நல்லடியார்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள
தர்ஹாக்களில் பேய் பிடித்த எத்தனையோ நபர்கள்
தங்க வைக்கப்படுகின்றனர்.
சங்கிலியால் பூட்டப்படுகின்றனர். இவ்வாறு
தர்ஹாக்களைத் தஞ்சமடைந்தவர்களிடம் உள்ள பேய்களை அந்த
மகான்கள் வியக்கத்தக்க
விதத்தில் விரட்டியடிக்கின்றனர்.
ஏர்வாடி, நாகூர்
போன்ற ஊர்களில்
இதை நாம்
காண முடிகின்றதே
என்பது சிலரது
ஐயம். இதுவும்
ஒரு நாடகம்
தான். ஏனைய
ஐயங்களைப் போலவே
இதுவும் அடிப்படையில்லாததாகும்.
இது பற்றி
நாம் விரிவாகவே
அலசுவோம்.
தர்ஹாக்களில் நிரப்பப்படும் பேய்
பிடித்தவர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம்.
ஒரு சாரார் உண்மையாகவே
பைத்தியம் பிடித்தவர்கள்.
மருத்துவ சிகிச்சை
அளிக்கப்பட வேண்டிய இவர்கள் இவர்களது உறவினர்களின்
அறியாமையினால் பேய்கள் என்று நம்ப வைக்கப்பட்டு
தர்ஹாக்களுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்.
உண்மையாகவே இவர்களுக்குப் பைத்தியம்
பிடித்துள்ளதால் தர்ஹாக்களில் இவர்கள் நிவாரணம் பெற
முடிவதில்லை. ஒரு தர்ஹாவிலிருந்து மறு தர்ஹா
என்று டிரான்ஸ்ஃபர்
வாங்கிக் கொண்டு
தமிழகத்தின் அனைத்து தர்ஹாக்களுக்கும் விசிட் செய்வார்கள்.
முடிவில் நம்பிக்கையிழந்து
விதியை நொந்து
கொண்டு பைத்தியங்களாகவே
விடப்படுவர். பாவம் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்!
ஆரம்பத்திலேயே முறையாக மருத்துவ
சிகிச்சை அளிக்கப்பட்டு
இருந்தால் இவர்கள்
முழு அளவில்
ஆரோக்கியம் பெறும் அளவுக்கு மருத்துவத் துறையில்
இன்று முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது. மூடநம்பிக்கை இவர்களது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி
விட்டது.
ஏர்வாடி தர்ஹாவைச் சுற்றியுள்ள
காப்பகங்களில் தங்க வைக்கப்பட்ட பல மனநோயாளிகள்
தமிழக அரசால்
மீட்கப்பட்டு உரிய சிகிச்சையின் மூலம் குணமடைந்ததை
சமீபத்தில் நாம் கண்டோம்.
இரண்டாம் சாரார் நாம்
முன்னரே விளக்கிய
பிரகாரம் எதேனும்
ஒரு காரியத்தைச்
சாதித்துக் கொள்வதற்காக பேய்களாக நடிப்பவர்கள். இவர்கள்
தங்களின் காரியத்தைச்
சாதித்துக் கொள்ளும் காலம் வரை நடித்து
விட்டு காரியம்
கை கூடிய
பிறகு பேய்
வேஷத்தைக் களைப்பவர்கள்.
இவ்வாறு இவர்கள்
தங்களுக்கு வசதியான ஒரு காலகட்டத்தில் வேஷத்தைக்
களையும் போது
அதன் பெருமை
தர்ஹாவுக்குச் சேர்ந்து விடுகின்றது.
உண்மையில் பைத்தியம் பிடித்தவர்களும்
பேய் பிடித்ததாக
நடிப்பவர்களும் ஆகிய இந்த இரு சாராரும்
பாதிக்கும் குறைவானவர்களே. மக்களை தர்ஹாவின் பால்
ஈர்ப்பதற்காக செட்டப் செய்யப்பட்டவர்கள் மறுபாதியினர்.
ஏறத்தாழ கூலிக்கு மாறடிக்கும்
கூட்டம் போன்றவர்கள்
இவர்கள். இப்படி
வெள்ளி, திங்கள்
இரவுகளில் பேய்கள்
பிடித்ததாக நடிப்பதற்கும் தலையை விரித்துப் போட்டு
ஆடுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் உண்டு. சுவையான
உணவும் உண்டு.
“பேய் பிடித்தவர்கள்
எல்லாம் இங்கே
தான் வந்து
குழுமுகின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஏனையோரை
வரவழைக்கவும் உண்டியலை நிரப்பிக் கொள்ளவும் தர்ஹா
பூசாரிகள் நடத்தும்
நாடகம் இது.
இது வெறும்
அனுமானம் இல்லை,
நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
ஒவ்வொரு வெள்ளி இரவிலும்
ஏனைய நாட்களை
விட பேயாட்டம்
போடுவோர் அதிக
அளவில் காணப்படுவர்.
வெள்ளிக்கிழமை அவர்களில் பெரும் பகுதியினர் காணாமல்
போய் விடுவர்.
சொல்லி வைத்தாற்
போல் வெள்ளி
இரவுகளில் மட்டும்
இப்படி பேயாடிகள்
பெருகி ஏனைய
நாட்களில் குறைவதிலிருந்து
இது திட்டமிட்ட
ஏற்பாடு என்பதை
உணரலாம். தொடர்ந்து
சில நாட்கள்
தர்ஹாக்களை நோட்டமிட்டால் இதை எவரும் அறியலாம்.
வெள்ளி இரவுகளில் தான்
மக்கள் அதிக
அளவில் வருவார்கள்.
அவர்களின் கவனத்தை
ஈர்ப்பதற்காக வெள்ளியன்று மட்டும் இந்த விசேஷ
ஏற்பாடு செய்யப்படுகின்றது.
வெள்ளிக்கிழமையில் கூட எல்லா
நேரங்களிலும் பேய்களின் ஆட்டங்கள் இருப்பதில்லை. எந்த
நேரத்தில் மக்கள்
திரளாகக் குழுமுகின்றார்களோ
அந்த மாலை
நேரங்களில் மட்டுமே இந்த ஆட்டம் உச்சக்
கட்டத்தில் உள்ளது. மக்கள் கூட்டம் குறைய
ஆரம்பித்ததும் பேயாட்டம் போடுவோரும் குறைய ஆரம்பித்து
விடுகின்றனர். உண்மையிலேயே பேய் பிடித்து இயல்பாகவே
அவர்கள் ஆட்டம்
போடுகிறார்கள் என்றால் எல்லா நாட்களிலும் எல்லா
நேரங்களிலும் தர்ஹாக்கள் பேயாட்டம் போடுவோரால் நிரம்பி
வழிய வேண்டும்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட
நேரத்தில் மட்டும்
கணிசமாக பேயாடிகள்
அதிகரிப்பது செட்டப் என்பதை நிரூபிக்கப் போதுமாகும்.
மேலும் தொடர்ந்து சில
வாரங்கள் இவர்களை
நாம் கண்காணித்து
வந்தால் குறிப்பிட்ட
அதே முகங்கள்
அதே கோலத்தில்
தென்படுவார்கள். இதுவும் செட்டப் என்பதற்கு சான்றாக
உள்ளது. எவ்வாறெனில்
வெள்ளி இரவு
பேயாடி விட்டு
அன்று காலையிலேயே
குணம் பெற்று
(?) வீடு திரும்பியவர்கள்
ஒவ்வொரு வெள்ளி
இரவும் (வெள்ளி
இரவு மட்டும்)
பேய் பிடித்தவர்களாகக்
காட்சி தருகின்றார்கள்.
ஏனைய நாட்களில்
அவர்கள் காணப்படுவது
கிடையாது. இது
தர்ஹா பூசாரிகளின்
திட்டமிட்ட ஏற்பாடே என்பது ஐயமில்லை.
இது போன்ற ஏற்பாடுகளின்
அடிப்படையிலேயே தர்ஹாக்களில் பேய்கள் நடமாடுகின்றன, விலகி
ஓடுகின்றன.
ஏற்கனவே நாம் எடுத்துக்காட்டியுள்ள
குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து
இறந்தவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைக்
கண்டோம். மனிதன்
இறந்து விட்டால்
இவ்வுலகத்துடன் அவனுக்கு இருந்த எல்லா உறவுகளும்
முடிவுக்கு விடுகின்றன என்பதையும் கண்டோம். தர்ஹாக்களில்
அடக்கம் செய்யப்பட்டவர்கள்
பேய்களை விரட்டுவார்கள்
என்ற நம்பிக்கை
இந்தச் சான்றுகளுக்கு
முரணானவை என்பதையும்
நாம் கவனிக்கும்
போது தர்ஹாக்களில்
பேய் பிடித்தவர்கள்
குழுமுகிறார்கள் என்பதும் அதை அங்கே அடக்கம்
செய்யப்பட்டவர்கள் விரட்டுகிறார்கள் என்பதும் ஆதாரம் அற்றவை என்பது
மேலும் உறுதியாகின்றது.
பைத்தியமாகி விட்டவர்கள் பைத்தியமாக நடிப்பவர்கள் தவிர
மற்றொரு வகையினரையும்
மக்கள் பேய்
பிடித்தவர்கள் என எண்ணுகின்றனர்.
குடும்பத்தில் – சமுதாயத்தில் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்பட்டவர்கள் அதை எண்ணியே
ஹிஸ்டீரியா எனும் மனநோய்க்கு ஆளாகி விடுவர்.
இதன் மூலம்
பிறரைத் தங்கள்
பால் ஈர்க்க
முயல்வர். தன்னை
இன்னொருவராகப் பாவனை செய்ய முற்படுவர்.
அளவுக்கதிகமான கற்பனைகளில் பலவாறான
விளைவுகளுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் இன்னொருவராக
தன்னைப் பார்க்கத்
தொடங்குவர்.
தன்னை யாரும் கவனிப்பதில்லையே
என்ற விரக்தியில்
எதை எதையோ
செய்ய ஆரம்பிப்பார்கள்.
தனக்கு சாமி வந்து
விட்டது, அவ்லியா
இறங்கி விட்டார்,
பேய் பிடித்து
விட்டது என்றெல்லாம்
இவர்கள் கருதத்
துவங்கும் போது
பிறரால் இவர்கள்
கவனிக்கப்படுகிறார்கள். அக்கறை செலுத்தப்படுகிறார்கள்.
இவர்கள் வேண்டும் என
இப்படிச் செய்யாவிட்டாலும்
அவர்களையுமறியாமல் இப்படியெல்லாம் நடக்கத்
துவங்கி விடுகின்றனர்.
இவர்களுக்கு ஹிஸ்டீரியா எனும் மனநோய் தான்
ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தால் இவர்களை
எளிதில் குணப்படுத்தி
விடலாம்.
இவர்கள் பேயாட்டம் போடும்
போதும் சாமி
வந்துவிட்டதாக கூறும் போதும் அவ்லியா மேலாடுவதாக்க்
கூறும் போதும்
எவருமே அதைக்
கண்டு கொள்ளக்
கூடாது. அந்தச்
சமயத்தில் அதிகமாக
அவர்களைக் கவனிக்கக்
கூடாது. இப்படி
நடந்து கொண்டால்
இரண்டொரு நாளில்
இந்த நோய்
குணமாகி விடும்.
பிறரது கவனத்தையும் கவனிப்பையும்
பெறுவதற்காக ஏற்பட்ட மனநோய் தானா? என்பதை
முதலில் மனநோய்
மருத்துவரிடம் காட்டி உறுதி செய்து கொண்ட
பின், மேற்கூறிய
முறையில் அவர்களிடம்
நாம் நடந்து
கொள்ள வேண்டும்.
முற்றிப் போன பைத்தியம்
என்றால் அதற்கான
முகாம்களில் வைத்து சிறப்பு வைத்தியம் செய்ய
வேண்டும்.
நடிக்கிறார்கள் என்றால் அதற்கான
காரணத்தைக் களைய முயல்வதுடன் உரிய பரிகாரமும்
செய்ய வேண்டும்.
இப்படிச் செய்துவிட்டால்
பேய்களுக்கு அறவே இடம் இராது.
ஒருவனுக்கு வந்துள்ள பேய்
எந்த வகையானது
(?) என்பதை தக்கவர்களிடம் சென்று உறுதி செய்வது
மிகவும் அவசியம்.
அதன் பின்னர்
சிகிச்சையில் இறங்க வேண்டும்.
பேய் – பிசாசுகள் என்று
நம்பி ஈமானையும்
நிம்மதியையும் பகுத்தறிவையும் பழி கொடுப்பதிலிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும்
காப்பாற்றுவானாக.
இந்நூல் இத்துடன் நிறைவு
பெறுகிறது.
http://www.onlinepj.com/books/pey_pisasu_unda/