ஞாயிறு, 4 ஜனவரி, 2026

பொங்கல் தொகுப்புடன் ரூ 3000 ரொக்கம்: 2.2 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனிப்பு செய்தி அறிவித்த ஸ்டாலின்

 

CM MK Stalin announce pongal gift of Rs 1000 to all family card holders in TN Tamil News

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக 248 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, இம்முறை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இந்தப் பரிசுகளை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

111

222

முதல்வர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகம் ஆரம்பமாகும். ஒரு நாளைக்கு சுமார் 400 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரொக்கப்பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு முடிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாக ரூ.3,000 வழங்கப்படும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு உடன் ரூ. 3000 ரொக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கலுக்கான வேட்டி, சேலைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-pongal-gift-2026-cash-prize-announces-10969894