முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டார்கள்
என்று நம்பி
மேலே நாம்
எடுத்துக்காட்டிய அத்தனை வசனங்களையும் மறுப்பதை விட
அந்த வசனங்களை
ஏற்று அந்த
ஹதீஸை ஏற்காது
விட்டு விடுவது
தான் சிறந்ததாகும்.
அந்தச் செய்தியில் எங்கோ
தவறு ஏற்பட்டுள்ளது
என்பதை இந்தச்
செய்தி பலவிதமாக
அறிவிக்கப்படுவதிலிருந்தே நாம் முடிவு
செய்து விடலாம்.
சீப்பு, உதிர்ந்த முடிகள்
ஆகியவற்றின் மூலம் சூனியம் செய்யப்பட்டு கிணற்றில்
புதைக்கப்பட்டதாக இது குறித்த ஹதீஸ்களில் கூறப்படுகிறது.
முரண்பட்ட அறிவிப்புக்கள்
எந்தப் பொருட்களில் சூனியம்
வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா
என்று ஆயிஷா
(ரலி) கேட்ட
போது 'அப்புறப்படுத்தவில்லை;
அதனால் மக்களிடையே
கேடுகள் ஏற்படும்'
என்று நபிகள்
நாயகம் (ஸல்)
கூறியதாக புகாரியின்
3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
'நபி(ஸல்)
அவர்கள் உடனடியாக
அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள்' என்று புகாரியின்
5765, 6063 வது ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது.
அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும்
முரண்பாடு காணப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அந்தக்
கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக
புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில்
கூறப்பட்டுள்ளது.
ஆனால் நஸயீயின் 4012 வது
ஹதீஸில் ஆட்களை
அனுப்பி வைத்து
அதை அப்புறப்படுத்தியதாகவும்,
அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள்
குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத்
18467 வது ஹதீஸிலும்
இந்தக் கருத்து
பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்)
அருகில் இரண்டு
வானவர்கள் அமர்ந்து
தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம்
தனக்கு சூனியம்
செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம்
(ஸல்) கூறியதாக
புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.
நஸயீயின் 4012வது ஹதீஸில்
ஜிப்ரீல்(அலை)
வந்து 'உமக்கு
யூதன் ஒருவன்
சூனியம் வைத்துள்ளான்'
என்று நேரடியாகக்
கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள்
நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும்
கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புக ளில் முரண்பாடு
இருப்பதாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.
இவ்வாறு விரல் விட்டு
எண்ணக் கூடிய
ஹதீஸ்கள் உள்ளன.
அவற்றை மட்டும்
தான் ஏற்கக்
கூடாது என்று
தக்க காரணத்துடன்
கூறுகிறோம்.
இவ்வாறு இல்லாத பல்லாயிரம்
ஹதீஸ்களை நாம்
ஏற்கிறோம். ஏற்கத் தான் வேண்டும் என்கிறோம்.
குர்ஆன் மட்டும்
போதும், நபிவழி
அவசியமில்லை எனக் கூறுவோர் இஸ்லாத்தை விட்டு
வெளியேறி விட்டனர்
என்பதை திர்மிதீ
தமிழாக்கத்தின் முன்னுரையிலும், அல்முபீன் மாத இதழில்
தொடர் கட்டுரையிலும்
தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறோம்.
113, 114வது அத்தியாயங்கள்
திருக்குர்ஆனின் 113,
114வது அத்தியாயங்களின்
அடிப்படையிலும் சூனியத்தின் மூலம் அதிசயங்களை நிகழ்த்த
இயலும் என்று
வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது அதை
நீக்குவதற்காக ஃபலக், நாஸ் எனும் அத்தியாயங்கள்
அருளப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்வதற்காக
12 முடிச்சுக்கள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன்
ஒரு முடிச்சு
அவிழ்ந்தது என்ற செய்தியின் அடிப்படையிலும் நபிகள்
நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டதை நிரூபிக்க முயல்கின்றனர்.
சில தஃப்ஸீர்களில் அறிவிப்பாளர்
வரிசையில்லாமல் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாகவும்
இதில் ஏராளமான
ஆட்சேபனைகள் உள்ளதாகவும் இப்னு கஸீர் அவர்கள்
தமது விரிவுரையில்
கூறுகிறார்கள்.
மேலும் மேற்கண்ட இரண்டு
அத்தியாயங்களும் மதீனாவில் தான் அருளப்பட்டது என்பதற்குக்
கூட ஆதாரமில்லை.
இதிலேயே கருத்து
வேறுபாடு உள்ளது.
அப்துல் ஹமீத் பாகவி
அவர்கள் மொழி
பெயர்த்த தமிழாக்கத்தில்
'இவ்விரு அத்தியாயங்களும்
மக்காவில் அருளப்பட்டவை'
என்று கூறுகிறார்.
நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள்
மொழி பெயர்த்த
தமிழாக்கத்தில் 'இவ்விரு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்டவை'
என்று கூறுகிறார்.
எங்கே அருளப்பட்டது என்பதற்கே
ஆதாரம் கிடையாது
என்பதால் 12 முடிச்சுக்கள் அவிழ்ந்ததாகக்
கூறுவது கட்டுக்கதை
என்பது உறுதியாகிறது.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
'முடிச்சுக்களில் ஊதும்
பெண்கள்' (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு
சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று
வாதிடுகின்றனர்.
முடிச்சுக்களில் ஊதி சூனியம்
செய்யும் பெண்களின்
தீங்கை விட்டும்
பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க
இயலும் என்பது
உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர்.
இவர்களின் வாதப்படி நபிகள்
நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான்
சூனியம் வைத்தான்.
எனவே சூனியம்
செய்யும் பெண்களுக்கு
இங்கே எந்த
வேலையும் இல்லை.
இவர்கள் வாதப்படி இந்த
அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம்.
ஆண்கள் சூனியம்
செய்தால் அதிருந்து
எந்தப் பாதுகாப்பும்
இல்லை என்ற
கருத்து வரும்.
'முடிச்சுக்களில் ஊதும்
பெண்கள்' என்பதற்கு
சூனியக் காரிகள்
என்று அல்லாஹ்வின்
தூதர் விளக்கம்
கூறவில்லை.
ஹதீஸ்களின் துணையுடன் இதை
விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு
குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்.
மனிதன் உறங்கும் போது
ஷைத்தான் அவன்
தலை மாட்டில்
அமர்ந்து இன்னும்
இரவு இருக்கிறது.
தூங்கு எனக்
கூறி மூன்று
முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால்
ஒரு முடிச்சு
அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது
இன்னொரு முடிச்சு
அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது
முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (புகாரி 2269, 1142)
நாம் நல்லறங்கள் செய்து
விடாதவாறு ஷைத்தான்
தடைகளை ஏற்படுத்துகிறான்.
அந்தத் தடைகளைத்
தான் இங்கே
முடிச்சுக்களில் ஊதுதல் எனப்படுகிறது. அதிலிருந்து பாதுகாப்புத்
தேடுமாறு தான்
இறைவன் இவ்வசனத்தின்
மூலம் நமக்குக்
கற்றுத் தருகிறான்.
முடிச்சு என்றவுடன் நூல்
போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து
விடுகின்றனர். மூஸா நபியவர்கள் தமது நாவில்
உள்ள குறைபாட்டை
நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது முடிச்சு
என்று தான்
கூறினார்கள்.
எனது நாவில் உள்ள
முடிச்சை அவிழ்த்து
விடு! (அப்போது
தான்) எனது
சொல்லை அவர்கள்
புரிந்து கொள்வார்கள்.
(திருக்குர்ஆன் 20:26, 27) நாக்கில் முடிச்சு
போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக்
கூடாது.
மேலும் ஊதுதல் என்ற
சொல்லும் ஹதீஸ்களில்
ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.
ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்
என்று நபிகள்
நாயகம் (ஸல்)
கூறியுள்ளனர்.
அபூதாவூத் 651
தீய சக்திகளைக் குறிக்கும்
போது பெண்
பாலாகக் குறிக்கும்
வழக்கம் அரபு
மொழியில் உள்ளது.
இதன் காரணமாகவே
பெண் பாலாக
இங்கே குறிப்பிடப்படுகிறது.
எனவே இவ்விரு
அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச்
சம்மந்தமும் இல்லை.