வியாழன், 6 ஜூன், 2013

மிஃராஜ் பயணம்

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மிஃராஜ் பயணம் அவர்களின்
பிறப்பு மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய
வரலாற்றுச் சம்பவங்கள் நினைவூ கூறும் விதமாக
கொண்டாடுவது தவறல்ல என்று யூசுஃப் அல்கர்ளாவி என்பவர்
கூறியதாகச் சொல்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு யாருடைய
கூற்றையும் மார்க்க ஆதாராமாக எடுக்க்க்கூடாது. யூசுஃப்
கர்ளாவி கொடுக்கும் தீர்ப்பைக் கண்மூடிக்கொண்டு ஏற்பதற்கு அவர்
ஒன்றும் அல்லாஹ்வின் தூதரில்லை.

எல்லோரையும் போன்று அவரும் சாதாரண மனிதர். மார்க்கத்
தீர்ப்பு வழங்குவதில் மற்ற அறிஞர்களிடம் தவறு ஏற்பட்டிருப்பதைப்
போன்று இவருடைய தீர்ப்புகளிலும் நிறைய தவறு இருக்கின்றது.
வட்டி போன்ற பெரும்பாவமான காரியங்களை தற்காலத்தில்
செய்யலாம் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சமகாலத்தில் வாழும் பிரபலமானவர்களில் அறிவுத்திறனும்
ஆராய்ச்சித் திறனும் அற்ற கூறு கெட்டவராக இவர் காட்சியளிக்கிறார்.

எனவே இவர் மட்டுமல்ல மார்க்கத்திற்கு மாற்றமான கருத்தை யார்
சொன்னாலும் அந்தக் கருத்து தூக்கி எறியப்பட வேண்டியது.

இஸ்லாத்தில் கொண்டாடி மகிழ்வதற்கு இரண்டு பெருநாட்களைத்
தவிர வேறு எதுவுமில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள்.

மதீனாவாசிகள் அவர்களாக
பெருநாட்களை உருவாக்கி கொண்டாடி வந்தனர்.
இதை விட்டுவிட்டு அல்லாஹ் கற்றுக்கொடுத்த நோன்புப் பெருநாள்
ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக்
கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.


959 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﻮﺳَﻰ ﺑْﻦُ ﺇِﺳْﻤَﻌِﻴﻞَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣَﻤَّﺎﺩٌ ﻋَﻦْ ﺣُﻤَﻴْﺪٍ ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﻗَﺎﻝَ
ﻗَﺪِﻡَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﻭَﻟَﻬُﻢْ ﻳَﻮْﻣَﺎﻥِ ﻳَﻠْﻌَﺒُﻮﻥَ
ﻓِﻴﻬِﻤَﺎ ﻓَﻘَﺎﻝَ ﻣَﺎ ﻫَﺬَﺍﻥِ ﺍﻟْﻴَﻮْﻣَﺎﻥِ ﻗَﺎﻟُﻮﺍ ﻛُﻨَّﺎ ﻧَﻠْﻌَﺐُ ﻓِﻴﻬِﻤَﺎ ﻓِﻲ ﺍﻟْﺠَﺎﻫِﻠِﻴَّﺔِ
ﻓَﻘَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻗَﺪْ ﺃَﺑْﺪَﻟَﻜُﻢْ ﺑِﻬِﻤَﺎ ﺧَﻴْﺮًﺍ
ﻣِﻨْﻬُﻤَﺎ ﻳَﻮْﻡَ ﺍﻟْﺄَﺿْﺤَﻰ ﻭَﻳَﻮْﻡَ ﺍﻟْﻔِﻄْﺮِ ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.
(மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன.
அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன?
என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில்
நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள்
கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
"அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும்
பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப்
பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.


நூல் : அபூதாவுத் (959)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம்,
அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி, மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள்
இது போன்ற முக்கியமான நிகழ்வுகள் நடந்த நாட்களைக்
கொண்டாடலாம் என்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதை ஏன்
சமுதாயத்துக்குக் கற்றூக் கொடுக்கவில்லை? இவை அநாச்சாரம்
என்பதற்கு இந்த ஒரு கேள்வியே போதுமானது.


இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க சம்பவங்கள் நிறைய
இருக்கின்றன. அவற்றைப் படித்து படிப்பினை பெறுவது தான்
அறிவாளியின் செயல்.
இதைவிடுத்துகணக்கின்றிகொண்டாட்டங்களைஅடுக்கிக்கொண்டுபோதுநரகத்தில்
இழுத்துச் செல்லும் பித்அத்தாகும்.

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/pirkala_kondatangal_kooduma/