வியாழன், 26 டிசம்பர், 2013

வானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை.

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

الَّذِينَ يَذْكُرُونَ اللّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

அவர்கள் நின்றும்> அமர்ந்தும்> படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனையிரிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்) திருக்குர்ஆன்.3:191


வானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை.

* * * * * * * * * *

அனைத்து நேரங்களிலும்.



உறங்கச் செல்வதற்கு முன் அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பாதுகாப்புக் கோரி பிரார்த்தித்து விட்டு அவனுடைய பெயரைக் கூறி உறங்குகிறோம்.



அதே போல் உறக்கத்திலிருந்து எழுந்ததும் (சிறு மரணத்திலிருந்து) உயிர் கொடுத்த இறைவனுக்கேப் புகழ் அனைத்தும் என்றுக் கூறி அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டேப் படுக்கையை விட்டு எழுகிறோம்.



கழிவறைக்கு செல்லும் முன் ஷைத்தானுடைய தீய சிந்தனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்டவர்களாக நுழைகிறோம்.



கழிவறையை விட்டு வெளியேறியதும் அவனுக்கு நன்றியை தெரிவித்தவர்களாக வெளியேறுகிறோம்.



அதனை அடுத்து அதிகாலை (ஃபஜ்ரு) தொழுகையை தொழுது விட்டு அல்லாஹ்வை நினைவு கூறுவதுடன், நமது தேவைகளையும் அவனிடம் கேட்டு விட்டே பள்ளியை விட்டு வெளியாகிறோம்.



உணவுக்கு முன் அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறியப் பின்னரே உண்ணத் தொடங்குகிறோம்.



உண்டு முடித்ததும் அவனைப் புகழ்ந்து நன்றிக் கூறி விட்டே உண்ணுமிடத்தை விட்டு எழுகிறோம்.



வீட்டை விட்டு வெளியேறும் போது அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டி விட்டு வெளியேறுகிறோம்.



மீண்டும் வீட்டுக்குத் திரும்பியதும் அவனின் பொருட்டால் நலமுடன் திரும்பியதை நினைத்து நன்றிக் கூறுகிறோம்.



இவ்வாறு பொழுது புலர்ந்ததிலிருந்து பொழுது அடையும் வரையில் அவர்கள் நின்றும்> அமர்ந்தும்> படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கேற்ப நாள் முழுதும் இறைநினைவுகளில் மூழ்கித் திளைக்கின்றோம்.



சிந்திக்கத்தூண்டும் வானமும், பூமியும்.



பூமியில் தான் மனிதன் வசிக்கிறான், தனது குடியிருப்பை அமைக்கிறான் அந்த குடியிருப்பின் மீதும், மனிதர்கள் மீதும் இன்னும் பிற உயிரினங்களின் மீதும் புறஊதாக் கதிர்கள், விண் கற்கள் போன்றவை விழுந்து அழிவை ஏற்படுத்தாமல் வானமே முகடாக அமைந்து பாதுகாக்கிறது.



இன்னும் வானம் மழையை பொழிவித்து , பூமி தானியங்களை விளைவித்து மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.



இது போன்ற எண்ணற்ற நன்மைகள் வானங்களும், பூமியும் படைக்கப்பட்டதில் இருப்பதை சிந்திக்கனிறோம்.



அதனால் இவைகள் கன்டிப்பாக வீணாக படைக்கப்பட வில்லை என்பதை சிந்தித்து உணருகிறோம்.,



இன்னும் வானங்களும், பூமியும் படைக்கப்பட்டது சாதாரண காரியமா ?.

இதை இறைவனல்லாது வேறு எவராலும் படைக்க முடியுமா ?.

என்றும் சிந்திக்கின்றோம்,அதனால் அவனைப் போற்றிப் புகழ்கின்றோம்.



இவ்வாறு இன்னுமுள்ள அல்லாஹ்வின் ஏனைய படைப்புகளையும் அதிகம் சிந்திப்பதன் மூலமாக இறைநம்பிக்கை மேலும், மேலும் வலுப்பெறும்.



நரகிலிருந்து பாதுகாவல்.



எந்தப் பரிந்துரையும் பயன் தர முடியாத இறுதித் தீர்ப்பு நாளில் நரகம் தீர்ப்பாக அமைந்து விட்டால் நம்மை அதிலிருந்து அங்கே காப்பது யார் ?. எது ?. யாருமில்லை, எதுவுமில்ரைல, அல்லாஹ்வைத் தவிற. !.



அதனால் உலக வாழ்க்கையில் நமது அன்றாடக் காரியங்களில் அல்லாஹ்வை நினைவு கூறுவதுடன், அவனுடைய படைப்புகளை சிந்தித்து அவனைப் போற்றிப் புகழ்வதுடன் இறைவா ! எங்களை நரக வேதனையிலிருந்து காப்பாயாக ! என்ற துஆவையும் சேர்த்துக் கூற வேண்டும். சேர்த்துக் கூறும் படியே அல்லாஹ் மேற்காணும் வசனத்தில் கட்டளையிடுகிறான்.



அல்லாஹ்வை அவனுடைய ஆற்றலுக்கேற்றவாறு புகழ்ந்து விட்டே நமது தேவைகளை கேட்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதையும் இந்த வசனம் உறுதிப் படுத்துகிறது.



எழுதியபடி நானும், வாசித்தப்படி நீங்களும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவாயாக !.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.