ஹிந்து வேதங்களில் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது ?
-------------------------------------------------------------------
பவிஷ்ய புராணா
வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.
- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.
மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.
'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21
இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.
மாறு மத அன்பு சகோதரர்களே !... சிந்தித்து பாருங்கள் ...உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு நல்ல நோக்குடன் இதனை அணுகுங்கள் ....
முகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.
'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146
கடவுளுக்கு சிலை .. உங்கள் வேதம் என்ன சொல்கிறது ?
ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)
யஜீர் வேதா அதிகாரம் 32
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'
யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)
பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.
மாற்று மத அன்பு சகோதரர்களே !... சிந்தித்து பாருங்கள் ...உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு நல்ல நோக்குடன் இதனை அணுகுங்கள் ....
இன்ஷா அல்லாஹ் தொடரும் * அடுத்த தொடர் 12