புதன், 1 அக்டோபர், 2025

மாநில அந்தஸ்துக்காக எந்த அரசியல் சமரசத்தையும் செய்ய மாட்டேன்” – உமர் அப்துல்லா பேச்சு..!

 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து பிரிவான 370 நீக்கப்பட்டது. மேலும் அம்மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இரு யூனியன் பிரதேசங்களும் மாநில அந்தஸ்த்து கோரி வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பாஜகவை அரசில் சேர்க்க வேண்டும் என்றால், என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய உமர் அப்துல்லா, ”மாநில அந்தஸ்துக்காக எந்த அரசியல் சமரசத்தையும் செய்யத் தயாராக இல்லை. பாஜகவை அரசில் சேர்க்க வேண்டும் என்றால், என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள். இங்குள்ள வேறு எந்த எம்.எல்.ஏ.வையும் முதலமைச்சராக்கி, பாஜகவுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கும் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. பாஜகவை அரசாங்கத்தில் சேர்த்திருந்தால், அவர்கள் விரைவில் நமக்கு மாநில அந்தஸ்து வழங்கியிருப்பார்கள்,” என்று பேசினார்.

source https://news7tamil.live/i-will-not-accept-any-political-compromise-for-statehood-omar-abdullahs-speech.html

பிகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

 30 09 2025

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டது. இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வாக்காளர் உரிமை பேரணி நடத்தினர்.

இந்த நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு பிகாரின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம்.

அடுத்த சில நாட்களில் பீகாருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



source https://news7tamil.live/bihars-final-voter-list-released.html

கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சைப் பதிவு நிர்வாகி மீது வழக்குப்பதிவு

 

Aadhav Arjuna 3

ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல இளைஞர்களின் புரட்சி நடக்க வேண்டும் என்று கலவரத்தை தூண்டும் வகையில் திங்கள்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். Photograph: (@AadhavArjuna/x)

கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் சனிக்கிழமை (27.09.2025) உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் காவல்துறை த.வெ.க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக 23 பேர் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை சைபர் கிரைம் போலீசாரல் கைது செய்யப்பட்டார். 

இதனிடையே,  த.வெ.க-வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல இளைஞர்களின் புரட்சி நடக்க வேண்டும் என்று கலவரத்தை தூண்டும் வகையில் திங்கள்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆதவ் அர்ஜுனாவின் பதிவுக்கு அதிக அளவில் கண்டனம் எழுந்த நிலையில், அவர் அதிகாலையில் நீக்கிவிட்டார்.

இந்நிலையில், த.வெ.க-வின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா மீது 192 - கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. 196(1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை வளர்க்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள். 197 (1) (d) இந்திய இறையாண்மை, ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல். 353 (1) (b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தவறான தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது. 353 (2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவலை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “என் தாயின் இழப்புக்கு பின்னர் கரூரில் என்னுடைய குடும்பத்தில் 41 பேரின் உயிரிழப்பு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது. தற்போது எதையும் பேசக் கூடிய மனநிலையில் நான் இல்லை. இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் கரூர் சென்று பொதுமக்களை சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும். வாழ்க” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/case-registered-against-tvk-general-secretary-election-campaign-management-adhav-arjuna-for-his-controversial-x-post-10517438