சனி, 9 மே, 2015

சிந்திக்க ஒரு கணம்

நம்முடைய வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், நல்லறங்களுக்கு கூலி கிடைக்க வேண்டும் என்றாலும் நம்முடைய உள்ளத்தில் தவ்ஹீத் குடி கொண்டிருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் அவர்களுடைய அமல்கள் அழிந்து விடும்.
யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்து விட்டான்.
மூச்சு இல்லாமல் ஒரு வினாடி கூட நாம் உயிரோடு இருக்க முடியாதே அதே போல் நம்முடைய வாழ்க்கையில் தவ்ஹீத் இருக்க வேண்டும்.
மனிதன் தன்னுடைய உரிமையை அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.
நம்மை போல் மனிதனாக வாழ்ந்து மரணித்தவன் எப்படி கடவுள் ஆக முடியும்.
நபிகள் நாயகம் தன்னுடைய தோழர்களிடத்தில் தன்னை வணங்கச் சொல்லவில்லை. மாறாக ஒரு சராசரி மனிதனாகவே வாழ்ந்தார்கள்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஆண்பிள்ளை இப்ராஹீம் இறந்தபோது ஏற்பட்ட கிரகணத்தை பற்றி அந்த மக்கள் ”இந்த கிரகணம் இப்ராஹீமுடைய மரணம் ஏற்பட்டது” என்று கூறினர். நபிகள் நாயகம் உடனே கண்டித்து எந்த மனிதனுடைய இறப்புக்காக கிரகணம் ஏற்படாது இது அல்லாஹ்வுடைய ஏற்பாடு என்று துக்கத்திலும் தவ்ஹீதில் உறுதியாக இருந்தனர்.
நாம் கண்முன்னால் பார்க்கிறோம். மகான்கள் ஷெய்குகள் முரீத்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நம்மை போல் வாழ்ந்து மரணிக்கிறார்கள்.
நாம் செய்யக்கூடிய காரியங்களை கூட அவர்களால் செய்ய முடியாது.
கப்ருக்குள் அவ்லியாக்கள் மூச்சு விடுகின்றனர் என்று சொல்கிறார்கள். அத்தகையவர்கள் அந்த கப்ரை சோதனைக்குட்படுத்த தயாரா?
நம்மை விட சிறந்த அல்லாஹ் நண்பர் என்று சொல்லக்கூடிய இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் தள்ளாத வயதில் குழந்தையை கொடுக்கிறான். இது அல்லாஹ்வின் விருப்பம். அவன் நாடியவர்களுக்கு கொடுப்பான்.
அப்துல் காதர் ஜிலானியின் பெயரால் கட்டுக்கதை விளக்கம்
நபிகள் நாயகம் உஹது போரில் பல் உடைக்கப்பட்டு வேதனையில் நபியை தாக்கிய எதிரிகள் எப்படி வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்கள். உடனே அல்லாஹ் கண்டித்து நபியே உனக்கு அதிகாரத்தில் எந்த பங்கும் இல்லை என்ற வசனத்தை இறக்கினான்.
நபிகள் நாயகத்திற்கே அதிகாரம் இல்லையென்றால் அப்துல் காதர் ஜிலானிக்கு என்ன அதிகாரம், அவ்லியாக்களுக்கு என்ன அதிகாரம், மகான்களுக்கு என்ன அதிகாரம்
ஸகரிய்யா நபியால் தனக்கு ஒரு குழந்தையை உண்டாக்கி கொள்ளும் அதிகாரம் இல்லையெனும்போது முஹையதீன் அப்துல் காதிர் ஜிலானியிடம் குழந்தை வேண்டுவது எப்படி சரியாகும். முஹையதீன் அப்துல் காதிர் ஜிலானி ஸகரிய்யா நபியைவிட உயர்ந்தவரா?
950 ஆண்டுகள் பிரச்சாரம் செய்த நூஹ் நபி தன்னுடைய மகனைக் காப்பாற்றும் அதிகாரம் இல்லை எனும் போது நாகூர் ஆண்டவர் சிபாரிசு பண்ணும் அதிகாரம் எப்படி இருக்கும்.