செவ்வாய், 19 மே, 2015

உங்க கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அடிக்கடி தானாக ஆஃப் ஆகுதா?



உங்க கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் அடிக்கடி தானாக ஆஃப் ஆகிக்கிட்டிருந்தா உங்களுக்கு எரிச்சலா வரும். உடனே நாம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை சர்வீஸ் சென்டருக்கு தூக்கிட்டு போவோம். கடைக்காரர் விட்டுட்டு போங்க பார்த்து வைக்கிறேன் என்பார். காத்திருந்து வாங்குறதுக்குத் தான் நமக்கு நேரம் இருக்காதே, நாமும் சரின்னு சொல்லி கிளம்பிட்டு, மீண்டும் சாய்ங்காலமா போவோம். கம்ப்யூட்டரை துடைச்சி கிளீனா வைச்சிருப்பார். ஒண்ணுமில்ல சார், ஒரு ஐசி மட்டும் போயிடுச்சி சார், ஒரு பின்னு போயிடுச்சி சார்னு சொல்லி நமக்கிட்ட ரூ .300 ல் இருந்து ரூ .500 வரை பிடுங்கிடுவார். ஆனால், உன்மை வேற இருக்கு. அது என்னன்னு இங்க பார்ப்போம்.

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் தூசு சேர்த்துக் கொண்டே இருக்கும். கம்ப்யூட்டரில் பிராஷருக்கு மேல் ஒரு சின்ன பேன் இருப்பது போல, லேப்டாப்பில் ஹீட் சின்க் ஒன்று இருக்கும்-. லேப்டாப்பின் பக்கவாட்டில் உள்ள சிறு சிறு துளைகளில் காற்று வருமே அதுதான்.
தூசு அடைந்திருந்தால் பிராஷர் சூடாகி வரும். இதன் காரணமாக குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேலே போகும்போது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் தானே அணைந்துவிடும். இதுதான் தானே ஷட்டவுன் ஆவதற்கு காரணம். இதற்கு சர்வீஸ் சென்டர் போக தேவையில்லை. புளோயர் வைத்து வேகமாக காற்றடித்தால் வெளிவரும் தூசுகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

நம்ம லேப்டாப்பில் இவ்வளவு சூடு இருக்கிறதா என்று. இதுவே கம்ப்யூட்டர் என்றால் தூசின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும். மின்னிணைப்பு தரும். எஸ்.எம்.பி.எஸ்.சில் தூசு நிறையவே நீக்க வேண்டியதிருக்கும். (மூக்கில் துணிக்கட்டிக்கொள்வது உத்தமம்.) ஷட் டவுன் ஆவதற்கு ஏதோ வைரஸ் தான் காரணம் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக வைரஸ்கள் உங்களை ஷட் டவுன் செய்வதற்காக வைந்தவை அல்ல. என்ன .. இனிமே நீங்களே உங்க கம்ப்யூட்டரை சர்வீஸ் செய்து கொள்வீர்கள் தானே