செவ்வாய், 11 ஜூன், 2013

குவைத்தில் புதிய நெருக்கடி

குவைத்தில் புதிய நெருக்கடி - மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை


வளம் கொழிக்கும் குவைத் நாட்டிற்கு வந்து தன வளத்தை பெருக்குவதற்கு மட்டுமல்லாமல் இந்த நாட்டின் வளத்தையும் பெருக்கும் வகையில் முன்னேற்றும் விதத்தில் பல நாடுகளில் இருந்தும் இங்கு பணி புரிய மக்கள் பல்வேறு பணிகளுக்கு வருகிறார்கள்

குவைத் நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் பாரம்பரிய நட்புறவு ஏற்க்கனவே இருந்து வருகிறது ,


ஆதலால் குறிப்பாக இந்தியர்கள் கணிசமான பேர் இங்கு குவைத்தில் பணி புரிந்து வருகிறார்கள். மேலும் இந்த நாட்டின் வளர்சிக்கு நம் இந்திய மக்களின் பங்கு கணிசமாக அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறது

ஆள் குறைக்கும் பணி

இப்படிப் பட்ட சூழலில் சவுதியை போன்று நெருககடினான சட்டத்தை குவைத்திலும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கொண்டு வந்து ஆள் குறைக்கும் வேலை நடந்து வருகிறது


இதனால் குவைத்தில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது .

மக்கள் அச்சம் இன்றி வெளியே செல்ல முடிய வில்லை ,வெளியே சென்றவர்கள் வீடு திரும்பும் நிச்சயம் இல்லை

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது குவைத் அரசு, இதில் அதிகம் பேர் ராஜஸ்தான் மக்கள் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் அதிக மக்கள் காதிம் விசாவில் உள்ளவர்கள் தான் அடுத்த படியாக தமிழ் மக்கள் இவர்களிடம் இந்த நாட்டில் குடியிருக்கும் சான்றிதழ் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி , வீட்டை விட்டு வெளியேறி விட்டாலே அவர்களை பிடித்து ஊருக்கு அனுப்பும் அவல நிலை தொடர்கிறது


இவர்கள் இங்கு தனியாக உள்ளார்களா ?அல்லது குடும்பத்துடன் உள்ளார்களா ?என்றெல்லாம் விசாரிக்க படுவதில்லை அவர்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களும் பிடுங்கப் பட்டு முறையின்று அனுப்பப் படுகின்றனர்

தன குடும்பம் வளமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்து வைக்கப் பட்ட பொருள் அனைத்தும், இவர்களின் உடைமைகள் அனைத்தும் விட்டு விட்டு செல்லும் பரிதாப நிலை

கடும் குளிரிலும்,பனிகளிலும் கொடுமையான வெயில்களிலும் கஸ்டப் பட்டு சேர்த்த பொருட்கள் அனாதையாக கிடக்கிறது

பணி புரியும் இடங்களில் இருந்து ஓடி வந்த மக்களை பிடித்து நாட்டிற்கு அனுப்புவதை நாம் தவறு என்று கூற வில்லை

மேலும் காதிம் விஸா குறித்து குவைத் அரசு முன் கூட்டியே அறிவிப்பு செய்து இவ்வாறு இருந்தால் பிடித்து அனுப்பப் படும் என்றும் இது போன்ற காதிம் விசாக்கள் கொடுக்கும் அரபிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறி இந்த நடவடிக்கை எடுத்திருந்தால் தற்சமயம் இந்த அசாதாரண சூழ்நிலை நிலவி இருக்காது இவர்களை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில பிடித்தால் கூட ஓரளவு தவறு உள்ளது என்று கூறலாம்


குவைத் அரசும் சொல்லலாம் பல முறை பொது மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது யாரும் வெளியேற வில்லை என்று அப்படி இருக்கும் நபர்களை பிடித்து வெளி ஏற்ற்றுவதை யாரும் தவறு என்று கூற மாட்டார்கள்

போக்குவரத்து சிக்னல் பிரச்சனை

குவைத் போலிஸ் வாகன சோதனை என்ற பெயரில் பிழைப்பு தேடி வந்த மக்களுக்கு பல சாதனைகள் தருவது மிகவும் வருந்ததக்கது.

போக்குவரத்து அதிகாரியிடம் (RTO)வாகனம் பரிசோதனை செய்து வந்து ஒரு சில நாட்கள் ஆனாலும் தேவை இல்லாத காரணத்தைக் கூறி வாகனத்தை பறிமுதல் செய்வது வாகனத்தில் வந்தவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தாலும் நடு ரோட்டில் பரிதவிக்க வைப்பது

அவரது ஓட்டுனர் உரிமத்தை பரிசோதித்து சிக்னல் பாஸ் (கிராஸ் )

செய்திருந்தால்,அல்லது ஏதேனும் விபத்து ஏற்ப்படுத்தி இருந்தால் அதனையும் ஒரு காரணமாக வைத்து ஊருக்கு அனுப்பும் கொடுமை நிகழ்கிறது காதிம் விசாவில் வாகனம் வைத்திருந்தாலும் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வது என இந்திய மக்கள் பல சொல்லொன்னா துயரங்கள் அடைத்து வருகின்றனர்

முறையின்றி வாகனம் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறல்ல ,ஆனால் இந்த தவறுக்கு உடைந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை என்ன செய்துள்ளது

மக்களின் கோபம் ;

குவைத் நாட்டின் இந்த அநியாய நடவடிக்கையை பொறுத்துக் கொள்ளாத இந்தியர்கள் குவைத்தில் உள்ள இந்திய தூதரகதையும் முற்றுகை செய்து தங்களது கண்டனத்தையும் கடுமையாக தெரிவித்து உள்ளனர் இருந்தாலும் குவைத் நாட்டின் நடவடிக்கை குறைந்த பாடில்லை

தூதரகத்தின் அலச்சியம்;

இந்திய தூதரகமும் இந்திய மக்களுக்கு உதவுவதாக தெரியவில்லை மாறாக நாங்கள் என்ன செய்ய முடியும் இந்த நாட்டின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்றவாறு தான் நாங்கள் செல்ல முடியும் என்ற தகவல் இந்திய தூதரகத்தின் பதிலாக வருகிறது

மத்திய அரசே உடனடி நடவடிக்கை எடு !

குவைத்தில் நிலவி வரும் அச்சத்தை போக்கும் வண்ணம் நம் இந்திய மக்கள் நிம்மதியாக இங்கு பணி புரிய தகுந்த முறையில் நடவடிக்கை எடு

குறைந்த பட்சம் சுமார் ஆறு மாத கால அவகாசம் கேட்டு சூன் விஸா காதிம் விஸா உள்ளவர்கள் குவைத் நாடு சொல்லும் சட்ட நடவடிக்கைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள ஏதுவாக கால அவகாசம் கேள்

தற்சமயம் பிடித்து வைக்கப் பட்டுள்ள மக்களிடம் சரியான ஆவணங்கள் குறித்து பரிசோதனை செய்த பின்பு சரியான ஆவனங்கள் இல்லாத மக்களை கால அவகாசம் கொடுத்து ஊருக்கு அனுப்ப நடவடிக்க எடுக்க சொல்லவும்


சரியான ஆவன்ங்கள் உள்ள மக்களை விடுதலை செய்து அவர்கள் மீண்டும் பணிபுரியும் விதமாக தக்க நடவடிக்கை எடு


இனிமேல் குவைத் நாட்டிற்கு காதிம் விஸாவில் செல்லாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடு

அதனை மீறும் ஏஜெண்டுகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு

மத்திய அரசே தாமதிக்காமல் உடனடியாக குவைத் வாழ் இந்திய மக்களுக்கு நிம்மதியை வர செய் ! சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக களத்தில் இறங்கி குவைத் நாட்டிற்கு நிர்பந்தம் செய் !

இந்தியர்களின் வாழ்வில் ஒளி ஏற்று !

பாதிக்கப்பட்ட குவைத்தில்பணிபுரிந்த

தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ;

குவைத்தில் பணி புரிந்து அநியாயமான முறையில் உண்மையாக குவைத் அரசால் பாதிக்கப் பட்டு இந்த அவசர சட்டத்தால் தாயகம் அனுப்பப் பட்ட சகோதர -சகோதரிகள் தத்தமது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை கூறி தங்களது ஆவணங்கள் பதிவு செயயுங்கள்

தமிழக அரசுக்கு வேண்டு கோள் ;

குவைத்தில் பாதிக்கப் பட்டு சரியான ஆவணங்கள் இருந்தும் அநியாயமாக முறையில் தாயகம் அனுப்பப் பட்ட தமிழக மக்கள் மிகவும் மன வேதனையுடன் வந்துள்ளனர் ,அவர்களுக்கு மருந்திடும் விதமாக பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு கருணை உள்ளத்துடன் தமிழக முதல்வர் அவர்கள் நிவாரண உதவி வழங்கிட தமுமுக சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்