/indian-express-tamil/media/media_files/2026/01/05/singapore-1-2026-01-05-14-47-50.jpg)
உலக தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. 2026-ஆம் ஆண்டு வெளிநாட்டில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். கல்வி கட்டணம், ஸ்காலர்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகள் சிங்கப்பூரில் அதிகம் குவிந்து கிடைக்கிறது. இது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
கல்வி - வேலை வாய்ப்பு
பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவை. இதனால் இங்கு பயிலும் மாணவர்களுக்கு பல முன்னணி நாடுகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கி்ன்றன. பாதுகாப்பான சூழல் மற்றும் படிக்கும் போதே வேலை அனுபவம் பெறும் வாய்ப்பு இந்திய மாணவர்களை சிங்கப்பூர் நோக்கி ஈர்க்கின்றன.
உலகின் டாப் ரேங் பல்கலைக்கழகங்கள்
சிங்கப்பூரில் மொத்தம் 34 பல்கலைக்கழகங்கள் உள்ளன; அவற்றில் 6 தேசியப் பல்கலைக்கழகங்கள். குறிப்பாக, நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் (NUS) மற்றும் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU) ஆகியவை உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ளன.
மாணவர் விசா விண்ணப்பிப்பது எப்படி?
மூன்று மாதங்களுக்கும் குறைவான படிப்புகளுக்கு 'குறுகிய கால பாஸ்' (Short-Term Pass) போதுமானது. நீண்ட காலப் படிப்புகளுக்கு 'ஸ்டூடன்ட் பாஸ்' (Student Pass) அவசியம். SOLAR சிஸ்டம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் விசாவிற்கான கட்டணம் 60 சிங்கப்பூர் டாலர்கள் (S$60). எனினும், விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போதைய கட்டணத்தை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
விசா பெறத் தேவையான முக்கிய ஆவணங்கள்
நீங்கள் படிக்கப் போகும் பல்கலைக் கழகத்தின் சேர்க்கை கடிதம். தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்லுபடியாகும் பாஸ்போர், கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆங்கில புலமை தேர்வுகளான ஐ.ஈ.எல்.டி.எஸ் (IELTS) அல்லது டி.ஓ.ஈ.எஃப்.எல் (TOEFL ) மதிப்பெண் சான்றிதழ்களும் தேவைப்படும்.
படித்துக்கொண்டே வேலை பார்க்கலாமா?
சர்வதேச மாணவர்கள் வாரத்திற்கு 16 மணிநேரம் வரை பகுதிநேர வேலை (Part-time Job) பார்க்க அனுமதி உண்டு. படிப்பு முடிந்த பிறகு, சிங்கப்பூரில் வேலை தேடுவதற்காக ஓராண்டு கால 'நீண்ட கால வருகை பாஸ்' (Long-Term Visit Pass) பெற விண்ணப்பிக்கலாம்.
source https://tamil.indianexpress.com/international/study-in-singapore-guidelines-details-read-full-story-10972981





