ஒரு தடவை
உளூச் செய்த
பின் அந்த
உளூ நீங்காத
வரை எத்தனை
தொழுகைகளையும் தொழலாம். ஒவ்வொரு தொழுகை நேரம்
வந்ததும் உளூச்
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை.
'#நபி (ஸல்)
அவர்கள் ஒவ்வொரு
தொழுகையின் போதும் உளூச் செய்வது வழக்கம்'
என்று அனஸ்
(ரலி) கூறினார்கள்.'அப்படியானால் நீங்கள்
எப்படி நடந்து
கொள்வீர்கள்?' என்று அனஸ் (ரலி)யிடம்
கேட்டேன். அதற்கவர்கள்,
'உளூ நீங்காத
வரை ஒரு
உளூவே எங்களுக்குப்
போதுமானதாகும்' என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர்
பின் ஆமிர்
(ரலி)
நூல்: புகாரீ
214
நபி (ஸல்)
அவர்கள் மக்கா
வெற்றியின் போது ஒரு உளூவின் மூலம்
பல தொழுகைகளைத்
தொழுதார்கள். அப்போது தமது காலுறைகள் மீது
மஸஹ் செய்தார்கள்.
'ஒரு நாளும்
செய்யாத ஒன்றை
இன்றைய தினம்
செய்தீர்களே!' என்று உமர் (ரலி) கேட்டார்கள்.
அதற்கு நபி
(ஸல்) அவர்கள்,
'உமரே! வேண்டுமென்று
தான் அவ்வாறு
செய்தேன்' என்று
விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: புரைதா
(ரலி)
நூல்: #முஸ்லிம்
415