திங்கள், 5 ஜனவரி, 2026

வெனிசுலா மீது தாக்குதல்; அமெரிக்கா நடவடிக்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

venisula

வெனிசுலா நாட்டின் வளங்களை திருடும் நோக்கில் போர் வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், கைது செய்து நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், 

வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை உடனே நிறுத்த வலியுறுத்தியும், ஏற்பட்டுள்ள போர் சூழலை தனித்திட கோரியும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி மாநில குழுக்கள் சார்பில் கண்டனப் இன்று ராஜா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் சஞ்சய்சேகரன் தலைமை தாங்கினார். 

இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாநில பொருளாளர் ரஞ்சித் குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், வினோத், லீலாவதி, நிலவழகன், சத்யா, இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் வர்மா, சுரேஷ் மற்றும் தீனா ஆகியோர் கலந்து கொண்டனர். 

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/india/puducherry-indian-students-association-members-protest-against-america-10971391