கூகுள் கண்ணாடியில் கண்சிமிட்டலில் புகைப்படம் எடுக்கும் புதிய வசதி
கூகுள் கிளாஸ் எனப்படும் அணிந்து கொள்ளும் வகையிலான கணினியில் புதிய தொழி்ல்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன்படி இதை அணிந்திருப்பவர்கள் கண்சிமிட்டலின் மூலம் புகைப்படங்களை எடுக்க முடியும்.
அது மட்டுமல்லாது எக்ஸ் ஈ 12 (XE12) என்ற குறியீட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கண்ணாடியில் வீடியோக்களை யூ டியூபில் ஏற்றி பகிர்ந்து கொள்ளும் வசதியும், ஸ்கிரீன் லாக் வசதியும் உள்ளது.
அணிந்து கொள்ளும் வகையிலான சாதனங்களின் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அத்தகைய சாதனங்களில் இது போன்ற புது வித வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
thanks @ NewGenerationMedia