங்கால் என்ற அதிகாரி மீதும் வழக்கு தொடரப்பட்டது.

தற்போது அவர் ஒரு சி.டி. ஆதாரத்தை சி.பி..யிடம் வழங்கியுள்ளார். அந்த சி.டியில் 70 நிமிட ஆடியோ உரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த ஆடியோ உரையாடலில் மோடியின் தனி செயலாளரான ஜி.சி. முர்மு, .கே சர்மா மற்றும் அவரது முக்கிய அமைச்சர்களின் பேச்சுகள் அடங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் இந்த போலி என்கவுன்டர் குறித்த வழக்கின் போக்கை மாற்றுவது குறித்து விவாதித்தது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சி.டி ஆதாரத்தை மையமாக வைத்து தற்போது மோடியின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக தனது விசாரணையை சி.பி. துரிதப்படுத்தியுள்ளது.

அப்பாவிகளை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளிய மோடி நல்லவரா ?. வல்லவரா ?. நாட்டின் பாதுகாவலரா ?. பொதுமக்களே ! சிந்தியுங்கள். நடுநிலையாளர்களே, நாட்டின் மானம் காக்க நினைப்பவர்களே இந்த கொலை கும்பலை புறக்கனியுங்கள் !