வியாழன், 7 மே, 2015

மக்களுக்கு வெறியேற்றலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர்

 நபி கப்ரின் மீதுள்ள குவிமாடம் ◄
ஆக்கம் .. அப்துல் காலிக் எம்.ஏ./
அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி.
இறைவனின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்வதில் யாருக்கும் அஞ்சுவதில்லை.
படைத்தவனை மட்டும் அஞ்சி சொல்லப்படும் பல கருத்துக்கள் அறியாத மக்களால் எதிர்க்கப்படுகிறது. பின்னர் அவர்கள் புரிந்து அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இது போன்றுதான் மதீனாவில் உள்ள நபிகளாரின் பள்ளி (மஸ்ஜிதுந் நபவி)யில் நபிகளார் அடக்கத்தலத்தின் மேல் ஓர் குவிமாடம் (குப்பா) கட்டப்பட்டுள்ளது.
இது நபிகளாரின் கட்டளைக்கு நேர்எதிரானது என்பதையும் அது அகற்றப்பட வேண்டியது என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத் கூறியதை் தொடர்ந்து பரேலவி கூட்டத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மஸ்ஜிதுந் நபவியை இடிக்கச் சொல்லி விட்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
கொள்கை அளவில் எந்த ஆதாரமும் இல்லாமல் உளறிக் கொண்டு இருந்த பரேலவிக் கூட்டம் நபிகள் நாயகத்தின் அடக்கத்தலத்தில் கைவைத்து விட்டார்கள் என்று கூறி மக்களுக்கு வெறியேற்றலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர்.
☛மவ்லித் என்ற நச்சுக் கவிதையை குர்ஆனுக்கு மேலாக மதித்து இவர்கள் கூலிக்கு ஓதி வந்த போது நாம் மவ்லிதை எதிர்த்தோம். அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்தோம். அப்போதும் இது போல் தான் மக்களை உசுப்பேற்றினார்கள். நபிகள் நாயகத்தைப் புகழக்கூடாது என்று நாம் சொல்வதாகப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அதில் தோல்வி கண்டார்கள். மவ்லிது இருந்த இடம் தெரியாமல் போனது. தவ்ஹீது ஜமாஅத் நபியவர்களைப் புகழக் கூடாது என்று சொல்லவில்லை என்பதையும், பிற்காலத்தில் இதை வைத்து வயிறு வளர்க்க உருவாக்கப்பட்ட தப்பான கருத்துக்கள் அடங்கிய பாடல் என்பதையும் மக்கள் விளங்கிக் கொண்டார்கள்.
குப்பா விஷயத்திலும் இதே தோல்வியை அல்லாஹ் வழங்குவான். தகுந்த ஆதாரங்களை எடுத்து வைத்து இவர்களின் வெறித்தனத்தை தவ்ஹீத் ஜமாஅத் அடக்கிக் காட்டும். இன்ஷா அல்லாஹ்.
�இந்தக் குவிமாடம் தொடர்பான உண்மை நிலை என்ன? இது நபிவழியா? என்பதைக் காண்போம்.
✔கப்ரை வண்ணக்கத்தலமாக மாற்றுதல்
நல்ல மனிதர்கள் இறந்துவிட்டால் அவர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிய நபர்களை அல்லாஹ்வின் தூதர் சபித்துள்ளார்கள். கப்ருகள் வணங்குமிடமாக ஆக்கக்கூடாது என்பதில் நபிகளார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
عَنْ عَائِشَةَ أَنَّ أُمَّ حَبِيبَةَ ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ أُولَئِكِ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا ، وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ " . أخرجهُ البخاري (427) ، ومسلم (528 (
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா அவர்களும், உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் இறந்துவிடும்போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள்.
இவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள்.
-(நூல்கள் : புகாரி :427, முஸ்லிம்:528)
இறைத்தூதர்களின் அடக்கத்தலத்திலும் சிலர் வணங்குமிடத்தைக் கட்டினார்கள். அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் கண்டித்தார்கள். எந்த வகையிலும் மனிதர்களைக் கடவுளாக்க முற்சிக்கக் கூடாது என்பதை நபிகளார் ஆணித்தரமாக சொல்லிச் சென்றுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, "யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
-நூல் புகாரி (1330)
அவர்களின் கப்ரிலும் கட்டடம் கட்டி வணங்குமிடமாக ஆக்கக்கூடாது என்பதையும் ஆயிஷா (ரலி) அவர்கள் பயந்திருந்தார்கள் என்று இதிலிருந்து அறியலாம்.
கப்ரின் மீது கட்டடம், குப்பா (குவிமாடம்) கட்டுதல்
கப்ரின் மீது கட்டடம் கட்டுதல், குவிமாடம் கட்டுதல், பூசுதல் போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும்.
நபிகளார் காலத்தில் கப்ரின் மீது கட்டப்பட்ட அனைத்து கட்டடங்களையும் உடைத்தெறிந்தார்கள். அந்தப் பணியை அலீ (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள். அலீ (ரலி) அவர்களும் தம் ஆட்சிக் காலத்தில் இதே பணிச் செய்தார்கள்.
அபுல்ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.
நூல் முஸ்லிம் (1764)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப் பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
-நூல் முஸ்லிம் (1765)
ஸுமாமா பின் ஷுஃபை அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள "ரோடிஸ்' தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள்.
-நூல் முஸ்லிம் (1763)
நபியின் தெளிவான கட்டளை கப்ரின் மீது எவ்வித கட்டடமும் கட்டக்கூடாது என்பதுதான்.
✔நபி பள்ளியின் குப்பா (குவிமாடம்) எப்போது கட்டப்பட்டது?
நபி (ஸல்) அவர்களின் கப்ரில் ஹிஜ்ரி 677 வரை குப்பா இருந்ததில்லை. ஹிஜ்ரி 677 ல்தான் இந்தக் குவிமாடம் கட்டடப்பட்டது.
இது தொடர்பாக 100 கோடி பார்வையாளர்களைத் தாண்டிச் சென்றுள்ள அரபி நாட்டின் இணையதளமான செய்துல் பவாயிதில் இடம்பெறும் செய்தியைத் தருகிறோம்.
(http://www.saaid.net/Doat/Zugail/358.htm)
فإن قبةَ مسجدِ النبي صلى اللهُ عليه وسلم لها مكانةٌ عند الصوفيةِ أربابَ القبابِ والقبورِ ، ويصورنها على أنها مرتبطةٌ ارتباطاً وثيقاً بقبرِ النبي صلى اللهُ عليه وسلم ، وكيف يكونُ ذلك - يا أمةَ محمدٍ - وهو صلى اللهُ عليه وسلم ارسل بالتوحيدِ ، وإزالةِ الشركِ ، وهدمِ القبابِ على القبورِ ، وحذر الأمةَ من سلوكِ سَننِ اليهودِ والنصارى في اتخاذِ القبورِ مساجد ؟! لم تكن القبة التي على قبر النبي صلى الله عليه وسلم موجودة إلى القرن السابع ، وقد أُحدث بناؤها في عهد السلطان قلاوون ، وكان لونها أولاً بلون الخشب ، ثم صارت باللون الأبيض ، ثم اللون الأزرق ، ثم اللون الأخضر ، واستمرت عليه إلى الآن
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குவிமாடத்திற்கு, கப்ருகளையும் குவிமாடங்களையும் வணங்குகின்ற சூபியாக்களிடம் ஒரு தனி மரியாதையுள்ளது. அவர்கள் மற்ற கப்ருகளுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ருடன் ஒரு பலமான தொடர்பு இருப்பதாக உருவகப்படுத்துகிறார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயமே நபியவர்கள் ஏகத்துவத்தைப் போதிக்கவும் இணைவைத்தலை நீக்கவும் மண்ணறைகள் மீதுள்ள குவிமாடங்களை உடைக்கவும் மண்ணறைகள் மீது குவிமாடங்களை அமைக்கின்ற விசயத்தில் யூத கிருஸ்த்துவ நடைமுறை பழக்கவழக்கங்களை விட்டு இந்தச்சமுதாயம் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கவும் அனுப்பபட்டிருக்கும் போது அது எப்படி சாத்தியமாகும் ?
ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறையின் மீது குவிமாடம் இருக்கவில்லை. சுல்தான் கலாவூன் என்பவரது ஆட்சிக் காலத்தில்தான் அக்கட்டடம் எழுப்பபட்டது. அது ஆரம்பத்தில் மரக்கலரில் இருந்தது. பின்பு வெள்ளை நிறத்திலும் பின்பு நீல நிறத்திலும் பின்பு பச்சை நிறத்திலும் மாற்றம் கண்டது. இன்று வரை அப்பச்சை நிறத்திலேயே நிலைபெற்றது.
والقبةُ التي في مسجدِ النبي صلى اللهُ عليه وسلم لم تكن موجودةً في الثلاثةِ القرونِ المفضلةِ ، وإنما أُحدثت بعد ذلك ، وقد حقق الشيخُ مقبلٌ الوادعي - رحمهُ اللهُ - في بحثٍ له ضمن كتابِ " رياضِ الجنةِ " ( ص 225 - 255 ) هذه المسألةَ تحقيقاً لا مزيد عليه ، سأنقلُ منه كلامَ الذين أرخوا لبناءِ القبةِ ، وإنكارَ أهلِ العلمِ لهذه القبةِ المحدثةِ ، لكي يكونَ المؤمنُ الموحدُ على بينةٍ من أمرهِ ، وأن لا يغتر بما يتناقلهُ الصوفيةُ وغيرهم من تعظيمٍ لها .
தற்போது நபிகள் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு மேலுள்ள குவிமாடம் சிறப்புமிக்க மூன்று நூற்றாண்டு காலங்களில் இருக்கவில்லை. இது அக்காலகட்டதிற்கு பின்புதான் உருவாக்கப்பட்டது.
ஷேக் முக்பில் வாதியி அவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து சரியான முறையில் மிகத் தெளிவாக ரியாலுல் ஜன்னா என்ற தன் ஆய்வு நூலில் (பக்கம் 225 , 255) ல் குறிப்பிடுகின்றார்.
“இந்தக் குவிமாடத்தை கட்ட வலியுருத்தியவர்களின் கருத்துக்களையும் மார்க்கத்தில் நுழைந்து விட்ட பித்அத்தான குவிமாடத்திற்கு ஏற்பட்ட அறிஞர்களின் மறுப்புக்களையும் ஏகத்துவக் கொள்கையைக் கொண்ட நம்பிக்கையாளன் இப்பிரச்சனையைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சூஃபியாக்களும் குவிமாடத்திற்கு கண்ணியமளிக்கும் மற்றவர்களும் வாதிக்ககூடிய முரண்பாடுகளைக் கொண்டு (ஏகத்துவ கொள்கையை கொண்ட நம்பிக்கையாளன்) மாறாமலிருப்பதற்காகவும் இதை நான் எடுத்தெழுதுகின்றேன்.
قال الشيخُ مقبلٌ الوادعي ( ص 240 ) : " قال الشيخُ أحمدُ بنُ عبدِ الحميدِ العباسي - رحمهُ اللهُ - المتوفى في القرنِ العاشرِ الهجري في كتابهِ " عمدة الأخبارِ في مدينةِ المختارِ " ( ص 124 ) : " ومن ذلك أنهُ لما كان عام ثمانٍ وسبعين وست مئة هجرية أمر السلطانُ الملكُ المنصورُ قلاوون الصالحي والد السلطانِ الملك الناصر محمد بن قلاوون ببناءِ قبةٍ على الحجرةِ الشريفةِ ، ولم يكن قبل هذا التاريخِ عليها قبةٌ ، ولها بناءٌ مرتفعٌ ، وإنما كان حظيرٌ حول الحجرةِ الشريفةِ فوق سطحِ المسجدِ ، وكان مبنياً بالآجرِ مقدارنصفِ قامةٍ بحيث يميزُ سطحُ المسجدِ ، وكان مبنياً بالآجرِ فعملت هذه القبةُ الموجودةُ اليوم ... " .ا.هـ.
சேக் முக்பில் வாதியீ கூறுகின்றார். :
"ஹிஜ்ரி 678ல் மன்னர் நாஸிர் முஹம்மது கலாவூன் என்பவரது தந்தை, மன்னர் மன்சூர் கலாவூன் அஸ்ஸாலிஹீ சிறப்புமிக்க (நபியவர்களின) அறையின் மீது குவிமாடம் கட்டும்படி கட்டளையிட்டார். இந்தத் தேதிக்கு முன் அதன் மீது எந்தக் குவிமாடமோ, உயர்ந்த கட்டடமோ இருந்ததில்லை. பள்ளியின் முகட்டுக்கு மேல் சிறப்புமிக்க (நபியவர்களின்) அறையை சுற்றி ஒரு தடுப்புதான் இருந்தது. (நபியவர்களின் அறை) பள்ளிவாசலின் முகடு தெளிவாக தெரிகின்ற விதத்தில் பாதி உயரத்தின் அளவிற்கு செங்கற்களை கொண்ட கட்டடமாக இருந்தது. தற்பொழுதுள்ள குவிமாடம் இன்றை தினத்தில் செய்யப்பட்டுள்ளது.' என்று ஹிஜ்ரி பத்தாம் நூற்றான்டில் மரணமடைந்த ஷேக் அஹ்மது பின் அப்துல் ஹமீத் அப்பாஸி அவர்கள் தனது உம்ததுல் அஹ்பார் ஃபீ மதீனத்தில் முக்தார் என்ற நூலில் (பக்கம் 124) கூறுகின்றார்.
وقال زينُ الدينِ المراغي المتوفى سنة عشرة وثمان مئة في كتابهِ " تحقيق النصرةِ بتلخيصِ معالمِ دارِ الهجرةِ " ( ص81 ) : " اعلم أنهُ لم يكن قبل حريقِ المسجد ولا بعدهُ على الحجرةِ الشريفةِ قبةٌ ، بل كان ما حول حجرةِ النبي صلى الله عليه وسلم في السطحِ مقدار نصفِ قامةٍ مبني بالآجرِ تميز الحجرةَ الشريفةَ على بقيةِ السطحِ إلى سنةِ ثمانٍ وسبعين وست مئة في أيامِ الملكِ المنصورِ قلاوون الصالحي ... " .ا.هـ.
நபியவர்களின் பள்ளிவாசல் எரிக்கப்படுவதற்கு (ஹிஜ்ரி 650) முன்போ பின்போ சிறப்புமிக்க (நபியவர்களின்) அறையின் மீது குவிமாடம் இருக்கவில்லை. ஹிஜ்ரி 678 ஆம் ஆண்டு மன்னர் அல்மன்சூர் கலாவூன் அஸ்ஸாலிஹீயின் ஆட்சிக்காலம் வரை நபி (ஸல்) அவர்களின் அறையைச் சுற்றி பாதியளவிற்கு மீதமுள்ள மேல் பகுதியிலிருந்து சிறப்புமிக்க அறையைப் பிரிக்கின்ற செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம்தான் இருந்தது. என்று ஹிஜ்ரி 810 ஆம் ஆண்டு மரணித்த ஜய்னுத்தீன் அல்மராஹீ என்பவர் தனது "தஹ்கீகின் னுஸ்ரத்தி பி தல்கீஸி மஆலிமி தாரில் ஹிஜ்ரத்தி" என்ற நூலில் (பக்கம் 81) கூறுகின்றார்.
إنكارُ أهلِ العلمِ لهذهِ القبةِ :
أنكر العلماءُ بناء القبةِ على قبرِ النبي صلى اللهُ عليه وسلم لأنهُ أمرٌ حرمهُ النبي صلى اللهُ عليه وسلم ، وحذر الأمةَ منه .
وقال الصنعاني - رحمهُ اللهُ - في " تطهير الاعتقادِ " : " فإن قلت : " هذا قبرُ الرسولِ صلى اللهُ عليه وسلم قد عُمرت عليه قبةٌ عظيمةٌ انفقت فيها الأموالُ " .
قلتُ : " هذا جهلٌ عظيمٌ بحقيقةِ الحالِ فإن هذه القبةَ ليس بناؤها منهُ صلى اللهُ عليه وسلم ، ولا من أصحابهِ ، ولا من تابعيهم ، ولا من تابعِ التابعين ، ولا علماء الأمةِ وأئمة ملتهِ ، بل هذه القبةُ المعمولةُ على قبرهِ صلى اللهُ عليه وسلم من أبنيةِ بعضِ ملوكِ مصر المتأخرين ، وهو قلاوون الصالحي المعروف بالملكِ المنصورِ في سنةِ ثمانٍ وسبعين وست مئة ، ذكرهُ في تحقيقِ النصرةِ بتلخيصِ معالمِ دارِ الهجرةِ ؛ فهذه أمورٌ دولية لا دليليةٌ " .ا.هـ.
இமாம் சன்ஆனீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்களின் மண்ணறை மீது அதிகமான பொருளாதாரத்தைச் செலவிட்டு மிகப் பெரிய குவிமாடம் கட்டலாமா? என்று நீ வினவினால் நான் சொல்வேன் : உண்மையில் இது மிகப் பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் இது நபியவர்களின் கட்டளை காரணமாகவோ, அவர்களின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) மூலமாகவோ அவர்களுக்கு அடுத்த காலத்தைச் சார்ந்தவர்கள் (தாபியீன்கள்) மூலமாகவோ அவர்களின் காலத்தை அடுத்துள்ள காலத்தைச் சார்ந்தவர்கள் (தப்வுத் தாபியீன்கள்) மூலமாகவோ சமூக உலமாக்கள் அல்லது சமுதாய இமாம்கள் மூலமாகவோ கட்டப்பட்ட கட்டடம் அல்ல. பிற்காலத்தில் வந்த எகிப்து மன்னர்களில் ஒருவர் கட்டியதாகும். இக்கட்டடம் ஹிஜ்ரி 678 ஆண்டு மன்னர் அல்மன்சூர் என்று பிரபலியமான கலாவுன் அஸ்ஸாலிஹீ என்பவரால் கட்டப்பட்டது என்று தஹ்கீக் அன்னுஸ்ரா பி தல்ஹீஸ் மஆலிமி தாரில் ஹிஜ்ரா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் விவகாரம்தான் மார்க்க ஆதாரம் இல்லை.
இது தொடர்பாக பின்பாஸ் உட்பட பல அறிஞர்கள் பத்வா வழங்கியுள்ளார். அவற்றைக் காண்போம்.
وسئل علماء اللجنة الدائمة للإفتاء :
هناك من يحتجون ببناء القبة الخضراء على القبر الشريف بالحرم النبوي على جواز بناء القباب على باقي القبور ، كالصالحين ، وغيرهم ، فهل يصح هذا الاحتجاج أم ماذا يكون الرد عليهم ؟
மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அல்லஜ்னத்துத் தாயிமாவின் உலமாக்களிடம் கேட்கப்பட்டது:
நபியவர்களின் புனிதமிக்க பள்ளிவாசலிலுள்ள பச்சைக் குவிமாடத்தை நல்லடியார்கள் இன்ன பிற நபர் போன்றோர்களின் மண்ணறைகள் மீது குவிமாடம் கட்டுவதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்பவர்கள் யார்? இவ்வாறு ஆதாரம் எடுப்பது சரியா ? அல்லது அவர்களுக்கு எவ்வாறு மறுப்பளிப்பது ?
அவர்கள் பதில் :
: فأجابوا
لا يصح الاحتجاج ببناء الناس قبة على قبر النبي صلى الله عليه وسلم على جواز بناء قباب على قبور الأموات ، صالحين ، أو غيرهم ؛ لأن بناء أولئك الناس القبة على قبره صلى الله عليه وسلم حرام يأثم فاعله ؛ لمخالفته ما ثبت عن أبي الهياج الأسدي قال : قال لي علي بن أبي طالب رضي الله عنه : ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ؟ ألا تدع تمثالاً إلا طمستَه ، ولا قبراً مشرفاً إلا سويته وعن جابر رضي الله عنه قال : ( نهى النبي صلى الله عليه وسلم أن يجصَّص القبر ، وأن يقعد عليه ، وأن يبنى عليه ) رواهما مسلم في صحيحه ، فلا يصح أن يحتج أحد بفعل بعض الناس المحرم على جواز مثله من المحرمات ؛ لأنه لا يجوز معارضة قول النبي صلى الله عليه وسلم بقول أحد من الناس أو فعله ؛ لأنه المبلغ عن الله سبحانه ، والواجب طاعته ، والحذر من مخالفة أمره ؛ لقول الله عز وجل : ( وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ) )الحشر/ 7(وغيرها من الآيات الآمرة بطاعة الله وطاعة رسوله ؛ ولأن بناء القبور ، واتخاذ القباب عليها من وسائل الشرك بأهلها ، فيجب سد الذرائع الموصلة للشرك " انتهى . الشيخ عبد العزيز بن باز ، الشيخ عبد الرزاق عفيفي ، الشيخ عبد الله بن قعود. " فتاوى اللجنة الدائمة " ( 9 / 83 ، 84(.
.
நபி (ஸல்) அவர்களின் கப்ரின் மீதுள்ள குவிமாடத்தை ஆதாரமாகக் கொண்டு நல்லடியார்கள் அல்லது இன்னபிற நபர்களின் கப்ருகளின் மீது குவிமாடம் கட்டுவதற்கு அனுமதியில்லை. ஏனென்றால் அந்த மக்கள் நபியவர்களின் கப்ரின் மீது குவிமாடம் கட்டியது ஹராமாகும். அவ்வாறு செய்தவர்கள் பாவிகளாவார்கள்.
அலி (ரலி) அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்த சிலையையும் அழிக்காமலும், எந்த கப்ரையும் தரைமட்டம் ஆக்காமலும் விட்டுவிடாதே என்று கூறினார்கள் என்று அபுல் ஹய்யாஜுல் அஸதி என்பவரிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்திக்கும், நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடைசெய்தார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸிற்கும் இச்செயல் முரண்படுவதால் (அவ்வாறு செய்வது பெரும்பாவத்திற்குரிய குற்றமாகும்). (இவ்விரு செய்திகளையும் இமாம் முஸ்லிம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.)
எனவே குற்றம் செய்த மக்கள் சிலருடைய செயலை அது போன்ற குற்றச் செயல்களுக்கு ஆதரமாகக் கொள்வது சரியல்ல. ஏனென்றால் மக்களில் ஒருவரது சொல்லையோ செயலையோ கொண்டு நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு முரணாக செயல்பட அனுமதியில்லை. ஏனெனில் அது (நபியவர்களின் சொல்) பரிசுத்தவானாகிய அல்லாஹ்விடமிருந்து எடுத்துச் சொல்லபட்டதாகும்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! )அல்ஹஷ்ர்: 7 ( என்ற கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சொல்லியிருப்பதாலும் இதுவல்லாமல் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மட்டும் கட்டுப்பட வேண்டும் என்று இன்னபிற வசனங்களும் இருப்பதாலும் அவர்களுக்கு கட்டுப்படுவதும் அவர்களுடைய கட்டளைக்கு முரண்படுகின்ற விசயங்களை விட்டு தவிர்ந்து கொள்வதும் கட்டாயம்.
கப்ருகளை கட்டுவதும் அவைகள் மீது குவிமாடங்களைக் கட்டுவதும் அதிலுள்ளவர்களை இறைவனுக்கு இணைவைக்கும் காரணிகளாகும். எனவே இணைவைப்பிற்குத் துணைபோகும் அனைத்து விதமான காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்வது மிக அவசியம். முற்றும்.
(வழங்கியவர்கள்: ஷேக் அப்துல் அஸீஸ் பின் பாஸ் , ஷேக் அப்துர்ரஸ்ஸாக் அஃபீஃபீ, ஷேக் அப்துல்லாஹ் பின் கவூத், பதாவா அல்லஜ்னத் அத்தாயிமா (83,84/9)
அஷ்ஷைக் அஸ்ஸாலிஹ்
قال الشيخ صالح العصيمي حفظه الله :
" إن استمرارَ هذه القبةِ على مدى ثمانيةِ قرونٍ لا يعني أنها أصبحت جائزة ، ولا يعني أن السكوتَ عنها إقرارٌ لها ، أو دليلٌ على جوازها ، بل يجبُ على ولاةِ المسلمين إزالتها ، وإعادة الوضع إلى ما كان عليه في عهدِ النبوةِ ، وإزالة القبةِ والزخارفِ والنقوشِ التي في المساجدِ ، وعلى رأسها المسجدُ النبوي ، ما لم يترتب على ذلك فتنةٌ أكبر منه ، فإن ترتبَ عليه فتنةٌ أكبر ، فلولي الأمرِ التريث مع العزمِ على استغلالِ الفرصة متى سنحت " انتهى .-" بدعِ القبورِ ، أنواعها ، وأحكامها " ( ص 253 (
800 ஆண்டுகளாக இந்த குப்பா இருப்பதினால் அது அனுமதி என்றாகி விடாது.
அதை எதிர்த்துப் பேசாமல் இருப்பது அங்கீகாரமாகவோ அனுமதி என்றோ ஆகாது. அதை அகற்றி, நபியின் காலத்தில் அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே அதை திரும்பக் கொண்டு வருவது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மீது கடமையானதாகும். உடனடியாக அகற்றினால் பெரும் குழப்பம் ஏற்படும் என்று பயந்தால் வாய்ப்பு கிடைக்கும் போது அதை அகற்றுவதில் உறுதி கொள்ள வேண்டும்.
நூல் : பிதஉல் குபூர் 253
உஸைமீன்
முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் அவர்கள் பொதுவாக கப்ரின் மேல் கட்டப்பட்டது எதுவாயினும் அதை இடிக்க வேண்டும் என மார்க்கத் தீர்ப்பு அளித்துள்ளார்.
فتاوى نور على الدرب - لابن عثيمين - (129 / 18(
فأجاب رحمه الله تعالى: البناء على القبور محرم وكل بناء بني على قبر فإنه يجب هدمه ولا يجوز إقراره والصلاة فيه لا تصح بل هي باطلة
கப்ர்களின் மீது கட்டடம் கட்டுவது ஹராமாகும். கப்ரின் மேல் கட்டப்பட்டுள்ள எதுவாயினும் அதை இடிப்பது அவசியமாகும். அதை அங்கீகரிப்பது, அங்கே தொழுவது கூடாது.
-ஃபதாவா லி இப்னி உஸைமீன் 18/129
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரின் மீது கட்டப்பட்டுள்ள குப்பா இடிக்கப்பட வேண்டும். அல்லாஹ் அதை எளிதாக்குவனாக என்று ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது உஸைமீன் அவர்கள் கூறியுள்ளார்.
அதன் லிங்க் https://www.youtube.com/watch?v=O2AcXRQEGE4
அபூஹனிபா
حاشية رد المختار على الدر المختار - (2 / 237(
وعن أبي حنيفة يكره أن يبنى عليه بناء من بيت أو قبة أو نحو ذلك لما روى جابر نهى رسول الله عن تجصيص القبور وأن يكتب عليها وأن يبنى عليها رواه مسلم وغيره
அபூஹனிபா கூறுகிறார்: கப்ரின் மீது கட்டடம், குப்பா போன்றவைகளைக் கட்டுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனெனில் நபிகள் நாயகம் கப்ர்களை பூசுவதையும், அதன் மீது எழுதுவதையும் அதன் மேல் கட்டடம் கட்டுவதையும் தடை செய்துள்ளார்கள்.
-ரத்துல் முக்தார் பாகம் 2 பக் 237
✔ஹனபீ அறிஞர்களின் பத்வா
جهود علماء الحنفية في إبطال عقائد القبورية - (3 / 1661(
اعلم أنه إلى عام (678هـ) لم تكن قبة على الحجرة النبوية التي فيها قبر النبي صلى الله عليه وسلم ؛ وإنما عملها وبناها الملك الظاهر المنصور قلاوون الصالحي في تلك السنة (678هـ) ، فعملت تلك القبة قلت : إنما فعل ذلك لأنه رأى في مصر والشام كنائس النصارى المزخرفة فقلدهم جهلاً منه بأمر النبي صلى الله عليه وسلم وسنته ؛
அறிந்து கொள்ளுங்கள் : ஹிஜ்ரி 678 வரை நபி (ஸல்) அவர்கள் கப்ர் மீது குவிமாடம் இருந்ததில்லை. இதைச் செய்தது மன்சூர் கலாவூன் என்ற மன்னர் தான். ஹிஜ்ரி 678 ல் அந்த குவிமாடத்தைக் கட்டினார். நபியின் கட்டளையை அறியாமல் எகிப்து, சிரியா நாடுகளில் கிருத்தவர்களின் அலங்கரிக்கப்பட்ட ஆலயங்களைப் பார்த்து அதைப் பின்பற்றி அமைத்து விட்டார்.
(நூல்: ஜுஹுது உலமாயில் ஹனஃபிய்யா ஃபீ இப்தாலி அகாயிதில் குபூரிய்யா 3/ 1661 )
اعلم أنه لا شك أن عمل قلاوون هذا -: مخالف قطعاً للأحاديث الصحيحة الثابتة عن رسول الله صلى الله عليه وسلم ؛ ولكن الجهل بلاء عظيم ، والغلو في المحبة والتعظيم وباء جسيم ، والتقليد للأجانب داء مهلك ؛ فنعوذ بالله من الجهل ، ومن الغلو ، ومن التقليد للأجانب" انتهى.
جهود علماء الحنفية في إبطال عقائد القبورية ( 3 / 1660 - 1662 (
அறிந்து கொள்! சந்தேகமில்லாமல் இது கலாவூன் என்பரின் செயல்தான். இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த தெளிவான சரியான ஹதீஸ்களுக்கு முரணாக உள்ளது. முட்டாள்தனம் மிகப் பெரிய சோதனையாகும். அன்பு கொள்வதிலும் மரியாதை செய்வதிலும் வரம்பு மீறுவது மிகப் பெரும் நோயாகும். (நபியல்லாமல்) அன்னியர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது நாசம் விளைவிக்கும் நோயாகும். முட்டாள்தனத்திலிருந்தும் வரம்பு மீறுவதிலிருந்தும் கண்மூடித்தனமாகப் பின்பற்றிவதிலிருந்தும் அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடுவோம். முற்றும்.
-(நூல்: ஜுஹுது உலமாயில் ஹனஃபிய்யா ஃபீ இப்தாலி அகாயிதில் குபூரிய்யா 1660 -1662/ 3 )
✔இடிக்காமல் இருப்பதற்குரிய காரணம் :
سبب عدم هدمها
فقد بَيَّن العلماء الحكم الشرعي في بناء القبة ، وأثرها البدعي واضح على أهل البدع ، فهم متعلقون بها بناءً ولوناً ، ومدحهم وتعظيمهم لها نظماً ونثراً كثير جدّاً ، ولم يبق إلا تنفيذ ذلك من ولاة الأمر ، وليس هذا من عمل العلماء .
وقد يكون المانع من هدمها درءً للفتنة ، وخشيةً من أن تحدث فوضى بين عامة الناس وجهلتهم ، وللأسف فإن هؤلاء العامة لم يصلوا إلى ما وصلوا إليه من تعظيم تلك القبَّة إلا بقيادة علماء الضلالة وأئمة البدعة ، وهؤلاء هم الذي يهيجون العامة على بلاد الحرمين الشريفين ، وعلى عقيدتها ، وعلى منهجها ، وقد ساءتهم جدّاً أفعالٌ كثيرة
وبكل حال : فالحكم الشرعي واضح بيِّن ، وعدم هدمها لا يعني أنها جائزة البناء لا هي ولا غيرها على أي قبر كان .
குவிமாடம் குறித்த மார்க்கச் சட்டத்தை உலமாக்கள் தெளிவு படுத்திவிட்டனர். பித்அத்தின் பின்விளைவு பித்அத்வாதிகளுக்கு எதிராக தெளிவாகவே உள்ளது. அவர்கள் அத்துடன் கட்டடத்தையும் நிறத்தையும் சம்மந்தப்படுத்துகின்றனர். அவர்கள் அக்

******************
بسم الله الرحمن الرحيم

المُخْتَصَرُ الجَلِيُّ فِي تَأْرِيخِ بِنَاءِ قُبَّةِ مَسْجِدِ َالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


 
الحمدُ للهِ وبعدُ ؛

فإن قبةَ مسجدِ النبي صلى اللهُ عليه وسلم لها مكانةٌ عند الصوفيةِ أربابَ القبابِ والقبورِ ، ويصورنها على أنها مرتبطةٌ ارتباطاً وثيقاً بقبرِ النبي صلى اللهُ عليه وسلم ، وكيف يكونُ ذلك – يا أمةَ محمدٍ - وهو صلى اللهُ عليه وسلم ارسل بالتوحيدِ ، وإزالةِ الشركِ ، وهدمِ القبابِ على القبورِ ، وحذر الأمةَ من سلوكِ سَننِ اليهودِ والنصارى في اتخاذِ القبورِ مساجد ؟!

‏عَنْ ‏عَائِشَةَ ‏أَنَّ ‏‏أُمَّ حَبِيبَةَ ،‏ ‏وَأُمَّ سَلَمَةَ ‏‏ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا ‏‏بِالْحَبَشَةِ ‏‏فِيهَا تَصَاوِيرُ لِرَسُولِ اللَّهِ ‏‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ‏‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏: " ‏إِنَّ أُولَئِكِ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا ، وَصَوَّرُوا فِيهِ تِلْكِ الصُّوَرَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ " .   أخرجهُ البخاري (427) ، ومسلم (528) .

‏عَنْ عَائِشَةَ ‏، ‏وَعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏‏رَضِيَ اللَّهُ عَنْهُمْ‏ ‏قَالَا : "‏ ‏لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ ‏‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏طَفِقَ ‏ ‏يَطْرَحُ ‏خَمِيصَةً ‏‏لَهُ عَلَى وَجْهِهِ ، فَإِذَا ‏‏اغْتَمَّ ‏‏كَشَفَهَا عَنْ وَجْهِهِ فَقَالَ وَهُوَ كَذَلِكَ ‏: " ‏لَعْنَةُ اللَّهِ عَلَى ‏‏الْيَهُودِ ‏ ‏وَالنَّصَارَى ،‏‏ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا .  أخرجهُ البخاري (435) ، ومسلم (531) .

والأحاديثُ في هذا البابِ كثيرةٌ جداً .

والقبةُ التي في مسجدِ النبي صلى اللهُ عليه وسلم لم تكن موجودةً في الثلاثةِ القرونِ المفضلةِ ، وإنما أُحدثت بعد ذلك ، وقد حقق الشيخُ مقبلٌ الوادعي – رحمهُ اللهُ – في بحثٍ له ضمن كتابِ " رياضِ الجنةِ " ( ص 225 – 255 ) هذه المسألةَ تحقيقاً لا مزيد عليه ، سأنقلُ منه كلامَ الذين أرخوا لبناءِ القبةِ ، وإنكارَ أهلِ العلمِ لهذه القبةِ المحدثةِ ، لكي يكونَ المؤمنُ الموحدُ على بينةٍ من أمرهِ ، وأن لا يغتر بما يتناقلهُ الصوفيةُ وغيرهم من تعظيمٍ لها .

قال الشيخُ مقبلٌ الوادعي ( ص 240 ) : " قال الشيخُ أحمدُ بنُ عبدِ الحميدِ العباسي – رحمهُ اللهُ – المتوفى في القرنِ العاشرِ الهجري في كتابهِ " عمدة الأخبارِ في مدينةِ المختارِ " ( ص 124 ) : " ومن ذلك أنهُ لما كان عام ثمانٍ وسبعين وست مئة هجرية أمر السلطانُ الملكُ المنصورُ قلاوون الصالحي والد السلطانِ الملك الناصر محمد بن قلاوون ببناءِ قبةٍ على الحجرةِ الشريفةِ ، ولم يكن قبل هذا التاريخِ عليها قبةٌ ، ولها بناءٌ مرتفعٌ ، وإنما كان حظيرٌ حول الحجرةِ الشريفةِ فوق سطحِ المسجدِ ، وكان مبنياً بالآجرِ مقدارنصفِ قامةٍ بحيث يميزُ سطحُ المسجدِ ، وكان منياً بالآجرِ فعملت هذه القبةُ الموجودةُ اليوم ... " .ا.هـ.

وقال زينُ الدينِ المراغي المتوفى سنة عشرة وثمان مئة في كتابهِ " تحقيق النصرةِ بتلخيصِ معالمِ دارِ الهجرةِ " ( ص81 ) : " اعلم أنهُ لم يكن قبل حريقِ المسجد ولا بعدهُ على الحجرةِ الشريفةِ قبةٌ ، بل كان ما حول حجرةِ النبي صلى الله عليه وسلم في السطحِ مقدار نصفِ قامةٍ مبني بالآجرِ تميز الحجرةَ الشريفةَ على بقيةِ السطحِ إلى سنةِ ثمانٍ وسبعين وست مئة في أيامِ الملكِ المنصورِ قلاوون الصالحي ... " .ا.هـ.

ونحو ما تقدم عما في " وفاءِ الوفاءِ " للسمهودي المتوفى سنة إحدى وعشر وتسع مئة (2/609) فقد ذكر نحو ما تقدم ثم قال : " رأيتُ في " الطالعِ السعيدِ الجامعِ أسماء الفضلاءِ والرواةِ بأعلى الصعيد " في ترجمةِ الكمالِ أحمدَ بنِ البرهانِ غبد القوي الربعي ناظرِقوص أنه بنى على الضريحِ النبوي هذه القبةِ المذكورةِ ، قال : " وقصد خيراً وتحصيل ثوابٍ – علق الشيخُ مقبل في الحاشيةِ : " هكذا يتخبطُ ذوو الأموالِ الذين ليس لديهم علم ، فينفقونها فيما ليس من الشرعِ في شيءٍ ، بل ربما كان مخالفاً للشرعِ ووبالاً على صاحبهِ . فانظر إلى هذا الذي قصد الخيرَ فأصبح فتنةً لكثيرٍ من القبوريين " - ، وقال بعضهم : " أساء الأدب بعلو النجارين ودق الحطب " ، قال : " وفي تلك السنةِ وقع بينه وبين بعضِ الولاةِ كلامٌ ، فوصل مرسومٌ بضربِ الكمالِ ، فضرب ، فكان من يقولُ إنه أساء الأدب يقولُ : " إن هذا مجازةً له ، وصادره الأميرُ علمُ الدين الشجاعي ، وخرب دارهُ ، وأخذ رخامها وخزائنها ... " .ا.هـ.

إنكارُ أهلِ العلمِ لهذهِ القبةِ : 
أنكر العلماءُ بناء القبةِ على قبرِ النبي صلى اللهُ عليه وسلم لأنهُ أمرٌ حرمهُ النبي صلى اللهُ عليه وسلم ، وحذر الأمةَ منه .

قال شيخُ الإسلامِ ابنُ تيميةَ في " اقتضاءِ الصراطِ المستقمِ (2/685) " : " ولهذا لما بُنيت حجرتُهُ على عهدِ التابعين - بأبي هو وأمي - صلى الله عليه وسلم ، تركوا في أعلاها كوةً إلى السماءِ ، وهي إلى الآن باقيةٌ فيها ، موضوعٌ عليها مشمعٌ على أطرافه حجارةٌ تمسكه ، وكان السقفُ بارزاً إلى السماءِ ، وبنى كذلك لما احترق المسجدُ والمنبرُ سنةَ بضعٍ وخمسين وست مئة ، وظهرت النارُ بأرضِ الحجازِ التي أضاءت لها أعناقُ الإبلِ ببصرى ، وجرت بعدها فتنةُ التترِ ببغداد وغيرها ، ثم عُمر المسجدُ والسقفُ كما كان ، وأُحدث حول الحجرةِ الحائطُ الخشب ، ثم بعد ذلك بسنين متعددةٍ بنيت القبةُ على السقفِ ، وأنكرهُ من كرهه " .ا.هـ.

وقال الصنعاني – رحمهُ اللهُ – في " تطهير الاعتقادِ " : " فإن قلت : " هذا قبرُ الرسولِ صلى اللهُ عليه وسلم قد عُمرت عليه قبةٌ عظيمةٌ انفقت فيها الأموالُ " .

قلتُ : " هذا جهلٌ عظيمٌ بحقيقةِ الحالِ فإن هذه القبةَ ليس بناؤها منهُ صلى اللهُ عليه وسلم ، ولا من أصحابهِ ، ولا من تابعيهم ، ولا من تابعِ التابعين ، ولا علماء الأمةِ وأئمة ملتهِ ، بل هذه القبةُ المعمولةُ على قبرهِ صلى اللهُ عليه وسلم من أبنيةِ بعضِ ملوكِ مصر المتأخرين ، وهو قلاوون الصالحي المعروف بالملكِ المنصورِ في سنةِ ثمانٍ وسبعين وست مئة ، ذكرهُ في تحقيقِ النصرةِ بتلخيصِ معالمِ دارِ الهجرةِ ؛ فهذه أمورٌ دولية لا دليليةٌ " .ا.هـ.

وقال الشيخُ حسينُ بنُ مهدي النعمي في كتابهِ " معارج الألبابِ بعد قولِ بعضِ المفتين محتجاً بقبةِ الرسولِ صلى اللهُ عليه وسلم على جوازِ بناءِ سائرِ القبابِ " : " فقال ذلك المفتي : " ومن المعلومِ أنه صلى اللهُ عليه وسلم له قبةٌ ، وأولياءُ المدينةِ ، وأولياءُ سائرِ البلدانِ ، وأنها تزارُ كل وقتٍ ، ويعتقدُ بها حلولُ البركةِ " .ا.هـ. كلام ذلك المفتي .

فتعقبهُ النعمي – رحمهُ اللهُ – فقال : " أقولُ : " الأمرُ كذلك فكان ماذا بعد أن حذر صلى اللهُ عليه وسلم ، وأنذر ، وبرأ جانبهُ المقدس الأطهر صلى اللهُ عليه وسلم ، فصنعتم له عين ما تقدم بالنهي عنه ، أفلا كان هذا كافياً لكم عن أن تجعلوا أيضاً مخالفتكم لأمرهِ حجة ً عليه وتقدماً بين يديهِ ، فهل أشار بسيءٍ من هذا ، أو رضيهُ ، أو لم ينه . وأما اعتقادكم حلول البركةِ فمن عندكم لا من عند اللهِ فهو ردٌ عليكم " .ا.هـ.

قال الشيخ مقبلٌ في ختام بحثه : " هذا وقد هم الإخوان – رحمهم اللهُ – في زمنِ عبدِ العزيز – رحمهُ اللهُ – عند دخولهم المدينة أن يزيلوا هذه القبةَ ، وليتهم فعلوا ، ولكنهم خشوا – رحمهم اللهُ – من قيامِ فتنةٍ من القبوريين أعظم من إزالةِ القبةِ ، فيؤدي إزالةُ المنكرِ إلى ما هو أنكرُ منهُ " .ا.هـ.

فتوى رقم ‏(‏5576‏)‏‏ :‏ 
س‏ :‏ أرجو التكرم بإعلامي عن حكم الدين في إنتاج مجسمات فنية للحرمين الشريفين بما في ذلك الكعبة المشرفة بغرض بيعها على الحجاج وغيرهم من المسلمين الذين يرغبون في اقتنائها على سبيل التذكار‏.‏

ج ‏:‏ لا يجوز إنتاج المجسمات الفنية للحرمين الشريفين ؛ لما قد تشتمل عليه من صور لمن بالحرم المكي من الطائفين والمصلين ولمن بالمسجد النبوي والقراء وغيرهم ، ولخروج صورة القبة الخضراء مع صورة المسجد النبوي مما يدفع بعض الناس إلى الاعتقاد في القباب وأهلها ، وهذا يفضي إلى الشرك الأكبر ، ولما يفضي إليه ذلك من مفاسد أخرى أعاذنا الله منها ‏.‏
وبالله التوفيق ، وصلى الله على نبينا محمد‏,‏ وآله وصحبه وسلم‏.‏

اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء
الرئيس عبد العزيز بن عبد الله بن باز
نائب رئيس اللجنة عبد الرزاق عفيفي
عضو عبد الله بن غديان
عضو عبد الله بن قعود
عمارةُ القبةِفي عام 678هـ أمر السلطان المملوكي المنصور قلاوون الصالحي بعمارة قبة فوق الحجرة النبوية الشريفة، فجاءت مربعة من أسفلها، مثمنة من أعلاها، مصنوعة من أخشاب كسيت بألواح بالرصاص. وفي الفترة من عام 755 – 762هـ جدَّد الناصر حسن بن محمد بن قلاوون ألواح الرصاص التي على القبة الشريفة. وفي عام 765هـ عمل السلطان شعبان بن حسين بعض الإصلاحات في القبة الشريفة. وفي عام 881هـ أبدل السلطان قايتباي سقف الحجرة الخشبي بقبة لطيفة، جاءت تحت القبة الكبيرة.

وفي عام 886 هـ احترقت القبة الكبيرة باحتراق المسجد النبوي الشريف ، فأعاد السلطان قايتباي بناءها بالآجر عام 892 هـ ، ثم ظهرت بعض الشقوق في أعاليها فعمل لها بعض الترميمات ، وجعلها في غاية الإحكام .

وفي عام 974هـ أصلح السلطان سليمان القانوني العثماني رصاص القبة الشريفة ووضع عليها هلالاً جديدًا.

وفي عام 1228هـ جدَّد السلطان محمود الثاني العثماني القبة الشريفة ، ودهنها باللون الأخضر ، فاشتهرت بالقبة الخضراء ، بعد أن كانت تعرف بالبيضاء أو الزرقاء أو الفيحاء .

ومنذ بداية العهد السعودي وإلى تاريخ إعداد هذه المعلومة 1419 هـ أعيد صبغ القبة باللون الأخضر عدة مرات ، مع بعض الإصلاحات والترميمات اللازمة لها .
وبهذا يتبينُ أن القبةَ محدثةٌ ولم تكن موجودةً في العصورِ الثلاثةِ المفضلةِ .

قال أبو عبدِ الإلهِ صالحٌ العصيمي في " بدعِ القبورِ . أنواعها وأحكامها " ( ص 253 ) : " رابعاً : إن استمرارَ هذه القبةِ على مدى ثمانيةِ قرونٍ لا يعني أنها أصبحت جائزة ، ولا يعني أن السكوتَ عنها إقرارٌ لها أو دليلٌ على جوازها ، بل يجبُ على ولاةِ المسلمين إزالتها ، وإعادة الوضعإلى ما كان عليه في عهدِ النبوةِ ، وإزلة القبةِ والزخارفِ والنقوشِ التي في المساجدِ ، وعلى رأسها المسجدُ النبوي ، ما لم يترتب على ذلك فتنةٌ أكبر منه ، فإن ترتبَ عليه فتنةٌ أكبر ، فلولي الأمرِ التريث مع العزمِ على استغلالِ الفرصة متى سنحت ، ومما يستأنسُ به قولهُ صلى اللهُ عليه وسلم لعائشةَ رضي اللهُ عنها : " يَا ‏عَائِشَةُ ؛‏ ‏لَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ لَأَمَرْتُ ‏‏بِالْبَيْتِ ‏‏فَهُدِمَ فَأَدْخَلْتُ فِيهِ مَا أُخْرِجَ مِنْهُ وَأَلْزَقْتُهُ بِالْأَرْضِ ، وَجَعَلْتُ لَهُ بَابَيْنِ بَابًا شَرْقِيًّا وَبَابًا غَرْبِيًّا فَبَلَغْتُ بِهِ أَسَاسَ ‏ ‏إِبْرَاهِيمَ " [ أخرجهُ البخاري (1586) ، ومسلم (1333) ] .

قال النووي - رحمهُ اللهُ - في " شرحِ مسلم " (9/94) : " ‏وَفِي هَذَا الْحَدِيث دَلِيل لِقَوَاعِد مِنْ الْأَحْكَام مِنْهَا : إِذَا تَعَارَضَتْ الْمَصَالِح أَوْ تَعَارَضَتْ مَصْلَحَة وَمَفْسَدَة وَتَعَذَّرَ الْجَمْع بَيْن فِعْل الْمَصْلَحَة وَتَرْك الْمَفْسَدَة بُدِئَ بِالْأَهَمِّ ; لِأَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَ أَنَّ نَقْضَ الْكَعْبَة وَرَدَّهَا إِلَى مَا كَانَتْ عَلَيْهِ مِنْ قَوَاعِد إِبْرَاهِيم صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَصْلَحَة , وَلَكِنْ تُعَارِضهُ مَفْسَدَة أَعْظَم مِنْهُ , وَهِيَ خَوْف فِتْنَة بَعْض مَنْ أَسْلَمَ قَرِيبًا , وَذَلِكَ لِمَا كَانُوا يَعْتَقِدُونَهُ مِنْ فَضْل الْكَعْبَة , فَيَرَوْنَ تَغْيِيرهَا عَظِيمًا , فَتَرَكَهَا صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ . ‏

‏وَمِنْهَا فِكْر وَلِي الْأَمْر فِي مَصَالِح رَعِيَّته , وَاجْتِنَابه مَا يَخَاف مِنْهُ تَوَلُّد ضَرَر عَلَيْهِمْ فِي دِينَ أَوْ دُنْيَا إِلَّا الْأُمُور الشَّرْعِيَّة كَأَخْذِ الزَّكَاة وَإِقَامَة الْحُدُود وَنَحْو ذَلِكَ . ‏

‏وَمِنْهَا : تَأَلُّف قُلُوب الرَّعِيَّة وَحُسْن حِيَاطَتهمْ وَأَلَّا يَنْفِرُوا وَلَا يَتَعَرَّض لِمَا يَخَاف تَنْفِيرهمْ بِسَبَبِهِ مَا لَمْ يَكُنْ فِيهِ تَرْك أَمْر شَرْعِيّ كَمَا سَبَقَ " .ا.هـ.

وقال العصيمي قبل ذلك : " وظلت القبةُ تحملُ اللونَ الأزرقَ حتى جاء السلطانُ محمودُ بنُ السلطانِ عبدِ الحميدِ فأمر بتجديدها فهدم أعاليها ، وأعيد بناؤها متقنا وذلك سنة 1233 هـ ، ثم أمر بصبغها فصبغت باللونِ الأخضرِ ، وكان لونها قبل أزرق لون الرصاص الذي عليها ، ثم صارت تصبغُ باللونِ نفسه كلما خسف سابقه من تأثيرِ الشمسِ " .ا.هـ.