இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை”
/indian-express-tamil/media/media_files/2026/01/29/cm-mk-stalin-x-2026-01-29-06-57-16.jpg)
“இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற 4,000-ஆவது குடமுழுக்கை முன்னிட்டுத் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதவாத அரசியல் செய்வோருக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்றும், 'எல்லாருக்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடல் ஆட்சி என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற 1728 நாட்களில் 4,000 திருக்கோயில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், “இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 28, 2026
ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023)
2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)
3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர்… pic.twitter.com/Zob3JytcYx
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “1,000-ஆவது குடமுழுக்கு: மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023)
2,000-ஆவது குடமுழுக்கு: மயிலாடுதுறை, கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)
3,000-ஆவது குடமுழுக்கு: நாகை, திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025)
4,000-ஆவது குடமுழுக்கு: இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயில் (2026)
இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திராவிட மாடல் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 01 2026





