/indian-express-tamil/media/media_files/2025/11/26/sir-online-form-submission-2025-11-26-11-17-40.jpg)
Voter list special camp| Tamil Nadu voter registration| Voter list correction| SIR special camp| Voter ID change| Deleted voter name inclusion
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும் (ஜனவரி 3, 2026) நாளையும் மாநிலம் முழுவதும் நடைபெறுகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஏதுவாக, மாநிலம் முழுவதும் சுமார் 75,000 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு:
சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவர்களில் 66 லட்சம் பேர் இடம்மாறிச் சென்றவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு ஏதுவாக ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், இது இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களாகும். தற்போது வரை சுமார் 7 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த இரண்டு நாள் முகாமில் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
தகுதி உள்ள வாக்காளர்கள் கீழ்வரும் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்:
புதிய வாக்காளர் சேர்க்கை: 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள் படிவம்-6 (Form 6) பூர்த்தி செய்ய வேண்டும்.
பெயர் நீக்கம்: வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை நீக்க ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம்-7 (Form 7) பயன்படுத்த வேண்டும்.
திருத்தங்கள்: முகவரி மாற்றம், ஏற்கனவே உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய படிவம்-8 (Form 8) பூர்த்தி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் வாக்காளர் விவரங்களைச் சரிசெய்து கொள்ளலாம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/voter-list-special-camp-tamil-nadu-voter-registration-voter-list-correction-sir-special-camp-voter-id-change-deleted-voter-name-inclusion-10967538





