வியாழன், 1 ஜனவரி, 2026

கோவையில் பயங்கரம்: வடமாநில தொழிலாளர்களுக்கு கத்திக்குத்து

 

fight coimbatore 2

டீ கடையில் இருந்த ஊழியர்களும் , பொதுமக்களும் வட மாநில இளைஞர்களை மீட்டனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்த வடமாநில இளைஞர்களை தாக்கி கத்தியால் குத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த கோன்ட். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த  15ம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கே.எம்.எஸ் பேக்கரியில் டீ குடிக்க சென்றனர்.  

அப்பொழுது அங்கு டீக்கடையில் இருந்த இருவர் , இவர்களிடம் தமிழில் கேள்வி கேட்கவே , வடமாநில இளைஞர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. அதனால், அருகில் இருந்த கட்டிடத்தை காட்டி அங்கு வேலை செய்வதாக சைகை மொழியில் பேசிய நிலையில்,  அந்த இருவரும் தகாத வார்த்தையில் பேசி வட மாநில தொழிலாளர்கள் இருவரையும் தாக்கியதுடன்  கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து டீ கடையில் இருந்த ஊழியர்களும் ,  பொதுமக்களும்  வட மாநில இளைஞர்களை மீட்டனர். 

வடமாநில இளைஞர்களுக்கு மிரட்டல் விடுத்து விட்டு அந்த  இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில்  வடமாநில தொழிலாளர்கள் கோவிந்த் கோல்ட் மற்றும் ராகேஷ் ஆகிய  இருவரும் அனுமதிக்கபட்டனர்.  

இந்நிலையில் இந்த தாக்குதல்  சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவம் நடந்து 3 வாரத்திற்கு மேலாகியும், சிசிடிவி காட்சிகள் போன்றவை கிடைத்தும் தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிய முடியாமல் கருமத்தம்பட்டி போலீசார் திணறி வருகின்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-karumathampatti-bakery-attack-north-indian-workers-cctv-viral-10962577