செவ்வாய், 11 ஜூன், 2013

குண்டு வெடிப்பு

பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக NCHRO அமைப்பின் உண்மை அறியும் குழு எனது மூத்தவழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்கள் தலைமையில் நடத்திய ஆய்வரிக்கை....

பி.டி.பி நிர்வாகி அப்துல் நாசர் மதானியை பெங்களூரு பிஜேபி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிக்க வைக்க காவல் துறை சதி திட்டம் தீட்டுகிறது என்று தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவரும் வழக்கறிஞருமான பவானி பா.மோகன் குற்றம் சாட்டினார்.

அப்துல் நாசர் மதானியை கர்நாடக சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்று கூறுமாறு கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களை காவல் துறை மிகவும் கடுமையான முறையில் சித்திரவதை செய்ததுள்ளது, மேலும் மதானிக்கு எதிராகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராகவும் போலியான ஆதாரங்களை தயாரித்தும், போலியான வாக்குமூலங்களை உருவாக்கவும் காவல் துறை முயல்கிறது.

குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினேழு பேர்களில் பதினோரு பேர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஏப்ரல் மாதம் பெங்களூருவில் நடந்த ஐ.பி.எல் கிரிகெட் போட்டியின் போது குண்டுகளை வெடிக்க வைக்க திட்டம் தீட்டினார்கள் என்றும் ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் போன போது அடுத்த நாள் பிஜேபி அலுவலகத்தின் அருகே குண்டை வெடிக்க வைத்தார்கள் என்று கர்நாடக காவல் துறை கூறுகிறது.

மதுரையில் அத்வானின் ரத யாத்திரை கடந்து செல்லும் பாதையில் குழாய் வெடிகுண்டை பொருத்திய வழக்கில் தேடப்பட்டு வரும் பஹ்ருதீன்,பிலால் மாலில்,பனை இஸ்மாயில் ஆகியோர்களின் உத்திரவின் படி பெங்களூரு குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என்று கர்நாடக காவல் துறையின் தயாரித்த வழக்கு அறிக்கைகளில் காணப்படுகிறது.

வழக்கின் உண்மை நிலையை அறிய மனித உரிமைகள் சங்கம் பெங்களூருவுக்கு சென்று விசாரனை நடத்தியது. மதானி, மற்றும் தமிழ் நாட்டில் இருந்து கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி உள்பட அனைவரையும் சந்தித்தது.

வழி போக்கனான நஞ்சப்பா என்பவரின் வாக்குமூலப்படியே கர்நாடக காவல் துறை முதல் தகவல் அறிக்கையை தயாரித்து இருக்கிறது.

குற்றத்தை நேரடியாக பார்த்தவர்கள் ஒருவரும் இல்லையென்பதால் இதன் பின்னில் தேச விரோத பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெளிவாகிறது என்பது குற்றவாளிகளை முன்னரே தீர்மாணித்ததனை இவ்வாசகத்தை கொண்டு கணக்கிடமுடிகிறது.

சி.சி.டி.வியில் தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை இருசக்கர வாகணத்தில் வைக்கும் காட்சிகள் பதிவாகியும் நஞ்சப்பாவை கொண்டு ஒரு குற்றவாளிகளை அடையாளம் காணும் நிகழ்விற்கு கூட காவல் துறை முயற்சிக்கவில்லை.

கிச்சான் புகாரியிடம் கண்டெடுக்கப்பட்டதாக கூறும் பதினாறு சிம் கார்டுகளில் ஒன்று முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறும் காவல் துறை, இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரை இது வரை வழக்கு விசாரனைக்கு அழைக்கவில்லை.

சிறைவாசிகளுக்கு சட்ட உதவிகள் கிடைத்திட போராடிய கிச்சான் புகாரியின் நடவடிக்களை தடை செய்ய தமிழ நாடு காவல் துறை லட்சியம் இட்டது என்றும் கோயம்புத்தூர்,சேலம் சிறைச்சாலைகளில் இருக்கும் சில சிறைவாசிகளை பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கினோடு தொடர்பு படுத்தியது தமிழ் நாடு காவல் துறை என்றும் பவானி பா.மோகன் குற்றம் சாட்டினார்.