புதன், 6 மே, 2015

‪#‎ஆப்பிளின்‬ மீது மெழுகு இவ்வ்வ்வ்வளவு மெழுகா....!?

சுபா ஆனந்தி's photo.

இதை சாப்பிடுவது நம் வீட்டுக்குழந்தை எனில் தடுப்பீர்கள் அல்லவா
எத்தனை சின்னக்குழந்தைங்க "அப்படியே சாப்புடுவேன்"ன்னு, ஆசையா,... திங்கும்?
இவ்வளவு வேக்ஸ் அவங்க வயத்துக்குள்ள போனா, என்ன ஆகும்?சற்று சிந்தியுங்கள்!
ஆப்பிள் மீது பாலிஸ் கொடுக்கும் மெழுகுகள் உடலுக்கு கெடுதல் என்று உணராமல் மக்கள் ஆப்பிள்களை ஆசையுடன் சென்று அப்படியே கடித்து சாப்பிடுவதும,; சிலர் பெயரளவில் தண்ணீரில் நனைத்துவிட்டு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பலவகை கெடுதல்கள் எற்படுவதை உணராமல் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள்
முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்ட் அருகில் பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவர் கடையில் ஏகப்பட்ட பலவித ரகங்கள் கொண்ட ஆப்பிள்கள் குவிக்கப்பட்டுள்ளது.
தினமும் அதிக அளவில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் பாலகுமார் ஒவ்வொரு முறையும் தான் கடையில் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆப்பிள் மீது பூசப்பட்டுள்ள மெழுகை கத்தியால் சுரண்டி காட்டி அதனை கெடுதலையும் உணர்த்துகிறார். மேலும் ஆப்பிள் சாப்பிடும்பொழுது இப்படி சுரண்டிவிட்டு சாப்பிடனும் என்றும,; அல்லது தோலை அகற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார்.
மக்களின் உடல் நலத்தில் மீது அக்கறை கொண்டு வியாபாரம் செய்யும் பாலகுமார் கடையில் ஆப்பிள் வாங்குவதற்கென மக்கள் கூட்டமாக காணப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களும் பாலகுமாரை பாராட்டி செல்கிறார்கள்.
இது குழந்தைகளின் உயிருக்கான விலையா?
சரவணக்குமார் வே
(கிராமத்து இளைஞன்)