வெள்ளி, 13 டிசம்பர், 2013

Quran & Hadis

நபிகளாரின் குணங்கள்:

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள்
காரணமாகவே அவர்களிடம்
நளினமாக நீர்
நடந்து கொள்கிறீர்.
முரட்டுத்தனம் உடையவராகவும் கடின
உள்ளம் உடையவராகவும் நீர்
இருந்திருந்தால் அவர்கள்
உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.
அவர்களை மன்னிப்பீராக!
அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத்
தேடுவீராக! காரியங்களில்
அவர்களுடன்
ஆலோசனை செய்வீராக!
உறுதியான முடிவு செய்துவிட்டால்
அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக!
தன்னையே சார்ந்திருப்போரை ‪#‎அல்லாஹ்‬
நேசிக்கிறான்.
‪#‎அல்குர்ஆன்‬ 3:159
**********************

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தம்முடைய தோழர்களோடு பழகும்போது தாமும்
அவரைப் போன்ற மனிதர்தான் என்ற
நினைப்பில்தான்
அவர்களோடு பழகுவார்கள். தம்முடைய
தோழர்கள்
மீது அன்பு செலுத்தினார்கள்.
அவர்களை வெறுக்க மாட்டார்கள்,
விரட்ட மாட்டார்கள்.
மென்மையான
போக்கையே மேற்கொண்டார்கள்.
கடுகடுப்பானவராகவும்,
கத்தக்ககூடியவராகவும்,
அறுவறுக்கத்தக்கவராகவும்
இருக்கவில்லை. தோழர்கள்
தவறு செய்யும்
போது உடனே சுட்டிக்காட்டித்
திருத்துவார்கள். பாராட்டிற்குரிய
விஷயங்களைச் செய்யும்
உடனே பாராட்டவும்
செய்வார்கள்.