செவ்வாய், 27 ஜனவரி, 2026

தமிழக அரசின் சான்றிதழுடன் கூடிய 3 நாள் சிறப்பு பயிற்சி; விண்ணப்பிப்பது எப்படி?

 

தமிழக அரசின் சான்றிதழுடன் கூடிய 3 நாள் சிறப்பு பயிற்சி; விண்ணப்பிப்பது எப்படி?

ஜி.எஸ்.டி மற்​றும் வரு​மான வரி தாக்​கல் குறித்த பயிற்சி வகுப்பு சென்னை கிண்​டி​யில் 3 நாட்​களுக்கு நடை​பெற உள்ளது. கிண்​டி​யில் இயங்கி வரும் தமிழக அரசின் தொழில் முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில், தொழில் முனை​வோர் மேம்​பாட்டு திட்​டத்​தின்​கீழ் ஜி.எஸ்.டி இ-வே பில்​லிங் மற்​றும் வரு​மான வரி அறிக்கை சமர்ப்​பித்​தல் குறித்த பயிற்சி வகுப்​பு, ஜன.28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு நடை​பெற உள்​ளது.

காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்​கப்​படு​கிறது. இதில் ஜிஎஸ்டி பதிவு செய்​யும் முறை​கள், ஜிஎஸ்டி விலை பட்​டியல் தயாரித்​தல், ரிட்​டர்ன்ஸ் தாக்​கல், உள்​ளீட்டு வரி கடன், ஜிஎஸ்டி தணிக்கை போன்​றவை குறித்து விளக்​கப்​படும். மேலும், வரு​மான வரி கட்​டமைப்​பு, ஐடிஆர் படிவங்​கள், டிடிஎஸ், வரி விலக்​கு​கள் மற்​றும் முன்​கூட்​டிய வரி செலுத்​தும் முறை​கள், அதற்​கான திட்​ட​மிடல் குறித்​தும் நிபுணர்​கள் பயிற்சி அளிக்க உள்​ளனர். இதுத​விர, அரசு வழங்​கும் மானி​யங்​கள் மற்​றும் உதவி​கள் குறித்​தும் ஆலோ​சனை​கள் வழங்​கப்​படும்.

பயிற்​சி​யில் 10-ம் வகுப்பு முடித்த, 18 வயதுக்கு மேற்​பட்ட ஆண் மற்​றும் பெண் தொழில் முனை​வோர் பங்​கேற்​கலாம். வெளியூர் பயனாளி​களுக்கு குறைந்த வாடகை​யில் தங்​கும் விடுதி வசதி உண்​டு. தமிழக அரசின் சான்​றிதழும் வழங்​கப்​படும். ஆர்​வ​முள்​ளவர்​கள் www.editn.in என்ற இணை​யதளம் வாயி​லாக முன்​ப​திவு செய்​து​கொள்​ளலாம். கூடு​தல் விவரங்​களுக்கு 8668102600, 8754495254 என்ற எண்​களை தொடர்பு கொள்​ளலாம்​ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tn-govt-certified-gst-course-join-the-hands-on-training-on-itr-filing-and-e-way-billing-at-edii-11032410