வியாழன், 26 டிசம்பர், 2013

நிய்யத்

நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.
உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி... என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்

Related Posts:

  • மலட்டு தன்மை என்பது நோயே அல்ல பொதுவாக கருத்தரிக்காத பெண்ணையும், ஒரு பெண்ணைக் கருத்தரிக்க வைக்க முடியாத ஆணையும் மலடு என்று குறிப்பிடுகிறார்கள். திருமணம் முடித்து ஒரு சில வருடங்… Read More
  • கோத்ரா ரயில் எரிப்பின் பின்னணியில் இந்து கோத்ரா ரயில் எரிப்பின் பின்னணியில் இந்து அடிப்படைவாதிகள்.. #முன்னாள்_நீதிபதி_கட்ஜு.. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்ச… Read More
  • தமிழக அரசுக்கு ஒரு அற்புத ஆலோசனை! காவிரி ஆறு கரூரிலிருந்து திருச்சி வரை அகன்ற காவிரி ஆறாக உள்ளது. அதனால், காவிரியின் இரு கரைகளையும் சுமார் 10லிருந்து 15அடி வரை உயர்த்தி தடுப்பணை மி… Read More
  • கறிவேப்பிலை 🍃 🍂 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.🍃 ஆனால் அந்த கறிவேப்… Read More
  • #SupportNews7 பாசிச இந்துத்துவ வெறிபிடித்தவர்களால் மிரட்டப்பட்டு கொண்டு இருக்கும் NEWS 7 தமிழ் தொலைகாட்சி .... இதை கண்டிக்கும் வண்ணமாக நாளை ஒருநாள் மட்… Read More