போனில் வந்த 'ஏவுகணை தாக்குல்' எச்சரிக்கை - அதிர்ச்சியில் துபாய் வாசிகள்
/indian-express-tamil/media/media_files/2026/03/06/us-2-5-2026-03-06-10-19-54.jpg)
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் 7-வது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல் மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. அஜர்பைஜான் மற்றும் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு அமெரிக்கா பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், ஈரானிய மதத் தலைவர் ஒருவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்குப் பழிவாங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளையில், லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் 80 இலக்குகளை கடந்த 24 மணி நேரத்தில் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானுக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பிற முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஏவிய டொர்பிடோ தாக்குதலில் ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியது. இந்தத் தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர். கடலில் தத்தளித்த 32 பேர் மீட்கப்பட்டு இலங்கையின் தெற்குப் பகுதியான காலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், அந்தப் போர்க்கப்பல் அமைதியான மரணத்தைச் சந்தித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு சம்பவமாக, குவைத் அருகே நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், கப்பலுக்குள் நீர் புகுவதாகவும் இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குவைத்தின் முபாரக் அல் கபீர் துறைமுகத்திற்கு தென் கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சிறிய படகு அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதைக் கப்பலின் கேப்டன் கவனித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.





